1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Wednesday, August 25, 2010

வருங்காலத் தொழில்நுட்பம்

-காமர்ஸ், சமூக ஊடகம் என இணைய உலகில் புதிய பிசினஸ் மாடல்கள் வந்து
பில்லியன்களைக் குவிப்பதை கலிஃபோர்னியாவின் தங்கத் தேடலுக்கு (Gold Rush) நிகரானதாக சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். ஏழு வருடங்களே நீடித்த தங்கத் தேடல் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொடுத்து இருந்தாலும், தங்கத்தால் வந்த நேரடிச் செல் வம் சிலரைக் கொழுத்த பணக்காரர்களாக்க, தங்கம் தேடி வந்த பலர், கடுமையான உழைப்புக்குப் பின்ன ரும் கிட்டத்தட்ட வெறுங்கையோடு திரும்பிப் போனதுதான் உண்மை. அதே நேரத்தில், தங்கம்தேடப் போனவர்களால் கோடாரி, சுத்தியல் உள்ளிட்ட இத் யாதி கருவிகளின் விற்பனை குறிப்பிடத்தகுந்த அள வுக்கு வெற்றி பெற்றது. பரவலாக இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் ஜீன்ஸ் பேன்ட், தங்கத் தேடலின்போது ஏற்பட்ட தற்செயல் தொழில்வெற்றி தான்.

24 வயதான Levi Strauss நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு கலிஃபோர்னியா வந்தது, தங்கம் தேடி உழைக்கும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் வேலை பார்க்கும் சுரங்கங்களின் அருகே கூடாரம் போட்டு உலர் பழங்களை விற்பதற்காகத்தான். கூடாரம் அமைக் கக் கொண்டுவந்த முரட்டுத் துணி கால்சராய் தைக் கப் பயன்பட்டு, அதன்மூலம் Levis என்ற மிகப் பிரபல மான பிராண்ட் உருவானது குருட்டு அதிர்ஷ்டமே. இணையத்திலும், இது போன்ற வெற்றி (மற்றும் தோல்வி) கதைகளுக்குக் குறைவு இல்லை.
சென்ற வாரத்தில் பயனீட்டாளர்களின் இணையப் பயன்பாட்டுத் தகவல்களைச் சேகரித்து, அதில் இருந்து அவர்களின் ஆளுமையையும் அவர்களுடனான வியாபார நிகழ்வுகளில் இருக்கும் சாதக, பாத கங்களையும் கண நேரத்தில் அலசி ஆராய்ந்து கணிக்கும் இணைய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பெருகி வருவது கவலைக்கு உரியது.

இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.
திருச்சிக்காரரான பிரபுவுக்கு வேலை கோயம்புத்தூரில். பணிபுரியும் அலுவலகம் தவிர, வீட்டிலும் இணைய வசதிகொண்ட கணினி மூலம் வலைதளங்களை மேய்வது உண்டு. அவ்வப்போது திருச்சி செல்கையில் பிரவுசிங் சென்டர் செல்வதும் வழக்கம். இணையத்தில் இ-மெயில் தவிர, ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் சில வலைப்பதிவுத் தளங்களில் தொடர்ந்து மேய்வது உண்டு. இதோடு, நண்பர்கள் யாராவது அனுப்பும் வலைதள லிங்குகளைச் சொடுக்கி அவற்றைப் படித்து, பின்னூட்டங்கள் இடுவதும் பிரபுவின் வழக்கம்.

பிரபு தமது வலைதளத்துக்கு முதல்முறை வந்து விட்டு, மீண்டும் வரும்போது அவரது வசதிக்காகஎன வலைதளங்கள் சில தகவல்களை Cookie எனப் படும் குட்டி சைஸ் கோப்புகளில் சேமித்துவைப் பது வழக்கம். ஆனால், இந்த Cookieகள் அனைத் தையும் ஒரு மென்பொருளால் படிக்க முடிந்தால்? அதுதான் இந்தத்தொழில்நுட்பத்தின் அடிப்படை!

பல்வேறு கணினிகளில் இருந்தும், வெவ்வேறு ஊர்களில் இருந்தும் பிரபு வலைதளங்களுக்குச் சென்றாலும், அவரது வலையலசல் வரலாற்றை (Browsing History) அலசிப்பார்த்து அவரைப்பற்றிய விவரங்களைத் தொகுத்தெடுத்து பிரபுவைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கணிக்க முடியும். 'இவர் 23 - 28 வயதுடைய, கோயம்புத்தூரிலும்திருச்சி யிலும் நாட்களைக் கழிக்கும் பட்டதாரி. புத்தகங்கள் படிப்பதிலும், திரைப்படங்கள் பார்ப்பதிலும் ஆர் வம் அதிகம். கடந்த 6 முதல் 18 மாதங்களுக்குள் டெல்லிக்குப் பயணித்திருக்கிறார்!' என்று தோராயமாகவும் துல்லியமாகவும் பிரபுவைப் பற்றிய தகவலைச் சலித்துச் சொல்ல முடியும். பிரபு இதுவரை சென்றிருக்காத வலைதளங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அவர் வருகை தரும்போது மிகக் குறிப்பிட்ட (Targeted) செய்திகளையும் விளம்பரங்களையும் கொடுக்க முடியும். இப்போது பரவலாக வலைதளங்களில் காணப்படும் ஃபேஸ்புக்கின் Like இணைப்புகளின் பின்னணி மற்றும் நோக்கம் இதுதான். பயனீட்டு அனு பவத்தைச் செம்மைப்படுத்துவற்கு மட்டும் இதைச் செய்தால் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் அதற்காகப் பயன்படாமல், கிட்டத்தட்ட பயனீட்டாளர்களை உளவு பார்க்கும் வேலை செய்வதுதான் பிரச்னையே!

உதாரணத்துக்கு, பிரபு கிரெடிட் கார்டு ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம். கிரெடிட் கார்டைக் கொடுக்கும் நிறுவனம் பிரபு தமது வலைதளத்தில் கார்டுக்கான விண்ணப்பத்தில் விவரங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கும் அதே வேளையில், பிரபுவைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம்; நிராகரிக்கலாம் அல்லது அதிக வட்டிக்கான கார்டைக் கொடுக்கலாம். உதாரண மாக, பெண்ணுக்குப் பார்த்து இருக்கும் மாப்பிள்ளைப் பையனின் வண்டவாளங்களையோ பையனுக்குப் பார்த்து இருக்கும் பெண்ணின் சேட்டைகளையோ நொடியில் கண்டுபிடிப்பது சாத்தியம். மேட்ரிமோனியல் வலைதளங்கள் மேற்கண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தகவல் சேகரித்துப் பெண்/ஆண் வீட்டாருக்கு விற்க முடியும்.

வேலைவாய்ப்பு, உயர் கல்வி போன்ற ஒவ்வொரு துறையிலும் இப்படி எடுக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தத் தொடங்கினால், பயனீட்டாளர்களின் பிரைவஸி அதோகதி என்ப தால், இந்தத் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல் இணைய உலகில் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

டிவிட்டர் வேகமாக வளர்ந்து வருவதை அவர்களின் ஜூன் மாதப் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. 110 சதவிகிதம் அதிகமாகப் பயனீட்டாளர் எண்ணிக்கையிலும், அனுப்பப் படும் டிவிட்டுகளிலும் வளர்ச்சி இருப்பதற்குக் காரணம், ஆசியாவில் இருந்து இணைபவர்களால்தான் என்பதை, தமிழ் கூறும் நல்லுலகில் பதிவர்களில் இருந்து, பலான தளங்கள் வரை டிவிட்ட ஆரம்பித்து இருப்பதில் இருந்து தெரியவருகிறது.

இதைக் கொண்டாடும் வகையில், டிவிட் ஸ்டைல் சுருக் விவரங்கள் சில:
இணையப் பயனீட்டையே மாற்றிவிடும் என்று ஏக பில்ட் அப் கொடுத்துத் தொடங்கப்பட்ட கூகுள், வேவ் தொழில்நுட்பத்தை நிறுத்திக்கொள்ளப்போவ தாக அறிவிப்பு. வேவின் பிறப்பையும் இறப்பையும் பற்றிய விக்கி உரலி http://en.wikipedia.org/wiki/Google_Wave
பயனீட்டாளர்களின் ஆதரவு அதிகம் இல்லை என்பதால் வேவ் தொழில்நுட்பத்தை நிறுத்தப்போவதாகச் சொல்லி இருந்தாலும், ரகசியமாக அவர்கள் தயாரித்தபடி இருக்கும் Google Me சமூக ஊடகத் தொழில்நுட்பத்தை வெளியிடும் வகையில் இதைச் செய்திருக்க வேண்டும் என்பது எனது யூகம்.
அடுத்து என்ன? பஸ்ஸையும் (buzz.google.com) காலி செய்துவிடுவார்களா? பார்க்கலாம்!
ஆப்பிளின் iPad-க்குப் போட்டியாக Dell நிறுவனம் Streak என்ற கணினிக் குளிகை சாதனத்தை இந்த வாரம் வெளியிடுகிறது. யாராவது வாங்கிப் பயன்படுத்தினால், பின்னூட்டம் கொடுங்கள், ப்ளீஸ்!
 நன்றி : விகடன்.காம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.