எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோசேவ்
எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்களைத் தாமாக சேவ் செய்திடும் அரிய வசதி ஒன்று உள்ளது. பலர் இதனை செட் செய்து இதன் பயனை அனுபவிக்காமலேயே இருக்கின்றனர். குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாகவே செயல்படும் பைல்கள் அதுவரை மேற்கொண்ட தகவல்களுடன் சேவ் செய்யப்படும். இதன் டிபால்ட் (Default) செட்டிங்ஸ் பத்து நிமிடங்களாகும். எனவே புரோகிராமிற்கு ஏதாவது ஏற்பட்டு கிராஷ் ஆனால் நீங்களாக சேவ் செய்யாதபோது உங்களுடைய ஒன்பது நிமிட வேலை வீணாகிவிடும். எனவே ஆட்டோ சேவ் எனச் சொல்லப்படும் இந்த செயல்பாட்டின் நேரத்தைச் சுருக்கமாக சிறிய கால அவகாசமாக செட் செய்திடலாம். மேலும் இந்த பைலுக்கான பேக்கப் பைலை உருவாக்கும் படியும் செட் செய்திடலாம். இதற்கு Tools மெனு கிளிக் செய்து அதில் வரும் மெனுவில் Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் குச்திஞு என்ற டேபில் கிளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் Save Auto recover in every என்று ஒரு வரியும் அதன் அருகே நிமிடங்களை செட் செய்திட எண்ணுடன் மேல் கீழ் அம்புக் குறிகளும் கிடைக்கும். இதில் 10 என்று இருப்பதை மாற்றுங்கள்.
எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை தகவல்களை சேவ் செய்திட எண்ணுகிறீர்களோ அந்த எண்ணை அமைக்கவும். பின் அதன் கீழாக Auto recover save location என்று ஒரு வரியின் எதிரே எங்கு இந்த பைல் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனை காட்டும் கட்டம் இருக்கும். இங்கு நீங்கள் விரும்பும் இடத்தில் பைலை சேவ் செய்திடும் வகையில் மாற்றலாம். பின் ஓகே கொடுத்து வெளியேறவும்.
எக்ஸெல் பின்னங்கள் அமைக்க
எக்ஸெல் தொகுப்பில் பின்னக் கணக்குத் தகவல் ஒன்றை அதற்கான பார்மட்டில் சரியாக அமைக்காவிட்டால் எக்ஸெல் அதனை தேதிக்கான தகவல் என்று எடுத்துக் கொண்டு தேதியாகக் காட்டும். எடுத்துக் காட்டாக ஒரு செல்லில் 1/50 என்று டைப் செய்தால் எக்ஸெல் உடனே அதனை Jan50 என எடுத்துக் கொண்டு அப்படியே செல்லில் அமைத்துக் கொள்ளும். இவ்வாறு கிடைத்த பின்னர் நீங்கள் அந்த செல்லில் உள்ளதை பின்னமாக மாற்றுமாறு பார்மட் செய்தால் எக்ஸெல் இதனை 18264 எனக் காட்டும். ஏனென்றால் Jan 50 என்பதற்கான உள்ளீட்டு எண் இதுதான். எனவே எக்ஸெல் உங்கள் பின்னத் தகவலைசரியாக புரிந்து செயல்பட அதற்கான பார்மட்டை அத்தகவலைக் கொண்டு வருமுன் அமைப்பது கட்டாயமாகும்.
எடுத்துக்காட்டாக அக்செஸ் தொகுப்பில் இருந்து 1/50, 2/70,மற்றும் 30/65 என்ற பின்னத் தகவல்களைக் கொண்டுவருகிறீர்கள். இந்த தகவல்களை அக்செஸ் கட்டத்திலிருந்து கொண்டு வருமுன் எக்ஸெல் செல்லில் பார்மட்டை அமைக்க வேண்டும். முதலில் எந்த செல்லில் அமைக்க விரும்புகிறீர்களோ அந்த செல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Format Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Number என்னும் டேபில் கிளிக் செய்திடவும். இங்கு Category என்பதில் Fraction என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் இங்கு Type என்ற பிரிவில் Up To Two Digits (21/25) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி ஓகே கொடுத்து வெளியேறவும். இனி இந்த செல்லில் பின்னங்கள் சரியாக அமையும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.