1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Wednesday, July 21, 2010

Thumbs.db மற்றும் FOUND.000 இவைகள் வைரஸ்களா?

Thumbs.db
WindowsXP பரவலாக அனைவரும் உபயோகபடுத்த படுகிறது.WindowsXP Folder களில் Thumbs.db என்ற ஒரு File இருப்பதை பார்த்துருக்கலாம் .இதை பார்க்கும் போது நமக்கு ஏதோ வைரஸ் என தோன்றலாம் . ஆனால் இவை வைரஸ் இல்லை. WindowsXP யின் System File ஆகும்.

நீங்கள் WindowsXP யில் Folder View Option இல் Thumbnails என்ற Option ஐ பார்த்துருக்கலாம் . புகைப்படங்களின் சிறிய வடிவத்தை காட்டும் வசதி ஆகும் .இந்த புகைப்படத்தின் சிறிய வடிவம் விரைவாக தெரிய WindowsXP ஆல் உருவாக்கப்படும் ஒரு File அவ்வளவே. இது மிகச்சிறிய அளவே இடத்தை (Size) எடுத்து கொள்ளும் . இது போன்ற Files உங்கள் கணினியில் நிறைய இருந்தால் வேண்டுமானால் நீங்கள் இதை Delete செய்து கொள்ளலாம் .

இவ்வகை Files உருவாகாமல் இருக்க கீழ்க்கண்ட வழிமுறையை கடை பிடிக்கவும் .

1. My Computer -> Tools -> Folder Options செல்லவும்
2. View Tab கிளிக் செய்து அதில் Do not cache thumbnails என்பதை தேர்வு செய்யவும் .





FOUND.000
இதுவும் WindowsXP ஆல் உருவாக்கப்படும் File ஆகும். இது WindowsXP ஆல் ScanDisk உபயோகபடுத்தும் போது உருவாகப்படும் Files ஆகும் . இவை ந்மக்கு தேவையில்லாத Files எனவே இதனை நாம் அழித்து கொள்ளலாம் . இவை WindowsXP ஆல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் . இவை உங்கள் கணினியில் தெரிந்தால் கீழ்க்கண்ட முறையில் மறைக்கலாம் .

1. My Computer -> Tools -> Folder Options செல்லவும்
2. View Tab கிளிக் செய்து அதில் Hide protected Operating System Files and Folders என்பதை தேர்வு செய்யவும் .

WobZIP - Zip,Rar கோப்புகளை Extract செய்யும் வலைத்தளம்


நாம் பலவகையான Compression மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம் .அவற்றில் Winzip,Winrar பிரபலமானது. இவைகள் முறையே zip,rar கோப்புகளை வழங்குகின்றன.இவை தவிர 7z,GZip மற்றும் iso போன்ற கோப்புகளும் உள்ளன.இந்த வகையான கோப்புகளை Extract செய்வதற்கு அந்தந்த மென்பொருள்கள் தேவை. மேலும் அவை உங்கள் கணினியில் நிறுவ பட்டிருக்கவேண்டும்.இல்லாவிடில் அவைகளை Extarct செய்து பார்க்க முடியாது.ஆனால் wobzip என்ற இந்த இணைய தளம் கோப்புகளை Extract செய்து தர உதவுகிறது.

இந்த தளம் 7z, ZIP, GZIP, BZIP2, TAR, RAR, CAB, ISO, ARJ, LZHCHM, Z, CPIO, RPM, DEB and NSIS கோப்புகளை Extract செய்து அதில் உள்ள பல கோப்புகளை தனித்தனியே பிறிது தருகிறது . இதில் TAR,RPM,DEB கோப்புகள் Linux கோப்புகள் ஆகும் .




மேலும் Password கொடுக்கப்பட்டு Compress செய்த கோப்புகளையும் Extract செய்ய உதவுகிறது. இதற்கு Password நாம் கொடுத்துவிட்டால் Extract செய்து விடும் .



இணைய தள சுட்டி WObZIP