1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Saturday, June 12, 2010

Skip Screen - நெருப்புநரியில் டவுன்லோட் தளங்களில் காத்திருப்பதை தவிர்க்க

இணையத்தில் கோப்புகளை பதிவேற்ற ,இறக்க RapidShare, Megaupload, Mediafire, zShare போன்ற பல தளங்கள் உள்ளன . இவற்றில் இருந்து நாம் பல வகையான கோப்புகளை தினமும் டவுன்லோட் செய்கிறோம். இவைகளில் இருந்து கோப்புகளை டவுன்லோட் செய்யும் பொது சில வினாடிகள் காத்திருந்து பின் தான் டவுன்லோட் செய்ய முடியும் .


இதனால் அந்த விநாடி வரை காத்திருந்து பின் தான் டவுன்லோட் சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்ய வேண்டும் . இது சற்று சலிப்பை உண்டு பண்ணும் . இதை தவிர்க்க நெருப்பு நரியில் skipscreen என்ற add-on உதவுகிறது.

இதை நெருப்பு நரியில் நிறுவிய பின் உங்கள் டவுன்லோட் சுட்டியை நெருப்புநரியில் கொடுத்தால் போதும் காத்திருந்து கிளிக் செய்ய வேண்டியது இல்லை. இந்த skipscreen என்ற add-on அனைத்தையும் பார்த்து கொள்ளும். டவுன்லோட் சுட்டி கொடுத்தபின் கீழே உள்ளது போல் விண்டோ தோன்றும்.



பின் நாம் வேறு தளங்களை பார்க்க சென்றுவிடலாம். நேரம் முடிந்த பின் கோப்புகள் டவுன்லோட் பண்ண நமக்கு கிடைத்து விடும் . இந்த நெருப்பு நரி add-on பயன்படும் தளங்கள்

# Rapidshare (don't click! it's automatic!)
# Megaupload (captcha action coming soon!)
# Mediafire
# Uploaded.to
# zShare (now with a "listen-first" option!)
# Sharebee
# DepositFiles
# Sendspace
# Divshare
# Linkbucks
# Link-protector

Source : Browse All

விசைப்பலகையை உளவு பார்க்கும் Softபொருள்

நண்பர்களே,
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நாம் நமது கணிணியை விட்டு செல்லும் போது பிறர் பயன்படுத்தலாம்.அப்படி நாம் இல்லாதபோது பிறர் என்ன செய்தார்கள்,என்னென்ன டைப் செய்தார்கள் என்பதை இந்த Softபொருள் மூலம் அறியலாம்.

இந்த Softபொருள் இயங்குவது உங்களை தவிர யாருக்கும் தெரியாமல் பின்புலத்தில் இயங்க வைக்கலாம். இது இயங்கும் போது கணிணியை பயன்படுத்துபவர்களுக்கு இயங்குவது தெரியாது.அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஒரு txt கோப்பில் நமக்கு தருகிறது. கீழே உள்ள படத்தை பார்க்க


Start என்ற பட்டனை தட்டினால் இந்த மென்பொருள் இயங்க ஆரம்பித்து விடும். பின் நீங்கள் கணிணியை விட்டு செல்லும் போது Hide என்ற பட்டனை தட்டினால் பின்புலத்தில் இயங்க ஆரம்பித்து விடும்.உங்களை தவிர யாருக்கும் இயங்குவது தெரியாது. மீண்டும் கொண்டுவர Ctrl+Alt+Shift+(F12/F11/F10/F9 - இவற்றில் ஏதாவது ஒன்று) அழுத்தவும்.

உதாரணமாக நீங்கள் சென்ற பின் உங்கள் கணிணியில் ஒருவர் Notepad திறந்து டைப் செய்கிறார் என வைத்துகொள்வோம்.அவர் என்ன டைப் செய்தார் என்பது அனைத்தும் நமக்கு தெரிந்து விடும்.கீழே உள்ள பெரிதாக்கி படத்தை பார்க்க



எங்கே நமக்கு டைப் செய்த அனைத்தும் txt கோப்பாக Save ஆக வேண்டும் என்பதை நாம் Options சென்று கூறலாம்.கீழே உள்ள படத்தை பார்க்க

பிடித்த வீடியோவை Animated GIF ஆக மாற்ற

GIF இமேஜ்களை பற்றி நாம் அறிந்திருப்போம்.நமக்கு பிடித்த வீடியோ கோப்புகளை GIF இமேஜ்களாக மாற்றி வைத்து கொள்ள உதவும் Softபொருள் பற்றி பாப்போம்.உதாரணமாக கீழே உள்ள The Dark Knight படத்தில் இருந்து உருவான Joker GIF படத்தை பாருங்கள்.



மேலே உள்ள GIF படத்தை போல் நாமும் உருவாக்கி கொள்ளலாம்.இதற்கு MovieToAniGIF என்ற மென்பொருள் உதவுகிறது.இந்த மென்பொருளை நிறுவிய பின் "File" -> "Open" மூலம் உங்களுக்கு பிடித்த வீடியோவை திறந்து கொள்ளுங்கள்.



பின் கீழே உள்ள { , } மற்றும் Track Bar உதவி கொண்டு ஆரம்பம் மற்றும் முடிவு பகுதிகளை தேர்வு செய்து பின் "Export" -> "Export to animated GIF..." மூலம் GIF படமாக உருவாக்கி கொள்ளலாம்.

இந்த Softபொருளை தரவிறக்க சுட்டி


Source : Browse All

சில பயனுள்ள விண்டோஸ் ரன் கட்டளைகள்



விண்டோஸில் Run என்னும் வசதியை பற்றி பலரும் அறிந்திருப்போம்.எந்த ஒரு அப்ளிகேஸனையும் விரைவில் திறக்க பயன்படுகிறது. உதாரணமாக கால்குலேட்டர் வேண்டுமானால் Run விண்டோ திறந்து Calc என டைப் செய்து Enter தட்டினால் போதும்.

இது போல பல கட்டளைகள் உள்ளன.அவற்றில் சிலவற்றை Pdf கோப்பாக கீழே தந்துள்ளேன்.அவற்றில் சில

அப்ளிகேஷன்ஸ் கட்டளைகள்
Add/Remove Programs appwiz.cpl
Administrative Toolscontrol admintools
Adobe Acrobat (if installed)acrobat
Adobe ImageReadyimageready
Adobe Photoshopphotoshop
Automatic Updateswuaucpl.cpl
Bluetooth Transfer Wizardfsquirt
Calculatorcalc