1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Wednesday, July 28, 2010

தமிழில் இது எத்தனை பேருக்கு தெரியும்.....????????


பண்டைய தமிழ் எண் வடிவங்கள்...

தமிழ் எண்கள்

* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

தமிழ் எண்வரிசையும்... அளவீட்டு முறைகளும்...

ஏறுமுக எண்கள்

1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -
10000000000000000000 = பரார்த்தம் -
100000000000000000000 = பூரியம் -
1000000000000000000000 = முக்கோடி -
10000000000000000000000 = மஹாயுகம் -

இறங்குமுக எண்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்

நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.





இதுக்கு மேல் தமிழில் இருந்தால் நீக சொல்லுக... எனக்கு...


நன்றி : சிவா

பாடம் 12 : போட்டோசாப் (பார்ட் 3)



பாடம் 12 : போட்டோசாப் (பார்ட் 2)




பாடம் 12 : போட்டோசாப் (பார்ட் 1)





நீங்களே உங்கள் மெனுவை தயாரிக்கலாம்!

வேர்ட் தொகுப்பில் உள்ள மெனுவினை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ள இந்த பகுதியில் பல டிப்ஸ்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் படித்து பலரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்து தாங்கள் பயன்படுத்துவதோடு தங்கள் நண்பர்களிடமும் காட்டி மகிழ்கின்றனர். எடுத்துக் காட்டாக ஒருவர் என்னிடம் உங்களுக்கு வேர்டில் பைல் மெனுவைத் திறந்தால் எத்தனை பைல்கள் கீழாகப் பட்டியலிடப்படும் என்று கேட்டார்.

நான் வழக்கம்போல அவரையும் அவர் கம்ப்யூட்டரையும் அப்பாவியாகப் பார்த்தேன். என் கம்ப்யூட்டரில் 9 பைல்கள் கிடைக்கும் என்றார். அப்படியா! காட்டு என்றவுடன் வேர்டைத் திறந்து பைல் மெனுவினைக் காட்டினார். பின் ஒரு வெற்றி சிரிப்புடன் கம்ப்யூட்டர் மலரில் போட்டிருந்தார்கள் என்றார். இப்படி மெனுக்களை நமக்கேற்றபடி வளைக்காமல் நாமே நம் வசதிக்கேற்ப மெனுக்களை உருவாக்கினால் என்ன! உருவாக்கலாமா! அதற்கேற்ற வழிகளை இங்கு பார்ப்போம்.

இதற்கு Customize windowI ஐ முதலில் பெற வேண்டும். இதனைப் பெற Tools மெனு சென்று Customize ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது எந்த டூல்பாரிலாவது ரைட் கிளிக் செய்து அதில் Customize என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். Customize விண்டோ திறக்கையில் Commands டேப் செல்லவும். இடது பக்கமாக Categories list பட்டியல் கிடைக்கும். இந்த பட்டியலில் கீழாகச் சென்று New Menu என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நியூமெனு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மவுஸ் பாய்ண்ட்டரை கமாண்ட்ஸ் லிஸ்ட்டில் வலது பக்கமாகக் கொண்டு செல்லவும். இப்போது New Menu கட்டளையை அப்படியே கஸ்டமைஸ் விண்டோவிலிருந்து இழுத்துச் சென்று புரோகிராம் விண்டோவின் மேலாக விடவும். அல்லது இங்கே இருக்கின்ற மெனுக்களில் ஏதாவது ஒரு இடத்தில் விட்டுவிடவும். இப்போது மெனு பட்டியலில் New Menu என ஒரு மெனு இருப்பதனைக் காணலாம். கஸ்டமைஸ் விண்டோ இன்னும் திறந்திருக்கும் நிலையில் New Menu பெயரின் மீது ரைட் கிளிக் செய்திடவும். அங்கு எழும் பாப் அப் மெனுவில் “Name” என்று ஒரு பீல்டு இருக்கும். அதில் கிளிக் செய்து ஒரு புது பெயர் தரவும். உங்களுக்குப் பிடித்த நீங்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் ஒரு பெயராக இருக்கலாம். இனி என்டர் கீயைத் தட்டுங்கள். ஆஹா! பாராட்டுக்கள். உங்களுக்காய் நீங்களே ஒரு மெனுவினை பில்கேட்ஸின் விண்டோஸுக்குள் உருவாக்கிவிட்டீர்களே. இனி கஸ்டமைஸ் விண்டோவில் உள்ள கமாண்ட் டேபைப் பயன்படுத்தி என்னவெல்லாம் உங்கள் நியூ மெனுவில் இருக்க வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அவை அனைத்தையும் தேடிப் பிடித்து இழுத்து போடவும். ஆசையில் நிறைய கமாண்ட்ஸைப் போட்டுவிட்டீர்களா! அப்படியானால் அவற்றை இரண்டாகப் பட்டியலிடலாமே! மெனுவில் உள்ள கமாண்ட் ஒன்றில் ரைட் கிளிக் செய்து அதில் Begin A Group என்பதில் கிளிக் செய்திடவும். இந்த மெனுவில் உள்ளவற்றில் அதில் கர்சரைக் கொண்டு சென்று இழுத்து எப்படி வேண்டுமானாலும் வரிசையை அமைத்துக் கொள்ளலாம். எனவே பொறுமையாக எப்படி அமைத்தால் நன்றாக இருக்குமோ அப்படி அவற்றை வகைப் படுத்தவும். இதில் எப்போது மாற்றங்கள் ஏற்படுத்த விரும் புகிறீர்களோ அப்போதெல்லாம் மேலே கூறியபடி மெனுவிற்குள் சென்று மாற்றங்களை ஏற்படுத்தி சேவ் செய்து கொள்ளலாம். நிச் சயம் இது போல புதிய மெனுவினை நீங்கள் எல்லாரும் ஏற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா!

Tuesday, July 27, 2010

எக்ஸெல் தொகுப்பில்ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற

எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர்க் ஷீட்களை அதன் ஒர்க் புக்கில் இடம் மாற்றி வைக்கலாம். வேறு ஒர்க் புக்கிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அப்படியே கொண்டு செல்லலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். அதே ஒர்க் புக்கில் ஒர்க் ஷீட்டின் இடத்தை மாற்ற அதற்கான ஷீட் டேபில் கிளிக் செய்திடவும். கிளிக் செய்தவாறே மவுஸை விடாமல் இழுக்கவும். இழுத்து வந்து எந்த இடத்தில் ஒர்க் புக்கினை வைத்திட வேண்டுமோ அந்த இடத்தில் வைத்திட வும். அப்படி இழுக்கையில் எக்ஸெல் சிறிய முக்கோணம் ஒன்றைக் காட்டும். எந்த இடத்திற்கு ஒர்க் புக் இழுத்துச் செல்லப்படுகிறது என்பதைக் காட்டும். இன்னொரு ஒர்க்புக்கிற்கு எப்படி ஒர்க் ஷீட்டை இழுத்துச் செல்வது என்று பார்ப்போம்.

1. ஒர்க் ஷீட்டிற்கான ஷீட் டேபில் ரைட் கிளிக் செய்திடவும்.
2. இப்போது கிடைக்கும் மெனுவில் Move அல்லது Copy என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. இதில் To Book என்ற டிராப் டவுண் லிஸ்ட் கிடைக்கும். இதில் புதிய ஒர்க் புக்கும் உருவாக்கலாம்.
4. புதிய ஒர்க் புக்கில் உள்ள ஷீட்களில் எந்த ஷீட்டுக்கு முன்னாலும் பின்னாலும் இதனை விட்டுவிடலாம். அல்லது Move தேர்ந்தெடுத்து முடிக்கலாம்.
5. செய்வதற்குப் பதிலாக காப்பி செய்திடத் திட்ட மிட்டால் Create a Copy Check Box என்பதில் கிளிக் செய்து செயல்படவும்.
6. அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

வேர்ட் ஷார்ட் கட்

வேர்ட் தொகுப்பிற்கென பல ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமக்கு அடிக்கடி பயன்படுத்தக் கூடியதாக ஒரு சில உள்ளன. வாசகர்கள் அவற்றை அவ்வப்போது வெளியிடுங்கள் என்று கேட்டு கடிதங்கள் எழுதுகின்றனர். எனவே கீழே தரப்பட்டுள்ளவற்றை நீங்கள் முன்பு இம்மலரில் படித்திருந்தாலும் இதனையும் மனதில் கொள்ள படித்து வையுங்கள்; பயன்படுத்துங்கள்.

Alt + F10 – விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறது

Alt + F5 – விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.

Ctrl + Shift + A தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பிடல் எழுத்துக் களாக மாற்றுகிறது. இதனை Shift+F3 என்ற கீகளூம் மேற் கொள்ளும்.

Shift + F2– தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லாமல் காப்பி செய்கிறது. காப்பி செய்ததனை பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தினால் போதும்.

Ctrl+ Backspace பின்புறமாக ஒரு சொல்லை அழித்திடும். ஆனால் இது காப்பி செய்யப்பட மாட்டாது.

Ctrl+W, Ctrl+F4 – இந்த இரண்டு கீ இணைப்புகளும் அப்போது பணியாற்றிக் கொண் டிருக்கும் பைலை சேவ் செய்திடவா என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்டுவிட்டு பின் அழுத்தும் கட்டத்திற்கேற்றபடி பைலை மூடும்.

Alt + Ctrl + S பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்டோவினை படுக்கை வாக்கில் பிரிக்கும் கோடு கிடைக்கும். பின் அந்த கோட்டினை நகர்த்தி விண்டோவைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.

Ctrl + Shift + D தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் கீழாக இரு கோடுகள் இடப்படும். இதனை நீக்குவதற்கு மீண்டும் இதே கீகளைப் பயன்படுத்தலாம்.

F5 அல்லது Ctrl+G செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆவணத்தில் குறிப்பிட்ட பக்கத்திற்குச் சென்று சொற்களைத் தேடி அவற்றிற்குப் பதிலாக வேறு சொற்களை அமைத்திட இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.

Ctrl+H ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைக் கண்டுபிடித்து அதற்குப் பதிலாக நாம் தேர்ந்தெடுக்கும் அல்லது அமைக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டும்.

Ctrl+F2 அனைத்து பக்கங்களின் அச்சு தோற்றத்தைக் காட்டும்.

Alt F, I பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆவணத்தின் பிராபர்ட்டீஸ் பார்க்க இந்த கீகளை வரிசையாக அழுத்தவும்.

Shift + F5 ஆவணத்தில் முன்பு டெக்ஸ்ட்டை செருகிய இடத்திற்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். இது போல மூன்று முந்தைய இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதன்பின் மீண்டும் பழைய இடத்திற்கு வந்துவிடும். இது மிகவும் பயனுள்ள ஒரு ஷார்ட் கட். இதனால் ஒரு ஆவணத்தைத் திறந்திடுகையில் அதனை முன்பு பயன் படுத்துகையில் எந்த இடத்தில் எடிட் செய்து கொண்டிருந்தீர்களோ அந்த இடத்திற்கு இந்த கீகளைப் பயன்படுத்திச் சென்று விடலாம்.

Ctrl + >
தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை அதிகரிக்கச் செய்திடும். அளவு 12க்குப் பின் மெனுவில் இருப்பது போல இரண்டு இரண்டாகக் கூட்டும். (கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால் இரண்டாவது கீயை அமைக்க ஷிப்ட் கீயை அழுத்த வேண்டியதிருக்கும்.)

Ctrl + ]
இது முந்தைய கீ அழுத்துதலில் இருந்து சற்று வேறுபட்டது. இந்த கீகள் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை ஒவ்வொரு பாயிண்ட்டாக அதிகரிக்கச் செய்திடும்.

Ctrl + Shift + H தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை மறைத் திடும். மீண்டும் அழுத்த அவை கிடைத்திடும்.

Alt + Shift + D நீங்கள் உருவாக்கிடும் ஆவணத்தில் ஒரு இடத்தில் அன்றைய தேதியை டைப் செய்திட விரும்புகிறீர்கள். அதற்காக அந்த தேதியை டைப் செய்திட வேண்டியதில்லை. பலருக்கு தேதி நினைவிலும் இருக்காதே. இதற்காக இந்த கீகளைப் பயன்படுத்துங்கள். அன்றைய தேதி அழகாக வந்து உட்கார்ந்துவிடும்.

Alt + Shift + T மேலே சொன்னது போல ஓர் ஆவணத்தில் அப்போதைய நேரத்தை அமைத்திட இந்த கீகளை அழுத்துங்கள். நேரம் அழகாக டைப் செய்யப்பட்டுவிடும்.

Ctrl + Shift + W வேர்ட் டாகுமெண்ட்டில் அடிக் கோடிட கீயை அழுத்தினால் அது சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடிடுகிறது. அது போல அல்லாமல் சொற்களுக்கு அடியில் மட்டும் கோடு போட இந்த கீகளைப் பயன்படுத்தவும்.

Alt + F11 வேர்ட் தொகுப்பில் பணியாற்று கையில் விசுவல் பேசிக் எடிட்டிங் என்விரோன்மெண்ட்டுக்கு மாற வேண்டுமா? இந்த கீகளைப் பயன்படுத்தவும்.

Alt V, H ஆவணத்தின் ஹெடர் பகுதியில் உள்ள தலைப்பை எடிட் செய்திட அந்த இடத்திற்குச் செல்ல இந்த கீகளைப் பயன்படுத்தவும்.

Shift + F7 ஒரு சொல் சார்ந்த பிற சொற்களைக் காட்டும் நூலுக்கு தெசாரஸ் என்று ஆங்கிலத்தில் பெயர். ஆங்கில சொல் ஒன்றுக்கு சார்ந்த சொல் வேண்டும் என்றால் இந்த கீகளை அழுத்தவும்.