நம்மிடம் உள்ள பைல்களை பிடிஎப் ஆக மாற்ற பல பிடிஎப் சாப்ட்வேர்கள் இருந்தாலும் இந்த பிடிஎப் சாப்ட்வேர் அளவில் குறைவானதாகவும் உபயோகிக்க எளிதாகவும் உள்ளது. 4 எம்.பி. அளவில் இலவச சாப்ட்வேராகவும் உள்ளது. சரி...இதை எப்படி பயன்படுத்துவது...அதற்கு முன் இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.இதை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் create க்கு பக்கத்தில் உள்ள கட்டத்தை கிளிக் செய்து உங்கள் கணிணியில் உள்ள டாக்குமெண்டை தேர்வு செய்யுங்கள். அடுத்து உள்ள create கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எங்கு பைலை சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.
இறுதியாக ஓ.கே. தாருங்கள். அவ்வளவு தான் உங்கள் பிடிஎப் பைல ரெடி. இதைப்போல நீங்கள் பிரிண்ட் வழியே சென்றும் டாக்குமெண்டை பிடிஎப்பாக மாற்றலாம். கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
dopdf தேர்வு செய்து ஓ.கே.கொடுங்கள். அவ்வளவுதான். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.