1
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)
Tuesday, June 29, 2010
உபுண்டு Grub Bootloader ஐ மறுபடியும் நிறுவ
உங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot
இயங்குதளங்களில், விண்டோஸ் செயலிழந்தால், விண்டோசை மறுபடியும் இன்ஸ்டால் செய்வோம்.
இப்படி இன்ஸ்டால் செய்யும்பொழுது உபுண்டு வின் Grub BootLoader காணாமல் போய்விடும். இதனால் உபுண்டுவை இயக்க முடியாமல் போய் விடும்.
உபுண்டுவை மறுபடியும் இன்ஸ்டால் செய்யாமல், கிரப் பூட் லோடரை மறுபடியும் நிறுவ என்ன செய்யலாம்?
உபுண்டு லைவ் சிடியில் உங்கள் கணினியை பூட் செய்திடுங்கள்.
உபுண்டு பூட் ஆன பிறகு, Terminal க்கு சென்று,
sudo grub
என்ற கட்டளையை கொடுத்து என்டர் கொடுங்கள். இது grub prompt இற்கு கொண்டு செல்லும்.
>
இந்த பிராம்ப்டில் கீழ்கண்ட மூன்று கட்டளைகளை கொடுக்கவும்.
( (hd0,0) என்பது உங்கள் கணினியின் முதல் டிரைவின் முதல் பார்டீஷனை குறிக்கிறது. உங்கள் கணினியின் அமைப்பிற்கு ஏற்ப இது மாறுபடும்)
> root (hd0,0)
> setup (hd0)
> exit
சிடியை வெளியே எடுத்து விட்டு கணினியை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது.
Grub Boot Loader திரும்ப கிடைத்துவிடும்.
Subscribe to:
Posts (Atom)