நண்பர்களே,
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நாம் நமது கணிணியை விட்டு செல்லும் போது பிறர் பயன்படுத்தலாம்.அப்படி நாம் இல்லாதபோது பிறர் என்ன செய்தார்கள்,என்னென்ன டைப் செய்தார்கள் என்பதை இந்த Softபொருள் மூலம் அறியலாம்.
இந்த Softபொருள் இயங்குவது உங்களை தவிர யாருக்கும் தெரியாமல் பின்புலத்தில் இயங்க வைக்கலாம். இது இயங்கும் போது கணிணியை பயன்படுத்துபவர்களுக்கு இயங்குவது தெரியாது.அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஒரு txt கோப்பில் நமக்கு தருகிறது. கீழே உள்ள படத்தை பார்க்க

Start என்ற பட்டனை தட்டினால் இந்த மென்பொருள் இயங்க ஆரம்பித்து விடும். பின் நீங்கள் கணிணியை விட்டு செல்லும் போது Hide என்ற பட்டனை தட்டினால் பின்புலத்தில் இயங்க ஆரம்பித்து விடும்.உங்களை தவிர யாருக்கும் இயங்குவது தெரியாது. மீண்டும் கொண்டுவர Ctrl+Alt+Shift+(F12/F11/F10/F9 - இவற்றில் ஏதாவது ஒன்று) அழுத்தவும்.
உதாரணமாக நீங்கள் சென்ற பின் உங்கள் கணிணியில் ஒருவர் Notepad திறந்து டைப் செய்கிறார் என வைத்துகொள்வோம்.அவர் என்ன டைப் செய்தார் என்பது அனைத்தும் நமக்கு தெரிந்து விடும்.கீழே உள்ள பெரிதாக்கி படத்தை பார்க்க

எங்கே நமக்கு டைப் செய்த அனைத்தும் txt கோப்பாக Save ஆக வேண்டும் என்பதை நாம் Options சென்று கூறலாம்.கீழே உள்ள படத்தை பார்க்க

No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.