1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Sunday, August 8, 2010

சிங்கப்பூர்

Republik Singapura
新加坡共和国
சிங்கப்பூர் குடியரசு
சிங்கப்பூரின் கொடி

குறிக்கோள்
Majulah Singapura
(மலாய் "சிங்கப்பூர் முன்னோக்கி")
நாட்டுப்பண்
முன்னேறட்டும் சிங்கப்பூர்
Location of  சிங்கப்பூரின்
தலைநகரம்
பெரிய நகரம்
சிங்கப்பூர் 1
1°17′N, 103°51′E
ஆட்சி மொழி(கள்) மலாய் , ஆங்கிலம், மேண்டரின், தமிழ்
அரசு பாராளுமன்ற குடியரசு
- அதிபர் செல்லப்பன் இராமநாதன்
- பிரதமர் லீ எசிய லூங்
விடுதலை
- ஒருதலைபட்ச பிரகடனம் (ஐ.இ. இடமிருந்து) ஆகஸ்டு 31, 1963
- அதிகாரப்பூர்வமாக ஐ.இ இடமிருந்து( மலேசியாவின் மாநிலமாக) செப்டம்பர் 16, 1963
- மலேசியாவிடமிருந்து ஆகஸ்டு 9, 1965
பரப்பளவு
- மொத்தம் 699 கிமீ² (190வது)
270 சது. மை
- நீர் (%) 1.444
மக்கள்தொகை
- ஜூலை 2005 மதிப்பீடு 4,326,000 (120வது)
- 2000 குடிமதிப்பு 4,117,700
மொ.தே.உ
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
- மொத்தம் $123.4 பில்லியன் (57வது)
- நபர்வரி $29,900 (22வது)
ம.வ.சு (2003) 0.907 (உயர்) (25வது)
நாணயம் சிங்கப்பூர் வெள்ளி (SGD)
நேர வலயம் சி.சீ.நே (ஒ.ச.நே.+8)
- கோடை (ப.சே.நே.) இல்லை (UTC+8)
இணைய குறி .sg
தொலைபேசி +652
1. சிங்கப்பூர் ஒரு நகர நாடாகும்.
2. 02 மலேசியாவில் இருந்து அழைக்கும் போது
சிங்கப்பூர் குடியரசு (சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura; ஆங்கிலம்: The Republic of Singapore) தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாவு (Riau) தீவுகளும் உள்ளன.
சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.
மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்குஆசியாவில் மிகச்சிறிய, மற்றும் உலகிலேயே மூன்றாவது மிகச்சிறிய நாடாகும். எனினும் அன்னியர் செலவாணியில் சிங்கபூரிடம் அமெரிக்க வெள்ளி 172 பில்லியன் $ உள்ளது. விடுதலைக்கு பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.

வரலாறு

பெயர்க்காரணம்

சிங்கப்பூர் சிங்கம் +ஊர் சிங்கப்பூர் அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளை கொண்டதும் ஆகும் சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின் படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்த தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம் போல ஒரு மிருகத்தை பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாற்றுக்கதையும் உண்டு .

முந்தைய வரலாறு

சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14ம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாக காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜய சாம்ராச்சியத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.
ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் பேரரசு, தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய அரசு போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய அரசு குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் - 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் - துமாசிக் நகருக்கு "சிங்கப்பூரா" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

குடியேற்றவாத ஆட்சி



தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸ்
1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் என்பார் தலைநிலப்பகுதியில் வந்து இறங்கினார். இப்பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், வணிக நிலையொன்றை அமைப்பதற்காக 1819 பெப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப்பகுதியில் வணிக நிலையொன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 1824 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலே ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது. ஆகஸ்ட் 1824ல் பிரித்தானியா முழுத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது சிங்கப்பூர் ஒரு பிரித்தானியக் குடியேற்றநாடு ஆகியது. சிங்கப்பூரிலிருந்த இரண்டாம் வதிவிட அதிகாரியான ஜான் குரோபுர்ட் என்பவரே சிங்கப்பூரை பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்குக் கையளித்தார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். ராபிள்சின் உதவி அதிகாரியான வில்லியம் பர்குகார் (William Farquhar) சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள்வருகையையும் ஊக்கப்படுத்தினார். இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற வருகுடியேற்றக் கொள்கை காரணமாக ஏற்பட்டது. 1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. ஆனால் 1867 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. 1869 ஆம் ஆண்டளவில் சுமார் 100,000 மக்கள் இத்தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.
சிங்கப்பூர் ஆறு, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றியிறக்கும் வேலை செய்துவந்தனர். மலாயர்கள் பெரும்பாலும் மீனவர்களாகவும், கடலோடிகளாகவும் இருந்தனர். அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவேயிருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர் கானிங் ஹில் கோட்டைப் பகுதியிலும், ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின் உட்பகுதியிலேயே குடியேறினர். இன்று சின்ன இந்தியா என்று அழைக்கப்படும் பகுதி இருக்கும் இடமே இது. விடுதலைக்குப் பின்னர் 1960களில் பெருமெடுப்பிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகளின்போது அறிபப்பட்டது தவிர, அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள் பற்றி மிகக்குறைவாகவே அறியவருகிறது.

உலகப்போர்

பினாங்கு, மலாக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பாகமாக இருந்தது. யப்பானியருடைய எழுச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வேகமாகத் தமது படைகளைப் பெருக்கிவருவதைப் பிரித்தானியா அறிந்திருந்தது. தென்கிழக்காசியாவில் இருந்த தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக சிங்கப்பூரின் வட முனையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்குப் பிரித்தானியா முடிவு செய்திருந்தது. ஆனால் ஜேர்மனியுடன் ஏற்பட்ட போரினால் போர்க் கப்பல்களையும், தளவாடங்களையும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரவேண்டி இருந்ததனால் இத் திட்டம் நிறைவேறவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது யப்பானியப் படைகள் மலாயாவைக் கைப்பற்றிக் கொண்டன. அப்படைகள் சிங்கப்பூரைத் தாக்கியபோது, பெரும்பாலான தமது படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டுக் குறைந்த படைபலத்துடன் இருந்த பிரித்தானியர் 6 நாட்களில் தோல்வியடைந்ததுடன், புகமுடியாதது என்று சொல்லப்பட்ட கோட்டையையும் 1942 பெப்ரவரி 15 ஆம் தேதி யப்பானியத் தளபதி தொமோயுக்கி யாமாஷித்தாவிடம் (Tomoyuki Yamashita) ஒப்படைத்துச் சரணடைந்தனர். இத்தோல்வியை "பெரும் இழப்பு" என்றும் "பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய சரணாகதி" என்றும் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் கடற்படைத் தளத்தை யப்பானியர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, அது யப்பானியரிடம் வீழ்ச்சியடையு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. யப்பானியர் சிங்கப்பூரின் பெயரை "ஷோவாவின் காலத்தில் பெறப்பட்ட தெற்குத் தீவு" என்னும் யப்பானியத் தொடரைச் சுருக்கி "ஷொனான்டோ" என மாற்றினர். உலகப் போரில் யப்பானியர் தோல்வியுற்ற ஒரு மாதத்தின் பின்னர் 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

தற்போதைய சிங்கப்பூர்



சிங்கப்பூர் துறைமுகம்
1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசோஃப் பின் இசாக் என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ பிரதமராகவும் ஆயினர். 1963 ஆகஸ்டில் சிங்கப்பூர் ஒருதலைப் பட்சமாகத் தன்னை முழு விடுதலைபெற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. 1963 ஆம் ஆண்டு செப்டெம்பரில் மலாயா, சாபா, சரவாக் ஆகியவற்றுடன் சேர்ந்து மலேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் ஆட்சியிலிருந்த மக்கள் செயர் கட்சிக்கும் கோலாலம்பூரில் இருந்த மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை வேறுபாடுகள் காரணமாக 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி இறைமையுள்ள நாடானது. யூசோப் பின் இஷாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார்.
சிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், பெருமளவிலான வேலையின்மை, வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை அந் நாடு எதிர் நோக்கவேண்டியிருந்தது. லீ குவான் யூ பிரதமராக இருந்த, 1959 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் பரவலான வேலையில்லாப் பிரச்சினையைச் சமாளித்ததுடன், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திப் பெருமளவிலான வீடமைப்புத் திட்டங்களும் அமைக்கப்பட்டன. இக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன; இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் GDP per capita ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் ஒன்று.

பண்பாடு

சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், சீனர்கள், இந்தியர்கள், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

மக்கள்

ஜூன் 2006 படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 4.48 மில்லியன். இதில் 3.6 மில்லியன் மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள்.

மதம்

சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 51% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தம் மற்றும் டாவோயிசம் பின்பற்றுகின்றனர். 15% மக்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் கிறித்துவத்திலும், 16% மக்கள், மலாய் மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.

மொழி

சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது.

லீ குவான் யூ



லீ குவான் யூ
லீ குவான் யூ (பிறப்பு செப் 16 , 1923), சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார். பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், இவரின் மகன் ஆவார். பிரதமர் ஆட்சியில் இருந்து இறங்கிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். சிங்கப்பூரின் இரண்டாவது மந்திரியின் (கோ சோக் தோங்கு) கீழ் (senior minister) ஆக பணியாற்றினார். இப்பொழுது இவருக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய பதவி (Minister Mentor) வகித்து வருகிறார்.

குடும்பம்

லீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது generation சீனத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதோதயார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்தொங் province இல் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் Strait settlements க்கு வந்ததாக கூறி உள்ளார்.