மாறாக பைல் அளவு அதிகமாகும்போது அல்லது அதிக எண்ணிக்கையிலான பைல்களை அனுப்பும் போது மின்னஞ்சலில் அனுப்புவது சிறந்த தெரிவாக அமைய மாட்டாது. ஏனெனில் மின்னஞ்சல் சேவை தரும் நிறுவனங்கள் ஒரு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பக் கூடிய பைலின் அளவில் ஒரு எல்லையை நிர்ணயித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்கு உதவுகிறது FTP
File Transfer Protocol என்பதன் சுருக்கமே FTP. இணையத்தில் ஒரு சேர்வர் கணனிக்கும் எமது கணனிக்குமிடையில் பைல்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடிய வசதியை FTP தருகிறது. FTP தளம் (sites) என்பது மென்பொருள்கள், படங்கள், இசை, வீடியோ என பலவகையான பைல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு சேர்வர் கணனியாகும். World Wide Web எனும் உலகளாவிய வெப் தளம் போல், (E-mail) மின்னஞ்சல் போல் இணையம் மூலம் பெறப்படும் மற்றுமொரு சேவையே எப்டிபி.
இணையம் வழியே பைல்களைப் பரிமாறிக் கொள்வதில் தற்காலத்தை விட கடந்த காலங்களில் FTP பயன்பாடு ஒரு பொதுவான விடயமாகவிருந்தது. இரண்டு கணனிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ள மின்னஞ்சலை விட பிஹிஜி யே அதிகம் பயன்படுத்தப்பட்டது. முன்னரைப்போன்று பலராலும் பரவலாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும் FTP என்பது இன்னும் கூடப் பயன்பாட்டிலுள்ளது. பெரிய பைல்களை இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளும் வண்ணம் செய்வதற்கு FTP பயன்படுத்தப்படுகிறது. பைல்களை பரிமாறிக் கொள்வதில் தற்போது பயன்படுத்தப்படும் ஏனைய வழிமுறைகளுடன் ஒப்பிடும் போது FTP அதிக வேகம் கொண்டதாகவும் உள்ளது. FTP இணையம் வழியே பைல்களை அனுப்ப பெற உதவும் ஒரு சிறந்த வழிமுறை எனலாம்.
பொதுவாக FTP யானது இணைய தள வடிவமைப்பாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இணைய தளங்களை அவை சேமிக்கப்படும் சேர்வர் கணனிகளுக்கு அல்லது ஹோஸ்ட் (host) கணனிகளுக்கு அப்லோட் (upload) செய்வதற்காக அவர்களால் இது பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு அநேகமான இணைய தள சேர்வர்கள் FTP மூலம் மாத்திரமே இணைய தளங்களை அப்லோட் செய்வதற்கு அனுமதிக்கிறது.
ஒரு FTP சேர்வரை இரண்டு முறைகளில் அணுகலாம். முதல் வழி முறையில் உங்களுக்கு வழங்கப்படும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொண்டு உங்கள் அடையாளத்தை உறுதிசெய்து கொண்டு ஒரு FTP சேர்வரை அணுகுவதாகும். இரண்டாவது வழிமுறையாக பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் விவரங்கள் ஏதும் இன்றி ஒரு எப்டிபீ சேர்வரை அணுகுவதாகும். இவ்வாறான FTP சேர்வரை (Anonymous FTP) பெயரில்லா எப்டிபீ எனப்படும் இந்த எனோனிமஸ் எப்டிபியை விரும்பிய எவரும் அடைய முடியும்.
ஒரு எப்டிபி சேர்வரை அணுகுவதற்கு இணைய தளங்களைப் பார்வையிட உதவும் இணைய உலாவி அல்லது அதற்கென விசேடமாக உருவாக்கப்பட்ட மென்பொருள் கருவி பயன்படுத்தப்படும். இவ்வாறான மென்பொருள் கருவிகளை (FTP Client) எப்டிபி க்ளையண்ட் எனப்படும். பிரவுஸரை விட FTP க்ளையன்ட் பயன் படுத்துவதே சிறந்த வழிமுறையாகும். FileZilla, Cute FTP, Smart FTP என ஏராளமான FTP க்ளையண்டுகள் பாவனையிலுள்ளன. இவை அனைத்தும் வேறு பட்ட இடை முகப்புகளைக் கொண்டிருப்பினும் ஒரு கணனியிலிருந்து மற்றுமொரு கணனிக்கு பைல்களைப் பரிமாறும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றன.
இணைய உலாவி மூலம் FTP சேர்வரை அணுகும்போது முகவரிப் பட்டையில் ftp:// என்பது சேர்த்துக் கொள்ளப்படும். உதாரணமாக, ftp://ftp.schoolnet.lk/ என வழங்கினால் அந்த FTP சேர்வரை அடையாளமில்லாத முறையில் (anonymous) அணுகும். எனினும் அந்த FTP சேர்வர் பயனர் பெயர் மற்றும் கடவு சொல் வினவுமாயின் ftp://username:password@ftp:somedomain.com எனும் ஒழுங்கில் வழங்க வேண்டும். எனினும் இவ்வாறு வழங்கும் போது கடவு சொல் பிரவுஸரினால் கணனியில் சேமிக்கப்படும். அதனால் பாஸ்வர்டை வழங்காது பயனர் பெயரை மட்டும் பின்வருமாறு வழங்கலாம். ftp://username@ftp:somedomain.com இவ்வாறு வழங்கும் போது பாஸ்வர்டை பிரவுஸர் பின்னர் வினவும். எனினும் ப்ரவுஸரில் பாஸ்வர்ட் தங்காது.