நாம் இந்த இணைய உலகில் எவ்வளவோ தளங்களுக்கு செல்லுவோம். அப்படி செல்லும் போது அந்த தளங்களில் உள்ள favicon நமக்கு மிகவும் பிடித்து விடும். அந்த Favicon நம்ம தளத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் அந்த favicon நம்மால் காப்பி செய்ய முடியாது. இந்த குறையை போக்கவே இந்த பதிவு இதற்க்கு கீழ் வரும் முறைகளை கடைபிடியுங்கள்
- இந்த தளம் செல்லுங்கள் http://www.getfavicon.org
- சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்
- இந்த விண்டோவில் முதலில் நமக்கு விருப்பமான favicon உள்ள முகவரியை கொடுக்க வேண்டும். (முகவரியில் http:// சேர்க்கவேண்டாம். அந்த வரி அதிலேயே இருக்கும்)
- அடுத்து அதற்கு பக்கத்தில் உள்ள Get Favicon என்ற பட்டனை அழுத்தவும். அழுத்திய உடன் நமக்கு அந்த பக்கம் லோடு ஆகும்
- லோடு ஆகி அந்த பக்கத்தில் உள்ள Favicon மட்டும் தனியாக வரும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
(படத்தில் என்னுடைய பக்கத்தின் Favicon கொடுத்து உள்ளேன்.)
- இப்பொழுது நீங்கள் கொடுத்த பக்கத்தின் Favicon வந்திருக்கும். அந்த படத்தின் மீது ரைட் கிளிக் செய்யுங்கள்.
- அந்த Favicon உடைய முகவரியை காப்பி செய்து கொள்ளுங்கள். காப்பி செய்து கொண்டு உங்களுடைய பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து
- Dashboard
- Design
- Edit Html
- Expand Widget Template - சென்று உங்களுடைய Favicon மாற்றி கொள்ளுங்கள்.
ஏற்கனவே நான் கூறியுள்ளதை போல உங்களுடைய Favicon மாற்றி கொள்ளுங்கள்.
தெரியாதவர்கள் இந்த லிங்கில் சென்று பார்த்து கொள்ளவும். http://knowledgeshareme.blogspot.com/2010/07/favicon.html
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.