1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Monday, July 26, 2010

ஒர்க் ஷீட்டில் வாட்டர் மார்க்

ஒர்க் ஷீட் ஒன்றில் அதன் தன்மை பொறுத்து ஏதேனும் பெயர் ஒன்றினை வாட்டர் மார்க்காக அமைக்க விரும்பினால் அதற்கு எக்ஸெல் உதவிடும். எடுத்துக் காட்டாக ஏதேனும் நிறுவன நிதி நிலை குறித்து ஒர்க் ஷீட் ஒன்று தயாரிக்கலாம்.

அதில் “Confidential” என அமைக்க விரும்பலாம். அல்லது நிறுவனப் பெயரினையே அமைக்க விரும்பலாம். இதற்கான செட்டிங்ஸ் வழிகளைப் பார்க்கலாம்.

1.முதலில் ஏதேனும் ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் WordArt என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி வேர்ட் ஆர்ட் டூல்பாரில் Insert WordArt என்ற ஐகானைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

2. கிடைக்கும் வேர்ட் ஆர்ட் காலரியில் உங்களுக்குப் பிடித்த வேர்ட் ஆர்ட்டினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் அதனை எடிட் செய்திடும் விண்டோ கிடைத்திடும். டெக்ஸ்ட்டை நீங்கள் அமைக்க விரும்பும் சொல்லாக மாற்றவும். பின் பாண்ட் அதன் அளவு ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

3. இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த சொல் வேர்ட் ஆர்ட் படிவத்தில் ஒர்க் ஷீட்டில் கிடைக்கும். அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். Format WordArt என்பதைத் தேர்ந் தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில Colors and Lines என்ற டேபில் கிளிக் செய்திடவும். இதில் Fill என்ற பகுதியில் No Fill என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Line என்ற பிரிவில் மிகவும் வெளிறிப்போன வண்ணமாக இல்லாமல் ஓரளவிற்குத் தெரிகின்ற வண்ணமாகத் தேர்ந்தெடுக்கவும்.

4. மீண்டும் வேர்ட் ஆர்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். வரும் மெனுவில் Order என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Send to Back என்பதில் கிளிக் செய்து மெனுவை மூடவும். 5. இப்போது வேர்ட் ஆர்ட்டில் உள்ள அந்த சொல்லை எந்த இடத்தில் எந்த கோணத்தில் வைத்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அதே போல் வைக்கவும். இந்த வேர்ட் ஆர்ட் சில செல்கள் மீது இடம் பெற்றிருந்தாலும் அந்த செல்களில் நீங்கள் உங்கள் தகவல்களை இடலாம். தகவல்கள் வேர்ட் ஆர்ட் மீதாக குறிப்பிட்ட செல்களில் அமையும். இப்போது ஒர்க் ஷீட்டில் நீங்கள் தேர்ந்தெடுத்து அமைத்த வாட்டர் மார்க் இடம் பெறும். இது அச்சிலும் தெரியவரும்.

எக்ஸெல் ஒர்க் ஷிட்டில் செல் ஒன்றில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளலாம். இதற்கான பார்முலாவினை அந்த செல்லுக்காய் அமைத்தால் போதும். எடுத்துக் காட்டாக A1 செல்லில் Do you have today’s Dinamalar? என டைப் செய்திடுங்கள். அதன் பின் கீழ்க்குறித்த பங்சனைப் பயன்படுத்தவும்.=IF(LEN(A1)=0,0,LEN(TRIM(A1))LEN(SUBSTITUTE(TRIM(A1),” “,””))+1) விடை 5 எனக் கிடைக்கும்.

பாடம் 11 : போட்டோசாப்




வேர்ட்

அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்

நம் வாசகர்களிடமிருந்து வரும் கேள்விகளில் பெரும்பாலும் வேர்ட் தொகுப்பு குறித்த கேள்விகளே அதிகம். பல கேள்விகள் கட்டுரையில் தர வேண்டிய அளவிற்கு தகவல்களைப் பதிலாகத் தர வேண்டியதிருக்கும். அவ்வப்போது வெளியாகும் கட்டுரைகள் இது போன்ற கேள்விகளின் அடிப்படையிலேயே தரப்படுகின்றன. சில கேள்விகள் தனிப்பட்ட முறையில் ஒரு சில குறிப்புகளில் பதில் தரப்படும் வகையில் இருக்கும். அவற்றின் தொகுப்பு இங்கு பதிலுடன் வெளியிடப்படுகின்றன.

வேர்ட் தொகுப்பு இயங்கும் விதம் சில நேரங்களில் எனக்குப் பிடிக்க வில்லை. தேவையற்ற வகையில் குறுக்கீடுகளாக இவை எனக்குத் தோன்றுகின்றன. பொதுவாக இந்த குறுக்கீடுகளை நிறுத்திட என்ன செய்யலாம்?

பலவகையான செட்டிங்குகள் Tools மெனுவில் தான் உள்ளன. Options கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் பல டேப்கள் தரப்பட்டு ஒவ்வொன்றும் ஒருவகையான செயல்பாட்டிற்கென இருக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் செயல்பாடு எந்த டேபில் இருக்கிறது என்பதனைத் தேடி அறிந்து அதனை மாற்றலாம். பெரும்பாலும் அந்த செயல்பாடுகள் குறித்த சொல் தொடரும் அதன் எதிரே சிறு கட்டமும் இருக்கும். கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். எடுத்துவிட்டால் அந்த செயல் நடைபெறாது. Customize என்னும் கட்டளை வேர்டின் மெனுக்களையும் டூல் பார்களையும் மாற்றி அமைக்க உதவும். View மெனு வேர்ட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடும்.

தேவையற்ற வகையில் புல்லட் பாய்ண்ட் அல்லது எண்களைத் தரும் வேர்டை எப்படி அது இல்லாதவாறு நிறுத்தலாம்?

வேர்ட் தரும் முக்கிய வசதி நாம் டைப் செய்திடுகையில் அது தரும் உதவிதான். பிழையான சொற்களைத் திருத்த வழி தருகிறது. நாம் டைப் செய்கையில் தானாகவே பார்மட் செய்கிறது. 1,2,3 என அடிக்கத் தொடங்கினால் புல்லட் பாய்ண்ட்டினைக் கொடுத்து பார்மட் செய்கிறது. இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நிறுத்திவிடலாம். Tools மெனு சென்று Auto Correct டேப் கிளிக் செய்து நமக்குத் தேவயற்ற சொல் திருத்தத்தினை நிறுத்தலாம். அல்லது எந்த திருத்தங்கள் நமக்கு தேவையில்லை என எண்ணுகிறோமோ அவற்றை நீக்கலாம். பின் மீண்டும் தேவை என முடிவு செய்கையில் டிக் அடையாளம் ஏற்படுத்தி செயல்படுத்தலாம். நான் அதிகம் தமிழ் டெக்ஸ்ட் டைப் செய்கிறேன். எப்போதும் சொற்களின் கீழே சிகப்பு கோடுகள் போடப்படுகின்றன. தமிழ் என்றால் ஏன் இவ்வாறு கோடுகள் வருகின்றன? இவற்றை நிறுத்துவது எப்படி?

வேர்ட் தமிழ்ச் சொற்களை ஆங்கிலம் என்று உணர்ந்து உங்கள் கீ அழுத்தத்திற்கு நேரான எழுத்துக்களையும் சொற்களையும் எடுத்துக் கொண்டு அவை தவறான ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணம் உடையவை என்ற அடிப்படையில் சிகப்பு கோட்டினைத் தருகிறது. இந்த செயல்பாட்டினை நீக்க எளிதான வழி எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை காணும் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுதான். Check spelling as you type மற்றும் Check grammar as you type என இரு வசதிகளை Edit டேபின் கீழே பார்க்கலாம். இவற்றின் முன் உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிட்டால் சிகப்பு கோடுகள் வராது.

அடிக்கடி ஆபீஸ் அசிஸ் டன்ட் என்ற பெயரில் ஒரு சிறிய உருவம் திரையில் வந்து நம் கவனத்தை ஈர்க்கிறது. சில வேளைகளில் அந்த இடத்தில் டைப் செய்கையில் எழுத் துக்களை மறைக்கிறது. இதனை எப்படி இல்லாமல் செய்வது?

Office Assistant மேலேயே ரைட் கிளிக் செய்திடுங்கள். அதன் பின் Options என்பதில் கிளிக் செய்திடுங்கள். Use Office Assistant என்ற வரியின் முன் உள்ள சிறிய பெட்டியைல் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள்.

ஸ்கிரீனின் வலது பக்கம் ஒரு பகுதி வருகிறது. இதனை டாஸ்க் பேன் என்கின்றனர். எனக்கு இது தேவையில்லை. எப்படி நிறுத்துவது?

நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களின் வலது பக்கம் இந்த டாஸ்க் பேன்கள் கிடைக்கின்றன. இதற்கான கட்டளைகளின் அடிப்படையில் அதில் ஆப்ஷன்ஸ் மாறும். இந்த டாஸ்க் பேன் தேவையில்லை என்றால் அதில் உள்ள பெருக்கல் அடையாளத்தில் கிளிக் செய்தால் மறைந்துவிடும். வியூ மெனுவில் கிடைக்கும் ஆப்ஷன்கள் மூலமாக இதனை மூடிவிடலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட டாகுமெண்ட் பைல்களைத் திறக்கையில் முந்தைய டாகுமெண்ட்களின் விண்டோ எங்கு செல்கிறது? எப்படி அனைத்தையும் திறந்து பார்ப்பது?

ஒவ்வொரு புதிய டாகுமெண்ட்டும் தனியான விண்டோவில் திறக்கப்படும். அப்போது ஏற்கனவே உள்ள பைலின் விண்டோ பின்னால் இருக்கும். விண்டோ மெனு சென்றால் பைல்களின் பெயர்களைப் பார்த்து கிளிக் செய்து பெறலாம். இவை டாஸ்க் பாரிலும் காட்டப்படும். அங்கிருந்தும் கிளிக் செய்து பெறலாம். அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண் டும் என்றால் Window மெனு சென்று Arrange All என்பதைக் கிளிக் செய்திடுங்கள். மேலும் மாற்றி மாற்றி டாகுமெண்ட்களைக் காண Alt +Tab அழுத்துங்கள்.

டூல்பாரில் பல பட்டன்கள் உள்ளன? எது எதற்கு என்று அறிய அதன் பெயரை எப்படித் தெரிந்து கொள்வது?

மவுஸைக் கொண்டு போய் அந்த டூல்பாரின் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் காட்டப்படும்.

ரூலரைப் பெற என்ன செய்திட வேண்டும்?

View மெனு சென்று Ruler என்பதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இதில் உங்கள் வியூ பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால் தான் மேலே உள்ள ரூலர் தெரியும்.

டூல் பாரில் பட்டன்களைச் சேர்க்கவும் நீக்கவும் என்ன செய்திட வேண்டும்?

1.View மெனுவில் இருந்து Toolbars தேர்ந்தெடுக்கவும்.

2. Customize என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Commands என்னும் டேபினைக் கிளிக் செய்திடவும்.
4. Categories என்னும் பிரிவில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அங்கு காட்டப்படும் Commands பிரிவில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
6. இந்தக் கட்டளையை Toolbar ஒன்றுக்கு இழுத்து வரவும். “I” பீம் ஒன்று காட்டப்படும். இது புதிய தேர்ந்தெடுத்ததனை இன்ஸ்டால் செய்திட உங்களுக்கு வழி காட்டும். புதிய பட்டனில் டெக்ஸ்ட் லேபில் மட்டுமே இருக்கும்.
7. புதிய Toolbar பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும்.
8. Default Style என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். (இப்போது பட்டன் சிறிய சதுரமாக மாறும்)
9. மீண்டும் புதிய Toolbar பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும்.
10. Change பட்டன் இமேஜைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் ஒரு பட்டன் இமேஜைத் தேர்ந்தெடுக்கவும்.
11. பின் Customize டயலாக் பாக்ஸை மூடவும்.

பட்டனை நீக்க:

View மெனுவில் இருந்து Toolbars தேர்ந்தெடுக்கவும். Customize என்பதை அடுத்து தேர்ந் தெடுக்கவும். எந்த பட்டனை நீக்க வேண்டுமோ அதனை டூல் பாரிலிருந்து இழுத்துவிடவும்.

நார்மல் டெம்ப்ளேட் என்பது என்ன?

வேர்ட் தொகுப்பைத் தொடங்கும் போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா? இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே புதிய நார்மல் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொள்ளும். இந்த நார்மல் டெம்ப்ளேட் பைல் நீங்கள் வேர்ட் தொகுப்பை இன்ஸ்டால் செய்த டைரக்டரியில் இருக்கும். இதனை நீங்கள் தெரியாமல் அழித்துவிட்டால் வேர்ட் தொகுப்பு புதிய நார்மல் டெம்ப்ளேட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும்.

நினைவூட்டும் இணைய தளம்



பரபரப்பான வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்ச்சிகளை நாம் மறந்து போகிறோம். அன்பானவர்களின் பிறந்த நாள், உற்ற தோழியின் திருமணம், வாங்கிய கடனுக்கு வங்கியில் பணம் செலுத்தும் நாள், கொடுத்த கடனுக்கு வட்டி வசூலிக்கும் நாள், வீட்டிற்கான வரிகள் செலுத்தும் நாள் என எத்தனையோ நாட்களை மறந்துவிட்டு பின் வருத்தப்படுகிறோம்.

உடன் இருப்பவர்களும் நமக்கு அதனை நினைவு படுத்த மறந்துவிடுகின்றனர். ஆனால் நாம் அன்றாடம் உறவாடும் கம்ப்யூட்டரும் இணையமும் இந்த பணியை நமக்குச் சரியாக மேற்கொண்டு நம்மை பல இக்கட்டுகளிலிருந்து பாதுகாக்கின்றன. இணையத்தில் உள்ள ஒரு தளம் நினைவுபடுத்தும் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.

இதன் பணிகளைப் பார்த்தால் நிச்சயம் இதனைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் முடிவு செய்வீர்கள். இந்த சேவை இலவசமாகக் கிடைக்கிறது என்பது இன்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். http://www.remime.com/

அங்கு தரப்பட்டிருக்கும் எழுத்துக்கள் அடங்கிய சொல்லை டைப் செய்து Create My Account என்ற இடத்தில் என்டர் தட்டவும். பின் ஓரிரு நிமிடங்களில் நீங்கள் கொடுத்த இமெயில் அக்கவுண்ட்டிற்கு தகவல் அனுப்பப்பட்டு உங்கள் பதிவு ஏற்றுக் கொள்ளப்படும். இனி மீண்டும் அந்த தளத்திற்குச் சென்று உள்ளே செல்லவும். உள்ளே நுழைந்தவுடன் அங்கு மூன்று டேப்கள் இருப்பதனைக் காணலாம். முதலாவதாக Home என்ற பிரிவு. இதில் பிறந்தநாள்கள், முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பதிந்து கொள்ள வசதி தரப்பட்டிருக்கும்.

இவற்றின் கீழேயே அடுத்து வர இருக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல் மற்றும் உங்கள் அக்கவுண்ட்டிற்கான லிங்க்குகளைக் காணலாம். தானாகவே நீங்கள் அடுத்து வர இருக்கும் நிகழ்ச்சிகள் (Upcoming Events) பட்டியலில் இருப்பீர்கள். My Account என்ற பகுதியில் கிளிக் செய்தால் நீங்கள் ஏற்கனவே கொடுத்த தகவல்களை எடிட் செய்து மாற்றலாம். Birthdays என்ற பிரிவு மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.

View All Birthdays, Add New Birthday, Import and Get Friend’s Birthday இதில் எனத் தரப்பட்டிருக்கும். Get Friend’s Birthday என்ற பிரிவின் மூலம் உங்கள் நண்பருக்கு இமெயில் மூலம் செய்தி அனுப்பி அவரின் பிறந்த நாளைக் காணலாம். Events என்ற பிரிவில் முக்கிய நிகழ்ச்சிகளைப் பதிந்து வைத்து அறிந்து கொள்ளலாம். புதிய நிகழ்ச்சிகளையும் சேர்க்கலாம். புதிய நிகழ்ச்சிகளைச் சேர்க்கையில் அது குறித்து ஒரு நினைவூட்டல் வேண்டுமா அல்லது அடுத்தடுத்து வேண்டுமா என்று குறிப்பிடலாம். இவ்வாறு தர வேண்டிய தகவல்களைத் தந்துவிட்டால் இந்த தளம் தானாக உங்களுக்கு அவ்வப்போது நீங்கள் செட் செய்ததற்கு ஏற்ப நினைவூட்டும் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கும்.
என்பதே அந்த தளத்தின் முகவரி. இதில் லாக் ஆன் செய்து Sign Me Up என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் உங்கள் இமெயில் முகவரியை டைப் செய்து பாஸ்வேர்ட் ஒன்று உருவாக்கவும். முக்கியமாக எந்த நேர வளாகத்தில் (time zone) நீங்கள் உள்ளீர்கள் என்பதனைக் குறிப்பிடுவது முக்கியம்.