1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Thursday, June 3, 2010

நிறுத்தக் குறியீடுகள் (Punctuation Marks)

இங்கே இணைக்கப் பட்டிருக்கும் நிழல் படத்தின் ஓலைச் சுவடிகளில் என்ன எழுதப் பட்டிருக்கின்றது என்பதை உங்களால் வாசித்து அறிய முடியுமா?

"நிச்சயம் முடியாது." என்பதுதான் பதிலாக இருக்க முடியும். (நீங்கள் ஒரு பழந்தமிழ் மொழி ஆய்வாளராக இருந்தால் சிலவேளை சாத்தியமாகலாம்.)

ஆம்! செம்மொழியாகிய எம்மொழி சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இப்படித்தான் எழுதப்பட்டு வந்துள்ளது.

அதாவது ஒரு வாக்கியம் வினா வாக்கியமா அல்லது வியப்பு வாக்கியமா என்பதையெல்லாம் வாசித்து உணர்ந்துக் கொள்வதற்கான கேள்விக்குறி, வியப்புக்குறி போன்றவை எம்மொழியில் இருக்கவில்லை.

வாக்கியத்தின் இடையே பயன்படும் காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, மேற்கோள் குறிகள் போன்றனவும் இருக்கவில்லை. ஆக இன்று நாம் பயன்படுத்தும் நிறுத்தக் குறியீடுகளே எமது மொழியில் இருக்கவில்லை.

இன்னும் சொல்வதானால் சொற்களின் இடையே இடைவெளியிட்டு எழுதும் வழக்கும் எம்மொழியில் இருந்ததில்லை.

ஆனால் இவை எல்லாமே இன்று எமது பயன்பாட்டில் உள்ளன. இவை எப்படி எமது பயன்பாட்டிற்கு வந்தன என்றால்; ஆங்கில மொழியின் ஊடாகவே வந்தவைகளாகும். இன்று நாம் மட்டுமன்று உலகில் அனைத்து மொழியினரும் இவற்றின் பயன் உணர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஆம்! நிறுத்தக் குறியீடுகள் ( . , ; ; ' ? " " ! ' ' - _ / \ & # * ( ) [ ] { } < > ) என்பன; நாம் பேசும் பேச்சின் பொருளின் தன்மையை கேட்போர் எளிதாக விளங்கிக்கொள்ளவும், பேச்சின் ஊடாக உணர்வுகளை உணர்த்தவும், எமது பேச்சின் ஏற்ற இறக்க ஒலிப்புகளை; எழுத்து வடிவில் எழுதிடவும் வாசிப்போர் அதனை வாசித்து உணர்ந்திடவும் பயன்படும் இன்றியமையாதக் குறியீட்டு அடையாளங்கள் ஆகும். அதாவது ஒவ்வொரு வாக்கியத்தையும் தனித்தனியே பிரித்து அறிந்திடவும், வாக்கியத்தின் உற்பிரிவுகளை எளிதாக உணர்த்திடவும், வியப்பு, வினா போன்ற உணர்வுகளை எழுத்தில் காட்டிடவும் இவை உதவுகின்றன.

இந்த நிறுத்தக் குறியீடுகளை சரியாகப் பயன்படுத்தாது விட்டால் அவை; "உப்பில்லா பண்டம் குப்பையிலே" போன்று ஆகிவிடும். சிலவேளை முற்றிலும் தவறான பொருளைத் தந்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவே நிறுத்தக் குறியீடுகளின் பயன்பாட்டை சரியாக அறிந்து பயன்படுத்தல் மிகவும் முக்கியமானது.

நிறுத்தக் குறியீடுகளின் வரலாற்றை இங்கே பார்க்கலாம்.

இனி இந்த நிறுத்தக் குறியீடுகளின் வகைகளின் பட்டியலைக் கீழே பார்ப்போம்.

Punctuation Marksநிறுத்தக் குறியீடுகள்Symbols
Full stop/Periodமுற்றுப்புள்ளிaangilam.blogspot.
Colonமுக்காற்புள்ளி:
Semicolonஅரைப்புள்ளி;
Commaகாற்புள்ளி,
Apostropheaangilam.blogஆறாம் வேற்றுமைக்குறி'
Hyphenஇடைக்கோடு-
Dash (Long hyphen)இடைக்கோடு-
Underscoreகிடைக்கோடு_
Underlineஅடிக்கோடுஆங்கிலம்
Question Markகேள்விக்குறி?
Exclamation Markவியப்புக்குறி!
Forward slashமுன்வெட்டுக்கோடு/
Backslashபின்வெட்டுக்கோடு\
Double quotation marksஇரட்டைமேற்கோள் குறிகள்" "
Single quotation marksஒற்றை மேற்கோள் குறிகள்' '
Pound signநிறை நிறுத்தக்குறி#
Ampersand/andஇணைப்புக்குறி&
Asteriskநட்சத்திரக்குறி*
Ellipsisதொக்கிக்குறி. . .
Bracketsஅடைப்புக்குறிகள்( ) { } [ ] < >

இங்கே நிறுத்தக் குறியீடுகளின் பெயர்கள் மட்டுமே இடப்பட்டுள்ளன. இனி இவற்றினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை எதிர்வரும் பாடங்களில் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நன்றி : ஆங்கிலம் blogs

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.