1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Monday, June 14, 2010

தமிழ் MP3 கிடங்குகள்




தமிழ் MP3 இசை கோப்புகள் இலவசமாக இறக்கத்துக்கு இன்றைக்கு பரவலாக இணையம் எங்கும் கிடைக்கின்றது.


உதாரணத்துக்கு இங்கே சில சுட்டிகள். 
திரைப்படப்பாடல்கள் 
http://tamilvenkai.com/Tamilthaalam%20Mp3%20Database/index.php?dir=Tamil%20Mp3s/ 
http://www.tamiljukebox.com/www.rose4you.dk/index.php?dir=01.%20Tamil/ 
http://www.tamilrage.net/Mp3/database/index.php?dir= 
http://isaitamil.in/Tamilmp3/index.php?dir= 
http://www.tamilcowboy.com/mp3/ 
http://sangeethamshare.org/murthy/ 

http://123musiq.com
தமிழ் ரிங்டோன்கள் 
http://www.tamiljukebox.com/mobile/index.php?dir=Ringtones/ 
வீடியோ பாடல்கள் 
http://www.thuvi.com/songs/videofiles/tamil/ 
ஸ்லோகங்கள் 
http://www.prapatti.com/slokas/mp3/ 
கிறிஸ்தவ பாடல்கள் 
http://www.tamilbiblestudy.com/thewayofsalvation/index.php?dir= 
இஸ்லாமிய பாடல்கள் 
http://islamwap.info/ 


உலகத்தின் முதல் தத்துவஞானி சாக்ரடீஸ்


கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு 470  – கிமு 399).கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். 



இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.சாக்ரட்டீசிய முறை(Socratic method) அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டு வருகிறார்.

சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது, செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.
சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.


பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்.ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். 

அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.

இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.

அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.

நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.

சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர்.
நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.
சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். 

அதற்கு,“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.
நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…
அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.

இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.

“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.

“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.

அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.
சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.( hemlock poisoning.)
நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.
அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன் கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.

விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ் “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.

“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின! தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
நன்றி  : தகவல் உலகம்

இது உங்கள் கணிணியை பயமுறுத்தும் மென்பொருள்

நண்பர்களே,
Dr.Windows என்ற பேரை கண்டவுடன் நீங்கள் ஏதோ கணிணியை பாதுகாக்கும் ஒரு மென்பொருள் என நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. இது உங்கள் நண்பர்களை பயமுறுத்தி ஏமாற்றி விளையாட உதவும் ஒரு மென்பொருள்.எப்படி என்று பார்ப்போம்.

இந்த மென்பொருளை நிறுவியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியை பாதுகாப்பது போல் தோன்ற வைக்கும். உதாரணமாக கீழே உள்ள படங்களை பார்க்க


"Protection Enabled" ,"Dr.Windows is loaded and protecting this computer" என்று நமது கணிணியை பாதுகாப்பது போல் காட்டும். ஆனால் அது உண்மையில்லை. இந்த மென்பொருளின் வேலையே இது போல பொய்யான,விளையாட்டான அல்லது பயமுறுத்தும் செய்திகளை காட்டுவது தான்.உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்க்க


மேலே உள்ள Restart என்ற பட்டனை நீங்கள் அழுத்தினாலும் உங்கள் கணிணி Restart ஆகாது. அந்த திரை மட்டுமே Close ஆகும். இது போல் பல பொய்யான பயமுறுத்தும் செய்தியை மட்டுமே காட்டும். இதை உங்கள் கணிணியிலோ அல்லது உங்கள் நண்பர்கள் கணிணியிலோ அவர்களுக்கு தெரியாமல் நிறுவி அவர்களை பயமுறுத்தலாம்.


இதில் எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை இதே போல் செய்திகள் வரவேண்டும் என நீங்கள் அமைத்து கொள்ளலாம். நீங்களே உங்களை நண்பர்களை பயமுறுத்த ஒரு செய்தி உருவாக்கி கொள்ளலாம். உங்கள் கணிணியில் மென்பொருள் நிறுவிய இடத்திற்கு சென்று C:\Program Files\DrWindows\Dialogs என்ற Folder ல் உள்ள .cfg என்று கோப்புகளை Edit செய்து நீங்களே ஒரு செய்தி உருவாக்கி கொள்ளலாம் அல்லது நீங்களே கீழே உள்ளது போல் ஒரு கோப்பு உருவாக்கி கொள்ளலாம். உதாரணமாக

Sample Dialog Coffee.cfg:

Title: Fatal Error
Text: Low level of coffee or wrong kind of coffee detected.\nTake a break and refill your cup.
Bitmap: images\cup.ico
Wave: sounds\Windows XP Battery Low.wav
Button: Oh, yes, thanks
Button: Remind me
Button: More Info


மேலும் இதை உங்கள் நண்பர் கண்டுபுடிக்காமல் இருக்க Options வசதியை மறைத்து கொள்ளலாம். வேண்டுமென்றால் Ctrl + Right Mouse Key அழுத்தி வரவழைத்து கொள்ளலாம்.

இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


Source : Browse All 

வலைதளங்களில் உள்ள எந்தவொரு கோப்பையும் பதிவிறக்க - File2HD

நண்பர்களே,
நாம் தினமும் நிறைய வலைத்தளங்களுக்கு செல்கிறோம். அவற்றில் உங்களுக்கு பிடித்த புகைப்படங்கள்,பாடல்கள்,படங்கள் போன்ற பல கோப்புகள் இருக்கலாம்.இவைகள் அந்த அந்த வளதலங்களோடு இணைக்கப்பட்டிருக்கும். அவைகளை டவுன்லோட் செய்ய File2HD என்ற தளம் உதவுகிறது.



இந்த தளத்திற்கு சென்று தேவையான வலைத்தள முகவரியை கொடுத்து அந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படமா,பாடல்களா அல்லது பிற கோப்புகளா என தேர்வு செய்து
Get Files என்ற பட்டனை கிளிக்கினால் அந்த தளத்தில் உள்ள புகைப்படம்,பாடல்கல் அல்லது பிற கோப்புகளின் சுட்டிகள் கீழ்க்கண்ட முறையில் காட்டப்படும். உதாரணமாக எனது வலைப்பூவில் உள்ள புகைப்படங்களின் சுட்டிகள் கீழே காட்டபடுகிறது.



இந்த சுட்டிகளை கிளிக் செய்து நீங்கள் கோப்புகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.வலைத்தள சுட்டி

Source : Browse All