1
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)
Tuesday, July 20, 2010
உங்களை போல ஒருவன்
உலகத்தில் ஒவ்வருவரை போல ஏழு பேர் இருப்பதாக கூறபடுவதுண்டு. அப்படி உங்களை போல இருந்தால் நீங்கள் கண்டுபுடிக்கலாம் . அதற்க்கு நீங்கள் Facebook உபயோகிக்க வேண்டும் .Facebook இல் FacialProfiler என்ற Application உள்ளது . இது நீங்கள் கொடுத்திருக்கும் Profile புகைப்படத்தை எடுத்து முகத்தை வைத்து நம்மை போல் முகஜாடை உள்ள Facebook உபயோகிப்பவர்களை காட்டுகிறது.
ஆனால் இது Facebook இல் உள்ளவர்களை மட்டுமே தேடி தருகிறது . நீங்களும் உபயோகித்து பாருங்களேன் . இதற்க்கு சுட்டி
உங்கள் வலைப்பூவுக்கு அழகான Banner,Logo
உங்கள் வலைப்பூவோ அல்லது இணைய தளமோ எதுவானாலும் அழகாக பார்வையாளரை கவர வேண்டும் என நினைப்போம் . வலைப்பூவில் banner மற்றும் logo மிகவும் முக்கியமானது . சில வலைப்பூ பதிவர்கள் Photoshop மற்றும் Flash போன்றவற்றை அறிந்து இருப்பார்கள் . இதனால் அவர்கள் எளிதாக அவர்களது வலைப்பூவை Banner மற்றும் Logo அவர்களே உருவாக்கி மெருகூட்டுவார்கள் . ஆனால் இவை தெரியாத மற்றவர்களுக்காக Banner மற்றும் Logo உருவாக்க சில வலைத்தளங்கள் உள்ளன . இவை எளிய முறையில் Banner மற்றும் Logo உருவாக்க உதவுகின்றன .
படங்களை கிளிக் செய்து பார்க்க
Banner Fans
Online Logo Maker
Live Banner Maker
விரைவாக கோப்புகளை காப்பி செய்ய
நாம் கணிணியில் பலவிதமான கோப்புகள் வைத்திருப்போம் . அவற்றை நம் வசதிக்கேற்றவாறு அடிக்கடி இடமாற்றம் செய்வோம் . அப்படி இடமாற்றம் செய்யும் போது ஒரு Drive விட்டு ஒரு Drive காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது அதாவது உதாரணமாக Drive(C:) லிருந்து Drive(E:) காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது சற்று வேகம் குறைவாக இருக்கும். மேலும் இடமாற்றம் செய்யப்படும் கோப்பு பெரிதாக இருப்பின் மேலும் நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் .
TeraCopy என்னும் மென்பொருள் விரைவாக காப்பி செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய உதவுகிறது . இது சாதாரணமாக காப்பி மற்றும் இடமாற்றம் செய்வதை காட்டிலும் விரைவாக செய்கிறது .இதற்க்கு முதலில் TerCopy மென்பொருளை நிறுவிய பின் இடமாற்றமோ காப்பியோ செய்யவேண்டிய கோப்பின் மீது Right Click செய்து அதில் TeraCopy என்பதை கிளிக் செய்க
பின் தோன்றும் Window வில் Copy அல்லது Move வசதியை தேர்வு செய்க.மேலும் கோப்பை இடமாற்றமோ காப்பியோ செய்ய வேண்டிய இடத்தையும் தேர்வு செய்க .
தேர்வு செய்த பின் TeraCopy இடமாற்றமோ அல்லது காப்பியோ செய்வதை தொடங்கி விடும் . மேலும் இதில் இடமாற்றத்தையோ காப்பியையோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் Pause வசதியும் உண்டு .
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி
Subscribe to:
Posts (Atom)