1. எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பாஸ்வேர்டை மறந்துவிட்டால் உங்கள் கம்ப்யூட்டரை நிறுத்தி மீண்டும் Safe Mode ல் ரீ பூட் செய்திடுங்கள். (இதற்கு ரீபூட் செய்தவுடன் F8 கீயை விட்டு விட்டு தட்டுங்கள். சிறிது நேரத்தில் ஒரு மெனு கிடைக்கும். அதில் SafeMode ல் கம்ப்யூட்டரை பூட் செய்திட ஓர் ஆப்ஷன் கிடைக்கும். Safe Mode ஐ தேர்ந்தெடுத்து என்டர் தட்டி கம்ப்யூட்டர் பூட் ஆவதைப் பாருங்கள்.)
2. Log in ஸ்கிரீன் கிடைக்கும். இதில் Administation அக்கவுண்டில் நுழையவும்.
3. டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்பட்டு உங்கள் கம்ப்யூட்டர் SafeMode ல் இயங்குவது உறுதி செய்யப்படும். இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் ஜஸ்ட் ஒண் என்பதைத் தட்டவும். உங்கள் கம்ப்யூட்டர் திரையின் ரெசல்யூசன் சிறிது தெளிவற்ற தன்மையில் இருக்கும். கவலைப் பட வேண்டாம்.
4. அடுத்து Start - Control Panel திறக்கவும். பின் அதில் User Accounts என்பதில் கிளிக் செய்து திறக்கவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து அக்கவுண்ட்களும் காட்டப்படும்.
5. இப்போது எந்த அக்கவுண்ட்டிற்கு பாஸ்வேர்ட் நீக்கப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Remove the Password என்று உள்ள லிங்க்கை நீக்கவும்.
6. இறுதியாக நீங்கள் புதிய பாஸ்வேர்ட் அமைக்கப்போவதாக இருந்தால் Create a Password என்ற லிங்க்கைத் தேர்ந் தெடுக்கவும். இங்கு பாஸ்வேர்ட் அமைப்பதாக இருந்தால் அமைத்துவிட்டு பின் அதனை பத்திரமாக நினைவில் வைத்துக் கொள்ளும் இடத்தில் எழுதி வைக்கவும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.