1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Monday, June 21, 2010

தமிழில் Type செய்ய


வழக்கமாக நாம் வேர்டு, பவர்பாயின்ட் போன்றவற்றில் தமிழில் தட்டச்சு செய்ய குறள், இ-கலப்பை, அழகி, NHM போன்ற கருவிகளை பயன்படுத்தி வருகிறோம். சமீபத்தில் கூகிள் நிறுவனம் Google IME (Input Method Editor) எனும் கருவியை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த கருவியை உபயோகித்து தமிழ் மட்டுமின்றி Arabic, Bengali, Farsi (Persian), Greek, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Punjabi, Telugu and Urdu ஆகிய மொழிகளில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் (Transliteration) முறைப்படி யுனிகோட் வகையில் இணைய இணைப்பு இல்லாமலேயே தட்டச்சு செய்யலாம்.
இந்த கருவி Microsoft Windows XP / VISTA / Windows 7 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் அனைத்துச் செயலிகளிலும் தமிழை நேரடியாக உள்ளீடு செய்யப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் ஆபீஸ், ஸ்டார் ஆபீஸ், கூகிள் டாக்ஸ் & ஸ்பிரட்ஷீட், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட் எக்ஸ்புலோரர், பயர்பாக்ஸ், நெட்ஸ்கேப், அடோப் தொகுப்புகள் ஆகிய Software-களிலும் தமிழை Type செய்யலாம். மேலும்..

 Yahoo Messenger, Google Talk, Windows live mesenger மற்றும் AOL Instant Mesenger ஆகியவைகளின் வழியாகத் தமிழில் Chat செய்யலாம். இப்பொழுது இத்தொகுப்பின் மூலம் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடியும், யுனிகோட் தமிழிலேயே Chat செய்யவும் முடியும். மேலும் யுனிகோட் தமிழ்த் தகவல்களை இணையம் வழியாகத் தேடவும் முடியும்.
இறுதியில் தரப்பட்டுள்ள லிங்கை தொடர்ந்து வரும் பக்கத்தில் தமிழ் மொழியை தேர்வு செய்து டவுன்லோட் பொத்தானை Click செய்து googletamilinputsetup.exe என்ற File-ஐ தரவிறக்கம் செய்து கொண்டு அந்த File-ஐ ரன் செய்யுங்கள்.
பிறகு வரும் விசார்ட் ஐ தொடர்ந்து Google IME கருவியை உங்கள் கணினியில் Install செய்து கொள்ளுங்கள். பிறகு கண்ட்ரோல் பேனலுக்குச் சென்று Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Settings Tab இல் Google Tamil input என்பதை தேர்வு செய்து Key Settings Click செய்யுங்கள்.

இனி திறக்கும் Wizard-ல் நீங்கள் விரும்பும் short cut கீயை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு உங்களுக்கு தேவையான Software திறந்து கொண்டு short cut கீயை அழுத்தினால் கூகிள் தமிழ் Input செயல் பட துவங்கிவிடும்.

இதில் கேரக்டர் பிக்கர் வசதியும் தரப்பட்டுள்ளது.

இதனை உபயோகித்து நாம் தட்டச்சு செய்கையில் கீழே தரப்பட்டுள்ளது போல சொல் தேர்வு வசதியும் உள்ளது.

1 comment:

  1. ஐயா வணக்கம் நான் போடோஷப் பயன் படுத்துகிறேன் ஆனால் அவற்றில் வித விதமன FONT உருவாக்கமுடியவில்லை குறிப்பாக டு டூ து தூ போன்ற எழுத்துக்கள் பயன்படுத்தமுடியவில்லை தயவுசெய்து எனக்கு உதவவும்
    காளிதாஸ் மலேசியா

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.