1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Wednesday, June 16, 2010

பிளாக்கில வீடியோவினை வரவழைக்க

முதலில் உங்களுடைய வீடியோவினை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.உங்கள் வீடியோவானது mp4 ஆக இருப்பது நல்லது. மற்ற பார்மெட்டுக்களைவிட இந்த பார்மெட்டானது வீடியோவின் அளவை குறைத்துவிடும்.பி்ன்னர் 4 shared.com -ல் கணக்கு ஒன்றை துவக்குங்கள். இது இலவச சேவை மற்றும் 200 எம்.பி. வரை இதில் பதிவினை ஏற்றலாம். இந்த 4 Shared.com ல் பதிவினை எப்படி ஏற்றுவது என் று முன்னரே நான் பதிவிட்டுள்ளேன். உங்களுக்காக மீண்டும் அதனை பதிவிடுகின்றேன்..
முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.(இப்போது புது டெம்ப்ளேட் மாற்றி உள்ளார்கள். இது பழைய டெம்ப்ளேட் படம்)
இதில் உள்ள GET 5 GB OF FREE SPACE கிளிக் செய்யவும். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் இ-மெயில் முகவரியை தட்டச்சு செய்யுங்கள்.
பாஸ்வேர்ட் கொடுங்கள். மற்றும் ஒரு முறை பாஸ்வேர்ட்
கொடுங்கள். இதில் உள்ள இலவசம் என்பதை தேர்ந்தேடுங்கள்.
கீழே உள்ள Sign Up கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில்
உள்ள ஓ.கே. கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.அதே சமயம்
உங்கள் இ-மெயில் முகவரிக்கு இ-மெயில் ஒன்று வந்திருக்கும்.
இதில் கீழ்புறம் உள்ளChoose file கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய பைலை தேர்ந்தெடுத்துகிளிக் செய்யுங்கள்.அடுத்து கீழ் உள்ள Upload கிளிக் செய்யுங்கள்.
இதில் உள்ள கட்டத்தில் பார்த்தீர்களேயானால்
பச்சைநிற கட்டங்கள் வருவதை காணலாம்.பைல் Upload
ஆகி முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள்ள Done கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இதில் இரண்டாவதாக உள்ள Embed கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வீடியோ அளவினை அகலம் மற்றும் உயரம் தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள். அடுதுது இதில் உள்ள Copy கிளிக் செய்யுங்கள். பின்னர் உங்கள் பிளாக்குக்கு வாருங்கள். அதில் உள்ள HTML ஐ திருத்து கிளிக செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். 
அதில் பேஸ்ட் செய்யுங்கள்.இப்போது எழுது கிளிக் செய்து பார்த்தீர்களேயானால் உங்கள் வீடியோவானது இருக்கும். முன்னோட்டம் கிளிக்செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
Source : Velan

3 comments:

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.