1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Wednesday, July 21, 2010

Thumbs.db மற்றும் FOUND.000 இவைகள் வைரஸ்களா?

Thumbs.db
WindowsXP பரவலாக அனைவரும் உபயோகபடுத்த படுகிறது.WindowsXP Folder களில் Thumbs.db என்ற ஒரு File இருப்பதை பார்த்துருக்கலாம் .இதை பார்க்கும் போது நமக்கு ஏதோ வைரஸ் என தோன்றலாம் . ஆனால் இவை வைரஸ் இல்லை. WindowsXP யின் System File ஆகும்.

நீங்கள் WindowsXP யில் Folder View Option இல் Thumbnails என்ற Option ஐ பார்த்துருக்கலாம் . புகைப்படங்களின் சிறிய வடிவத்தை காட்டும் வசதி ஆகும் .இந்த புகைப்படத்தின் சிறிய வடிவம் விரைவாக தெரிய WindowsXP ஆல் உருவாக்கப்படும் ஒரு File அவ்வளவே. இது மிகச்சிறிய அளவே இடத்தை (Size) எடுத்து கொள்ளும் . இது போன்ற Files உங்கள் கணினியில் நிறைய இருந்தால் வேண்டுமானால் நீங்கள் இதை Delete செய்து கொள்ளலாம் .

இவ்வகை Files உருவாகாமல் இருக்க கீழ்க்கண்ட வழிமுறையை கடை பிடிக்கவும் .

1. My Computer -> Tools -> Folder Options செல்லவும்
2. View Tab கிளிக் செய்து அதில் Do not cache thumbnails என்பதை தேர்வு செய்யவும் .





FOUND.000
இதுவும் WindowsXP ஆல் உருவாக்கப்படும் File ஆகும். இது WindowsXP ஆல் ScanDisk உபயோகபடுத்தும் போது உருவாகப்படும் Files ஆகும் . இவை ந்மக்கு தேவையில்லாத Files எனவே இதனை நாம் அழித்து கொள்ளலாம் . இவை WindowsXP ஆல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் . இவை உங்கள் கணினியில் தெரிந்தால் கீழ்க்கண்ட முறையில் மறைக்கலாம் .

1. My Computer -> Tools -> Folder Options செல்லவும்
2. View Tab கிளிக் செய்து அதில் Hide protected Operating System Files and Folders என்பதை தேர்வு செய்யவும் .

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.