1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Monday, July 5, 2010

மென்பொருள் ரகசியங்கள்



உங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பல சாப்ட்வேர் தொகுப்புகளில், பல சொல்லப்படாத சுருக்கு வழிகள் தரப்பட்டுள்ளன. அது பிரவுசராக இருந்தாலும், அப்ளிகேஷன் தொகுப்புகளாக இருந்தாலும், அவற்றில் நாம் அறியாத, அடிக்கடி பயன்படுத்தாத, பல வழிகள் மறைந்துள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவது நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அதிகமாக்கும்.

விண்டோஸ் கீ: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் அதி வேகத்தில் இயங்கினாலும், சில கீகளைப் பயன்படுத்தி, இன்னும் அதனைக் கூடுதல் வேகத்தில் இயக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பயன்படுத்தி, செயல்பாடுகளை மேற்கொண்டு பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.
சிஸ்டம் தகவல்கள் அறிய: உங்களுடைய சிஸ்டம் குறித்த தகவல்களை உடனே அறிய, 
Windows மற்றும்Pause கீகளை அழுத்துங்கள். உடன் சிஸ்டம் குறித்த சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்.

டாஸ்க்பார் அப்ளிகேஷன்ஸ்: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும்  அப்ளி கேஷன் தொகுப்புகளை, டாஸ்க்பாரில் போட்டு வைக்கவும். இதனால் ஒரு மவுஸ் கிளிக்கிலேயே, அப்ளிகேஷன்களை இயக்க நிலையில் பெறலாம். இதனால் பல மவுஸ் கிளிக்குகள் மிச்சமாகும். டாஸ்க் பாரில் போட்டு வைத்த பின், விண்டோஸ் கீயுடன் ஏதேனும் ஒரு எண்ணுக்கான கீயினை இணைத்து அழுத்தவும். இப்போது, டாஸ்க் பாரில் அந்த எண்ணுக்குரிய இடத்தில் எந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அந்த புரோகிராம் இயக்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.  ஒரு புரஜக்டரை இணைக்கும் போதோ, அல்லது உங்களுடைய லேப்டாப் கம்ப்யூட்டரை, வெளியே உள்ள ஒரு டிஸ்பிளே சாதனத்துடன் இணைத்துக் காட்டவிரும்பும்போதோ, விண்டோஸ் கீயுடன் ப்பி  (Windows+P) கீகளை அழுத்தவும். 
ஏதேனும் ஒரு அப்ளிகேஷனை இயக்கநிலைக்குக் கொண்டு வர, விண்டோஸ் கீ அழுத்தி, அதில் உள்ள ரன் பாக்ஸில், அதற்கான கட்டளைப் (பெரும்பாலும் அதன் சுருக்கப்பெயர்) பெயரைத் தந்தால் போதும்.


ரன் டயலாக் பாக்ஸைப் பெற விண்டோஸ் + ஆர் கீயினை அழுத்தவும்.
தானாக அப்டேட்: விண்டோஸ் அப்டேட் வசதியைப் பயன்படுத்துகையில், அது உங்கள் கம்ப்யூட்டரை உடனடியாக ரீஸ்டார்ட் செய்திடக் கட்டாயப்படுத்தும். அப்போதுதான், அப்டேட் செய்யப்பட்ட வசதிகள், உங்களுக்குக் கிடைக்கும். அப்போது, நீங்கள் சேவ் செய்யப்படாத வேலை ஏதேனும் மேற்கொண்டிருந் தால், அது வீணாகும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, கண்ட்ரோல் பேனலில்,   
Windows Update  திறக்கவும். இதில் Change Settings என்பதில் கிளிக் செய்திடவும். 

கிடைக்கும் கீழ் விரி மெனுவில்  Download updates but let me choose whether to install them  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டருக்குச் செல்ல, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, பின் அந்த போல்டர் இருக்கும் டைரக்டரி சென்று,  அந்த போல்டரை மவுஸால் தேடி, கிளிக் செய்து பெறுகிறீர்களா? அதற்குப் பதிலாக, விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக அந்த போல்டரைத் திறந்த நிலையில் இருந்தால், நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? அப்படியும் செட் செய்திடலாம். உங்களுடைய டாஸ்க் பாரில் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்பதில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் என்பதனத் தேர்ந்தெ டுக்கவும். இதில் உள்ள டார்கெட் பீல்டில்,  ‘%windir%\explorer.exe’என்ற இடத்தில் ஒரு ஸ்பேஸ் விட்டு பைலுக்கான பாத் அமைக்கவும். அது ‘%windir%\explorer.exe C:\Users\yourusername\  என அமையலாம். இவ்வாறு அமைத்த பின்னர், விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக நீங்கள் விரும்பும் போல்டரைத் திறந்து,நீங்கள் வேலை செய்திடத் தயாராகக் காட்டும்.


போல்டர் வியூ: எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப் படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து  Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின்  Folder and search options  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.   இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (ஈஞுஞூச்தடூt) போல்டராக அமைந்துவிடும்.
டச்பேட்: இது குறித்து சென்ற இதழில் குறிப்புகள் தரப்பட்டன. லேப்டாப் பயன்படுத்து பவர்கள், தாங்கள் கீ போர்டில் வேலை செய்திடுகையில், டச் பேடில் விரல்களோ, உள்ளங்கையோ பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறித் தொந்தரவு தரும். இதனை நீக்க டச் பிரீஸ்  (Touch Freeze)  என்ற சிறிய புரேகிர õமினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.


யு.எஸ்.பி. கார்ட் விலக்கல்: யு.எஸ்.பி. போர்ட்டில், பல சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறோம். பிளாஷ் ட்ரைவ், டேட்டா கார்ட், கேமரா போன்ற அனைத்தும் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் இன்று வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவற்றை போர்ட்டிலிருந்து, மீள விலக்கும்போது அதற்கான Safely Remove Hardwareஐகானைக் கிளிக் செய்து மெசேஜ் கிடைத்த பின்னரே எடுக்க வேண்டியுள்ளது. பொறுமை இன்றி, எடுக்கும்போது, சிஸ்டம் அந்த சாதனத்தின் ட்ரைவில் ஏதேனும் எழுதிக் கொண்டிருந்தால், பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, விரைவில் ட்ரைவ் மற்றும் பிற சாதனங்களை விலக்க ஒரு தீர்வு உள்ளது. 

இதற்கான செட்டிங்ஸில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.  விண்டோஸ் எக்ஸ்புளோரரில் மெமரி கார்டிற்கான ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் (Properties) ) தேர்ந்தெடுக்கவும். இப்போது காட்டப்படும் விண்டோவில் ஹார்ட்வேர்  (Hardware)  என்னும் டேப்பில் கிளிக் செய்து   இங்கு  மெமரி கார்ட் ரீடரைத் தேர்ந்தெடுக்கவும். இங்கும் உள்ள மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties)தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் பாலிசீஸ் (Policies)டேப்பில் கிளிக் செய்திடவும். பாலிசீஸ் காட்டப்படும் முன் சேஞ்ச் செட்டிங்ஸ்  Change Settings) பட்டனைக் கிளிக் செய்திட வேண்டி இருக்கலாம். இனி உள்ள விண்டோவில்  Download updates but let me choose whether to install themஎன்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும். இனி Safely Remove Hardwareஉங்களுக்குத் தேவை இருக்காது.


மீண்டும் குயிக் லாஞ்ச் பார்: விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் அறிமுகப் படுத்தினாலும், பழைய சில பயனுள்ள விஷயங்களை விட்டுவிட்டது. அதில் ஒன்று குயிக் லாஞ்ச் பார். அதிர்ஷ்டவசமாக, இதனை மீண்டும் இதில் கொண்டு வருவது மிக எளிதான ஒரு வழியாக உள்ளது. டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில்  Lock the taskbar என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின் மீண்டும் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில்  New toolbarஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் %appdata%\Microsoft\Internet Explorer\Quick Launchஎன்ற பைல் பாத் என்பதற்கான இடத்தில்  டைப் செய்திடவும். பின்னர் இதில் வலது பக்கம் உள்ள அம்புக் குறி பட்டனில் கிளிக் செய்து, அந்த போல்டருக்குச் செல்லவும்.குயிக் லாஞ்ச் மீண்டும் செயல்பாட்டிற்குக் கிடைக்கும்.
""கவனத்திற்கு''  இணையத்தில்  
ஸ்பேஸ் பார்   
(Spacebar) – இணைய தளத்தில் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம்
ஷிப்ட் + ஸ்பேஸ் பார் 
(ShiftSpacebar)– இணைய தளத்தில் ஒரு பக்கம் மேலாகச் செல்லலாம்.
கண்ட்ரோல் + எப்  
(Ctrl+F)  : சொல்ல் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க பயன்படும் விண்டோ திறக்கப்படும். 
ஆல்ட்+என் 
(AltN) இணைய தளத்தில் கண்ட்ரோல் + எப் அழுத்தி சொல் தேடுகையில் அந்த சொல்லின் அடுத்த நிகழ்வினைக் காண 
கண்ட்ரோல்+டி 
(Ctrl+D) : புக்மார்க் பக்கத்திற்குச் செல்லலாம்
கண்ட்ரோல் + ட்டி 
(Ctrl+T) : புதிய டேப் திறக்கப்படும்
கண்ட்ரோல் + கே 
(Ctrl+K): சர்ச் பாக்ஸுக்குச் செல்ல
கண்ட்ரோல் +எல்  
(Ctrl+L): அட்ரஸ் பாக்ஸுக்குக் கர்சரைக் கொண்டு செல்ல
கண்ட்ரோல் + 
(Ctrl+ +) : டெக்ஸ்ட் அளவை அதிகரிக்க
கண்ட்ரோல் + – 
(Ctrl+ –): டெக்ஸ்ட் அளவினைக் குறைக்க
கண்ட்ரோல் + டபிள்யூ 
(Ctrl+ W)டேபினை மூட G¨ 5 (F5)  : பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மீண்டும் லோட் ஆகும்.
ஆல்ட் + ஹோம் 
(AltHome): ஹோம் பேஜ் செல்லலாம். 
""கவனத்திற்கு''
குயிக் லாஞ்ச் 
(Quick Launch) டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன் படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.

சிங்கையில் மாணவர்களும், கல்வியும்....

சிங்கையில் கல்வி, மாணவர்களுக்கு அனாவசிய மனஅழுத்தத்தைக் கொடுப்பதில்லை. மனப்பாடம் செய்யத் தேவை இல்லாத பாட திட்டம். என்ன ....... விஷயத்தை நன்றாகப் புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ‘டப்பா’ அடித்து ஓட்ட முடியாது.
வீட்டுப் பாடங்கள் நம்மூர் அளவுக்கு இல்லை. ஆசிரியர்கள் மிரட்டுவதில்லை. மாணவர்கள் ஜாலியாய் படிக்கிறார்கள். பார்க்கப் பொறாமையாய் இருக்கிறது.

பள்ளியும் அரை நாள் மட்டுமே! பெற்றோர்களாக துணைபாட வகுப்புகளை இழுத்துவிட்டாலே தவிர, அதிக மன உளைச்சல் இல்லை.

என்மொழி, உன்மொழி என்று அடித்துக் கொள்ளாமல், அவரவர் தாய்மொழியைக் கற்றுக் கொள்ளும் படி மாணவர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். சீனம், மலாய், தமிழ் மூன்றிற்குமே இங்கு சம மதிப்பு . குடும்பத்தாருடன் தாய் மொழியில் பேசுங்கள் என்று மாணவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

பாடம் மட்டுமே இல்லாமல் மற்ற கலைகளிலும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்திய நடனம் , சீன நடனம், ஹார்மோனிகா, அங்கலாங் போன்ற பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொடுத்து , மேற்படிப்பின் போது இவற்றில் மாணவர்கள் ஆற்றிய பங்கையும் கவனத்தில் கொள்கிறார்கள்.

தமிழர்கள், தமிழில் பேசாமல் இருப்பது குற்றம், என மனதில் பதிய வைக்கிறார்கள்.பேச்சுத் தமிழில் இருந்தாலும் பரவாயில்லை, எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு கதை, கட்டுரை போட்டிகள் வைத்து பரிசு கொடுக்கிறார்கள். வானொலியிலும் , தொ.காவிலும் நல்ல தமிழ் பேசத் தெரிந்தால் மட்டுமே வேலை! கொஞ்சு தமிழெல்லாம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

நிறைய புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை சிறுவயதிலேயே ஏற்படுத்துகிறார்கள்.இத்தகு ஆவலைத் தூண்டுவதில் நூலகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நூலகர்கள் நம்மை அனாவசியக் கேள்விகள் கேட்காமல், தனியாய் அமர்ந்திருக்கிறார்கள். நாமும் அவர்களை தொந்தரவு செய்யாமல் புத்தகங்களை எடுக்கவும், திருப்பவும் முடிகிறது. பல நல்ல நூல்களை இங்கே தொகுத்து வைத்திருக்கிறார்கள்.
நூலகத்தின் சூழலும், அமைதியாய், படிக்காவிட்டால் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் பாடச் சுமை அதிகம் உள்ளதாய் இங்கேயும் சிலர் குரல் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் நம்மூருக்கு இழுத்து வந்து ஒரு கல்வியாண்டு படிக்கச் செய்து தண்டிக்க வேண்டும், என்ற ஆவல் ஏற்படுகிறது.

தமிழ் தட்டச்சு தெரியாதா ? கவலை வேண்டாம்…

நண்பர்களே,
இணைய தளங்களில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது என்பது எளிது, ஆனால் தமிழில் தட்டச்சு செய்வது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இதற்காக கூகுள் நிறுவனம் ஒரு மென் பொருளை உருவாக்கி உள்ளது. இதில் நீங்கள் தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் போதும்.
எடுத்துக்காட்டாக ( amma = அம்மா ),(naan = நான் ),( pallikkoodam = பள்ளிக்கூடம் )
இவ்வாறு நம்மொழி வாயிலாக மொழிமாற்றம் செய்யலாம்.அந்த மென் பொருள் உங்களுக்கு அதை தமிழாக்கம் செய்து தந்துவிடும். இதை எப்படி உபயோகிப்பது என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.
செய்முறை-1
செய்முறை-2செய்முறை-3
செய்முறை-4
செய்முறை-5

செய்முறை-6
செய்முறை-7
செய்முறை-8
செய்முறை-9
இவ்வாறு தட்டச்சு செய்ததை சேமித்து உங்கள் இணைய தளங்கலிலும், மின்னஞ்சல் மற்றும் கணினி இணையம் அனைத்திலும் பதிவேற்றம் செய்யலாம்.