சரி முதலில் ஜாவவின் கட்டம் கொண்டுவர என்ன செய்ய வேண்டுமென்பதை பார்க்கலாம் உங்கள் பிளாக்கரில் நுழைந்து Edit HTML பகுதிக்கு சென்று உங்கள் வார்ப்புருவை தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் (முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மட்டுமே) இனி நிரலில் கிளிக்கி அதில் Ctrl + F அழுத்துவதன் மூலம் ]]>என்பதை கண்டுபிடியுங்கள் இனி அதற்கு மேலாக கீழிருக்கும் கோடிங்கை பிரதி எடுத்து அதற்கு மேலாக ஒட்டி விடவும்.
pre { background:#efefef; border:1px solid #A6B0BF; font-size:120%; line-height:100%; overflow:auto; padding:10px; color:#000000 } pre:hover { border:1px solid #efefef; } code { font-size:120%; text-align:left; margin:0;padding:0; color: #000000;} .clear { clear:both; overflow:hidden; }
மேலும் உங்கள் எழுத்தின் நிறம் பின்புல நிறம் போன்றவறை நீங்கள் விரும்பும் படி மாற்றிக்கொள்ளவும் அதற்கு தேவையான HTML கலர் தேர்ந்தெடுக்க HTML , HTML விரும்பும் வண்ணத்தை மாற்றிக்கொள்ளவும்.
சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பார்க்கவும்.
இனி இது போலான ஜாவா நிரலை உங்கள் பதிவில் கொண்டுவர நீங்கள் பதிவில் கொண்டு வர வேண்டிய நிரலை ஜாவா கன்வெர்ட்டர் தளம் சென்று நீங்கள் பதிவில் கொண்டு வர விரும்பும் நிரலை அந்த தளத்தில் கன்வெர்ட் செய்து கொள்ளுங்கள், கன்வெர்ட் செய்த நிரலை உங்கள் பதிவில் நேரடியாக பதிந்து கொள்ளலாம் ஆனால் மேலே கொடுத்துள்ள ஜாவா நிரலை அவசியம் உங்கள் வார்ப்புருவில் சேர்த்திருக்க வேண்டும். மேலும் வேறு ஏதாவது டெக்ஸ்ட்டை நீங்கள் வேறு படுத்தி காட்ட விரும்பினால் அதற்கு கன்வெர்ட் செய்ய வேண்டியது இல்லை அதற்கு பதிலாக டெக்ஸ்ட்டை
உங்கள் டெக்ஸ்ட்
இப்படி அமைக்கவும்.
நன்றி: http://about-new-blogger.blogspot.com
இனி அடுத்தது பதிவின் லேபிள் கொண்டுவருவது பற்றி பார்க்கலாம் உங்கள் பிளாக்கரை திறந்து Design என்பதை கிளிக்கவும் இனி Blog Posts என்பதில் Edit என்பதை கிளிக்கவும் இப்போது உங்களுக்கு ஒரு விண்டோ திறக்கும் அதில் Labels என்பதில் குறிச்சொல் கொடுக்கலாம் ஆனால் நீங்கள் எப்போதும் ஓரே விதமான பதிவுகள் மட்டுமே எழுதுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதற்கு மட்டுமே இது உபயோகப்படும் உதாரணத்துக்கு நீங்கள் கவிதையை மட்டும் எழுதுகிறீர்கள் என்றால் அங்கு குறிச்சொல்லாக கவிதை என கொடுத்து சேமித்தால் போதும் மேலும் சமுதாய தளங்களான கூகுள் பஸ், டிவிட்டர், முகபுத்தகம், பிளாக்கர், ஜிமெயில் போன்றவற்றிற்கான இனைப்பையும் எளிதாக ஏற்படுத்தலாம் மேலும் Reaction என்பதையும் நீங்கள் விரும்பும் வகையில் மாற்றிக்கொள்ளலாம்.
சில நேரங்களில் சமுதாய தளம் இனைக்கும் போது உங்கள் தளத்தில் வரவில்லையென்றால் பிளாக்கரில் Edit HTML பகுதிக்கு சென்று Ctrl + F அழுத்தி
சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பார்க்கவும்.
சமுதாய தளத்தில் தேவையில்லாதவற்றை நீக்குவதற்கு Edit HTML பகுதிக்கு சென்று ]]>
.sb-blog{display:none} .sb-twitter{display:none} .sb-facebook display:none} .sb-buzz{display:none} .sb- email display:none}
சந்தேகத்திற்கு படத்தையும் பாருங்களேன்.
லேபிள் கொண்டு வருவதற்கான இன்னொரு முறையையும் பார்க்கலாம் Edit Posts என்பதை திறந்து Label Actions என்பதில் உங்களுக்கு தேவையான குறிச்சொல்லை உருவாக்கி அதன் அருகில் இருக்கும் இருக்கும் கட்டத்திற்குள் டிக் மார்க் குறி ஏற்படுத்துவதன் மூலம் லேபிள் கொண்டுவர முடியும் கீழே படத்தையும் பாருங்களேன்.
அடுத்ததாக இன்னொரு முறையும் இருக்கிறது உங்கள் புதிய பதிவு எழுதும் நேரத்தில் Labels for this post என்பதன் அருகில் உங்கள் பதிவிற்கான குறிச்சொல்லை கொடுக்கலாம் படத்தையும் பாருங்களேன்.
மேலே உள்ளது போல எல்லாம் செய்தால் இனி உங்கள் பதிவிற்கு கீழ் லேபிள் இப்படியாக இருக்கும்.
பதிவு மிக நீளமாகவிட்டது என நினைக்கிறேன் இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருப்பின் பதிவிற்கு வாக்கும் பதிவை பற்றிய கருத்துரையும் அளிப்பதன் மூலம் இன்னும் நிறைய நண்பர்களுக்கு சென்றடைய நீங்கள் உதவலாமே.
Source : gsr-gentle.blogspot.com