PDF கோப்புகளை Excel ,Word கோப்புகளாக மாற்றுவதற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட தாள்களை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும் மேலும் PDF கோப்புகளுக்கு Password கொடுத்து பாதுகாப்பதற்கும் பல பயனுள்ள மென்பொருள்கள் உள்ளன. அந்த வரிசையில் ஒரு பயனுள்ள மென்பொருள்தான் Foxit PDF Editor 2.1 . இதன் மூலம் நமது PDF கோப்புகளை நம் விருப்பதிற்கேற்ப திருத்தி சேமித்துக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் சென்று Other PDF Tools என்னும் தலைப்பில் கீழ் உள்ள Foxit PDF EDITOR 2.1 BUILD 0702 (.exe) என்ற கோப்பினைத் தரவிறக்கிக் கொண்டு அதை கணினியில் சேமித்துக் கொள்ளவும். பின் கோப்பினைத் திறந்து Run செய்து கணினியில் Install செய்து கொள்ளவும். பின் Desktopல் உள்ள Icon வழியே Foxit editorரை திறந்து FILE/OPEN கிளிக் செய்து நீங்கள் திருத்த வேண்டிய PDF கோப்பினை திறந்து கொள்ளவும். திருத்த வேண்டிய வாக்கியத்தின் மேல கர்சரை வைத்து அழுத்தினால் கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு ஒரு பெட்டி தோண்றும். அதில் Text என்பதற்கு எதிரில் உள்ள உங்கள் பழைய வாக்கியத்தினை மாற்றி நீங்கள் சேர்க்க வேண்டிய வாக்கியத்தினை தட்டச்சு செய்யுங்கள். இது போல கோப்பு அனைத்தையும் நம் விருப்பம் போல திருத்தி மாற்றி சேமித்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.