ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளுக்குச் சமமானது என்பது ஒரு பேருண்மை. எங்கள் மூளைக்கும், கருத்துக்களை விட உருவங்களை சேமிப்பதிலும் அவற்றை கையாள்வதிலும் மிகுந்த ஆற்றல் உண்டு என்பது விஞ்ஞான உண்மை ஆகும். இதை எமது வாழ்க்கை முறையிலேயே நாம் அனுபவத்தில் உணர முடியும். எமது மனதில் பதிய வைப்பதற்காகவே நிறுவனங்களில் குறியீடுகள் கவர்ச்சிகரமான, மனதில் பதியக் கூடிய உருவங்களாக உருவாக்கப்படுகின்றன. எந்த ஒரு பிரபலமான நிறுவனத்தையும் நீங்கள் மனதில் உருவகித்தால், அவற்றின் குறியீட்டு உருவமே உங்கள் மனதில் முன்னிற்கும். ஓவியம் என்பது உலக மொழி என்பதால், எந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவரும், எந்த மொழியைச் சேர்ந்தவரும், ஒரு படத்தின் கருத்தை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். உண்மையில், ஆதி மனிதனின் மொழியின் வரி வடிவமாக இருந்தது உருவப் படங்களேயாகும்.
இந்த லோகோக்கள் எங்கே துவங்கின, என்று பார்த்தால், உருளை அச்சுகளில் தான் முதல் முதலில் பாவிக்கப்பட்டு இருக்கின்றன. மெசொபதேமியாவில் இந்த அச்சு கி.மு 3500 ஆம் ஆண்டளவில் பாவிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன. இந்த அச்சுகள் கடினமான ஒரு பதார்த்தத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும். ஈரமான களிமண் பலகையின் மீது இதை வைத்து உருட்டும் போது அந்த அச்சில் உள்ள உருவங்கள் களிமண் மீது புடைப்பாக உருவாகும்.
நமது அம்புலிமாமா கதைகளில் கேள்விப்பட்ட முத்திரை மோதிரங்கள் தான் அடுத்த தலைமுறை லோகோக்கள். ஒவ்வொரு முக்கிய பிரமுகரும் தமக்கென்று ஒரு லோகோ அல்லது இலச்சினையை உருவாக்கி அதை மோதிரத்தில் பதித்து, தம்முடனேயே வைத்திருந்தனர். அது அவர்களின் அத்தாட்சியை உறுதிப்படுத்தும் முக்கிய சான்றாக இருந்தது. சீனா நாட்டிலும், ஐரோப்பாவிலும் கூட இந்த முத்திரை உபயோகம் இருந்துள்ளது. முக்கியமான ஆவணங்கள், கடிதங்களில் அதிகாரிகளின் முத்திரை பதிக்கப்பட்டது, இரகசிய ஆவணங்கள் சீல் வைக்கவும் அனுப்புனரின் முத்திரை பாவிக்கப்பட்டது.
அதற்கு அடுத்ததாக, தமது முத்திரையை அரசர்கள் தமது நாட்டின் நாணயத்தில் பதித்து, அந்த நாட்டின் நாணயத்திற்கு தமது லோகோ வை கொண்டு சென்றனர். இது இப்போதும் கூட வழக்கத்தில் உள்ளது. நாடுகள், அரசரை இல்லாவிட்டலும், தம் நாட்டுக்குரிய சின்னங்களைக் கொண்டு லோகோக்களை உருவாக்கி நாணயத்தில் பதித்து வெளியிடுகின்றனர். நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்கள், நாணயத்தைப் பார்த்த உடனேயே அது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதை அதிலுள்ள லோகோவை வைத்து அனுமானிக்க முடியும்.
தற்காலத்து லோகோக்கள் நேரடியாக ஒரு உருவத்தைக் கொண்டிராமல், அரூபமான வகையில் தமது கருத்தைச் சொல்கின்றன. இந்த வகை லோகோக்கள் 1950 களிலிருந்தே வெளிவரத் துவங்கின. இவற்றில் முன்னோடியாகக் கருதப்படும் இலச்சினை CHASE வங்கியின் இலச்சினை ஆகும்.
தற்போதைய நிறுவனங்களின் லோகோக்கள் அனேகமாக ஒரு குறியீட்டு உருவத்தையும், அதனுடன் நிறுவனத்தின் பெயரையோ அல்லது சுருங்கிய வடிவிலான பெயரையோ இணைத்து உருவாக்கப் படுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் அடையாளங்களில், அவற்றுக்கான நிறங்களும், குறியீடுகளும் மிக முக்கியமாக கவனிக்கப்படும். பின்வரும் லோகோக்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாகும்.
கீழே உள்ள லோகோக்களுக்கு சுவையான அர்த்தங்கள் உண்டு. அனுமானித்து விட்டு, இறுதியில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அமேசான் நிறுவனத்தினுடைய லோகோ : அவர்களிடம் A இலிருந்து Z வரை எல்லாப் பொருட்களும் வாங்க முடியும் என்பதை அந்த அம்புக்குறி குறிப்பதோடு, வாடிக்கையாளரிடம் உருவாகும் புன்னகையையும் குறித்து நிற்கிறது.
பெட் எக்ஸ் நிறுவனத்தின் லோகோவைப் பார்த்தால், E க்கும் X க்கும் இடையில் ஒரு அம்புக்குறியைக் காணலாம். இந்த நிறுவனத்தின் துல்லியமான விநியோகத்தைக் காட்டும் குறியீடு அந்த லோகோவிலேயே உள்ளடக்கபட்டு இருக்கிறது.
BMW நிறுவனத்தின் லோகோ வின் நடுவிலுள்ள நீலமும் வெள்ளையும் கலந்த குறியீடு, நீல வானில் விமானம் பறக்கும் போது அதன் முன் பக்கத்திலுள்ள காற்றாடி சுழலும் உருவமாகும். இந்த நிறுவனம் முன்னர் விமான இயந்திரங்களைத் தயாரித்த பாரம்பரியத்தை குறிப்பிடும் சின்னமே இதுவாகும்.
அப்புறம், கீழே உள்ளவை சிரிப்பதற்கு.
Good :)
ReplyDeleteSirippatharku enru idappattulla collections superb !!!!