1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Thursday, September 23, 2010

பயனுள்ள இலவச வீடியோ கன்வெர்டர்

நாம் இணையத்தில் தரவிறக்கம் செய்தது, அல்லது நண்பர்கள் மூலமாக கிடைத்தது என பலத்தரப்பட்ட வீடியோ கோப்புகளை நமது கணினியில் வைத்திருப்போம். ஒரு சில சமயங்களில், இது போன்ற ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மற்றொரு கோப்பு வடிவிற்கு மாற்ற வேண்டிவரும் (மொபைல் போன்களுக்கும்.. வேறு சில பயன்பாட்டிற்கும்)
இது போன்ற பயன்பாட்டிற்கு நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது Any Video Converter எனும் இலவச மென்பொருள் கருவி. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.. ஓட்டு போட்டுட்டு தரவிறக்கி கொள்ளுங்கள்) 
இந்த மென்பொருள் கருவியில் நாம் பயன்படுத்தக் கூடிய கோப்பு வகைகள்:- 

Input formats: avi, asf, mov, rm, rmvb, flv, mkv, mpg, 3gp, m4v, vob, YouTube videos and more

Output formats: avi, mp4, wmv, swf, flv, mkv, MPEG-1 and MPEG-2, mpg (PAL or NTSC), mp3, wma, ogg, aac, wave, m4a

இதை உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, Spyware Terminator ஐ நிறுவ வேண்டுமா என்று கேட்கும் திரை வரும் பொழுது, Do not install Spyware Terminator தேர்வு செய்து, உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். 
இதனை இயக்கி, Add Video பொத்தானை அழுத்தி தேவையான வீடியோவை உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 
பிறகு வலது புறமுள்ள Profile லிஸ்டில் க்ளிக் செய்து தேவையான கோப்பு வடிவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Preview வலது புற பேனில் தோன்றும், இதை பார்த்து, சரியாக உள்ளதெனில், மேலே உள்ள Convert  பொத்தானை அழுத்தினால் போதுமானது. 
நாம் தேர்வு செய்திருந்த கோப்பு வடிவிற்கு கன்வெர்ட் செய்து சேமிக்கப்படும். இதிலுள்ள மாற்றொரு சிறப்பம்சம், யூ டியுப் வீடியோக்களை தரவிறக்கி கன்வெர்ட் செய்வதுதான். இதற்கு, மேலே உள்ள YouTube பொத்தானை அழுத்தி Youtube video விற்கான url ஐ கொடுத்து OK பட்டனை சொடுக்கவும். 
இப்பொழுது லிஸ்டில் வந்துள்ள YouTube video வை வலது க்ளிக் செய்து,
தரவிறக்கம் செய்து கொண்டு பிறகு, கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 
இதன் தரமும் வேகமும் மற்ற கருவிகளைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. 

கணனி சம்பந்தமான இலவச டுட்டோரியல் தளம்




சிறு வயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது.
எனவே அவரவருக்கு எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறதோ அதனை மட்டும் தேடிப் பிடித்து கற்றுக் கொள்கிறோம். இணைய தளம் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். டிஜிட்டல் போட்டோ எடுத்து அவற்றை கம்ப்யூட்டரில் இணைக்க முயற்சிக்கிறீர்கள். எடுத்த போட்டோக்களை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். இதற்கெல்லாம் உதவிக் குறிப்புகளை நாடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கென உள்ள இந்த தளம் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். 

இத்தகைய உதவியினை வளமாக நல்ல டுட்டோரியல் பாடங்களாகப் பதிந்து வைத்து இந்த இணையதளம் தருகிறது. இதன் முகவரிhttp://www.goodtutorials.com/ இந்த செய்தியை எழுதும் போது இந்த தளத்தில் 25,049 டுடோரியல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 பிரிவுகளாக இந்த வழிகாட்டும் தளங்கள் உள்ளன. அவை : CSS, Flash, HTML, Illustrator, Java, JavaScript, Maya, Photography, Photoshop, PHP, Ruby, Ruby on Rails and 3ds Max   என பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் புதியதாக பதியப்பட்ட 15 உதவித் தளங்களின் பட்டியல் காணப்படுகிறது. 

நான் பார்த்த போது போட்டோ ஷாப்பிற்கான இன்டர்பேஸ் குறித்த டுடோரியல் காணப்பட்டது. இதனைத் திறந்து பார்க்கையில் போட்டோ ஷாப் குறித்து பல செய்திகள் கிடைத்தன. இந்த உதவிக் கட்டுரைகளின் கீழாக மேலும் பல உதவி தரும் தளங்களுக்கான லிங்க்குகள் உள்ளன. அவற்றையும் கிளிக் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதன் கீழ் சில பிரிவுகளும் உண்டு. அவை: Rating, Clicks, Comments, Save, Share and Report இந்த தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். 

எந்த கட்டுரையை சேவ் செய்திட வேண்டுமென்றால் சேவ் டேபைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். அப்போது இன்னொரு லிங்க் தரப்பட்டு அங்கு சேவ் செய்யப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இந்த கட்டுரைகள் சேவ் செய்யப்பட்டு இருக்கும். உங்கள் அக்கவுண்ட்டை ஏற்படுத்த இந்த தளத்தில் பதிவு செய்வதும் எளிது. 

நிச்சயமாய் இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இன்றே இந்த தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம் உங்கள் பேவரிட் தளப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.