உள்ளூரில் இருந்து கொண்டு நம் இணையதளம் எந்தெந்த நாடுகளில்
எல்லாம் சரியாகத் தெரிகிறது என்று எளிதாக எந்த பணச்செலவும்
இல்லாமல் கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப் பதிவு.
சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறோம் என்றால் அது எல்லா
நாடுகளிலும் பிரச்சினை இல்லாமல் சரியாகத் தெரிகிறதா என்ற ஆசை
நம் அனைவருக்கும் இருக்கும் இதற்க்காக நாம் எல்லா நாடுகளில்
உள்ள தேடுபொறிகளுக்கும் சென்று சரியாகத்தெரிகிறதா என்றெல்லாம்
சரிபார்க்க வேண்டாம். இந்த இணையதளத்திற்க்குச் சென்று நாம்
எளிதாக சரி பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://just-ping.com
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி உள்ள
கட்டத்திற்க்குள் நம் இணையதளமுகவரியை கொடுத்து ping என்ற
பொத்தானை அழுத்தியதும் சில நிமிடங்களில் நம் இணையதளம்
உலகநாடுகள் அனைத்திலும் நம் இணையதளம் சரியாகத்தெரிகிறதா
என்று சோதித்து உடனடியாக நமக்கு காட்டியபடி முடிவுகளை
அறிவிக்கும். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே நாம் உலகம்
முழுவதிலும் நம் இணையதளம் எப்படித் தெரிகிறது என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம்.கண்டிப்பாக இந்த தளம் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும். இதே போல் எல்லா இணைய உலாவிகளிலும் நம்
இணையதளம் சரியாகத்தெரிகிறதா என்பதை அறிய இங்கே
சொடுக்கவும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.