1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Friday, September 24, 2010

சீனாவின் நவீன ஸ்ட்ரட்லிங் பஸ்

போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.

வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் வாகனங்களின் வசதி கருதியும் நவீன பயணிகள் பஸ் ஒன்றினை சீனா அடுத்த வருடமளவில் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டமிடவுள்ளது.

சீனாவின் தலைநகரான சனத்தொகை நெரிசல் மிக்க பீஜிங் நகரிலேயே இது பரீட்சிக்கப்படவுள்ளது.

மேற்படி பஸ்ஸின் கீழ்ப்பாகம் அகன்று விரிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு கீழாகவுள்ள இடைவெளியில் கார்கள் மற்றும் 1.55 முதல் 1.6 மீற்றர் வரை உயரம் கொண்ட வாகனங்கள் பயணிக்க முடியும்.

இது 'ஸ்ட்ரட்லிங் பஸ்' என அழைக்கப்படுகின்றது. 

இந்நவீன பஸ், கடந்த மே மாதம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச 'ஐ-டெக் எக்ஸ்போ' கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதற்கான விசேட உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. 

இதன் மேற்பாகத்தில் சுமார் 1200 முதல் 1400 பேர் வரை பயணிக்கலாம்.

மேலும் இதனுள் சூரிய ஒளி அதிகளவில் உட்புகுவதால் பயணிகள் தங்கள் மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தொன்று ஏற்படின் அதிலிருந்து தப்புவதற்காக விமானங்களில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படவுள்ளது.

பெரிய அளவிலான வாகனங்கள் இதன் கீழ் பகுதியினுள் நுழையாமல் தடுப்பதற்காக விசேட சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன. 

இது பாவனைக்கு வருமிடத்து, வீதி நெரிசல் பெருமளவில் குறையுமென சீன போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.


ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: இந்த நூற்றாண்டின் மத்தியில் முழுவதும் மறையும்..!!!


ஓசோனின்  தற்போதய நிலை

பிரபஞ்சத்தில் இருந்து வரும் பல்வேறு ஆபத்தான ஒளிக்கற்றைகளில் இருந்து, பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டையை, இயற்கை மெல்ல சரி செய்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில், ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை, முழுமையாக மூடப்பட்டு விடும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலையில், மனித குலத்தை மிரட்டும் மிகப் பெரிய விஷயமாக புவி வெப்பமாதல் உள்ளது. பூமி உருண்டையில், வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவுவதும், ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதும், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.புதிய நோய்கள், விவசாய உற்பத்தி பாதிப்பு, பருவ நிலை மாற்றம் என, பல பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புவி வெப்பம் அதிகரிப்பிற்கு மனித தவறுகளால், பூமியின் மேற்பரப்பில், போர்வை போல் போர்த்தப்பட்டுள்ள ஓசோன் படலத்தில், ஓட்டை விழுந்தது முக்கிய காரணம்,இதை பற்றி முந்தய பதிவில் பார்த்தோம் .

 சூரியனில் இருந்து வரும் புற ஊதா உள்ளிட்ட மனிதர்களை பாதிக்கும் கதிர்களை தடுத்து, வெப்பத்தை பூமிக்கு அனுப்பும் கேடயமாக இருப்பது ஓசோன் படலம். அதிகரித்து வரும் கார்பன் கழிவுகள் காரணமாக, பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூமிக்கு பாதுகாப்பு அளித்து வரும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது என்று, 1970ம் ஆண்டு கண்டறியப்பட்டது.அண்டார்டிக் கண்டத்தின் மேலே உள்ள பகுதில் இருக்கும் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை, சிறிது சிறிதாக பெரியதாகி வருவதாக, 1980 ஆண்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.ஓசோனில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக, புறஊதாக்கதிர்களால் மனிதர்களுக்கு தோலில் அழற்சி, கண்ணில் கேட்ராக்ட், தோல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்றும், தாவர வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, 1987ம் ஆண்டு 196 நாடுகள் மாண்ட்ரீல் நகரில் கூடி, ஓசோன் படலத்தின் ஓட்டை மேலும் பெரியதாகாமல் தடுப்பது எப்படி என்று ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர், ஓசோன் படலத்தை பாதுகாக்க 196 நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன.இந்நிலையில், நான்கு ஆண்டுகள் ஓசோன் குறித்து 300 விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதன் தொகுப்பை அளித்துள்ளனர். அதன்படி, கார்பன் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஓசோனை பாதிக்காத பொருட்களை பயன்படுத்துவதால், ஒவ்வொரு ஆண்டும் 10 ஜிகா டன் கார்பன் கழிவுகள் உருவாவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால், ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை பெரிதாவது தடைபட்டு, சுருங்கி வருகிறது. 1980ம் ஆண்டில் இருந்த நிலைக்கு, வரும் 2045 முதல் 2060ம் ஆண்டு காலகட்டத்தில் ஓசோன் படலத்தின் ஓட்டை அடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் துருவத்தில் ஏற்பட்டுள்ள ஓசோன் படலம் ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் அடைவு ஏற்பட முயற்சிப்பதும், பருவநிலை மாறுபடும் போது ஓட்டை அடைபடுவதில் தடை ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Thursday, September 23, 2010

பயனுள்ள இலவச வீடியோ கன்வெர்டர்

நாம் இணையத்தில் தரவிறக்கம் செய்தது, அல்லது நண்பர்கள் மூலமாக கிடைத்தது என பலத்தரப்பட்ட வீடியோ கோப்புகளை நமது கணினியில் வைத்திருப்போம். ஒரு சில சமயங்களில், இது போன்ற ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மற்றொரு கோப்பு வடிவிற்கு மாற்ற வேண்டிவரும் (மொபைல் போன்களுக்கும்.. வேறு சில பயன்பாட்டிற்கும்)
இது போன்ற பயன்பாட்டிற்கு நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது Any Video Converter எனும் இலவச மென்பொருள் கருவி. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.. ஓட்டு போட்டுட்டு தரவிறக்கி கொள்ளுங்கள்) 
இந்த மென்பொருள் கருவியில் நாம் பயன்படுத்தக் கூடிய கோப்பு வகைகள்:- 

Input formats: avi, asf, mov, rm, rmvb, flv, mkv, mpg, 3gp, m4v, vob, YouTube videos and more

Output formats: avi, mp4, wmv, swf, flv, mkv, MPEG-1 and MPEG-2, mpg (PAL or NTSC), mp3, wma, ogg, aac, wave, m4a

இதை உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, Spyware Terminator ஐ நிறுவ வேண்டுமா என்று கேட்கும் திரை வரும் பொழுது, Do not install Spyware Terminator தேர்வு செய்து, உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். 
இதனை இயக்கி, Add Video பொத்தானை அழுத்தி தேவையான வீடியோவை உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 
பிறகு வலது புறமுள்ள Profile லிஸ்டில் க்ளிக் செய்து தேவையான கோப்பு வடிவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Preview வலது புற பேனில் தோன்றும், இதை பார்த்து, சரியாக உள்ளதெனில், மேலே உள்ள Convert  பொத்தானை அழுத்தினால் போதுமானது. 
நாம் தேர்வு செய்திருந்த கோப்பு வடிவிற்கு கன்வெர்ட் செய்து சேமிக்கப்படும். இதிலுள்ள மாற்றொரு சிறப்பம்சம், யூ டியுப் வீடியோக்களை தரவிறக்கி கன்வெர்ட் செய்வதுதான். இதற்கு, மேலே உள்ள YouTube பொத்தானை அழுத்தி Youtube video விற்கான url ஐ கொடுத்து OK பட்டனை சொடுக்கவும். 
இப்பொழுது லிஸ்டில் வந்துள்ள YouTube video வை வலது க்ளிக் செய்து,
தரவிறக்கம் செய்து கொண்டு பிறகு, கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 
இதன் தரமும் வேகமும் மற்ற கருவிகளைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. 

கணனி சம்பந்தமான இலவச டுட்டோரியல் தளம்




சிறு வயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது.
எனவே அவரவருக்கு எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறதோ அதனை மட்டும் தேடிப் பிடித்து கற்றுக் கொள்கிறோம். இணைய தளம் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். டிஜிட்டல் போட்டோ எடுத்து அவற்றை கம்ப்யூட்டரில் இணைக்க முயற்சிக்கிறீர்கள். எடுத்த போட்டோக்களை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். இதற்கெல்லாம் உதவிக் குறிப்புகளை நாடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கென உள்ள இந்த தளம் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். 

இத்தகைய உதவியினை வளமாக நல்ல டுட்டோரியல் பாடங்களாகப் பதிந்து வைத்து இந்த இணையதளம் தருகிறது. இதன் முகவரிhttp://www.goodtutorials.com/ இந்த செய்தியை எழுதும் போது இந்த தளத்தில் 25,049 டுடோரியல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 பிரிவுகளாக இந்த வழிகாட்டும் தளங்கள் உள்ளன. அவை : CSS, Flash, HTML, Illustrator, Java, JavaScript, Maya, Photography, Photoshop, PHP, Ruby, Ruby on Rails and 3ds Max   என பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் புதியதாக பதியப்பட்ட 15 உதவித் தளங்களின் பட்டியல் காணப்படுகிறது. 

நான் பார்த்த போது போட்டோ ஷாப்பிற்கான இன்டர்பேஸ் குறித்த டுடோரியல் காணப்பட்டது. இதனைத் திறந்து பார்க்கையில் போட்டோ ஷாப் குறித்து பல செய்திகள் கிடைத்தன. இந்த உதவிக் கட்டுரைகளின் கீழாக மேலும் பல உதவி தரும் தளங்களுக்கான லிங்க்குகள் உள்ளன. அவற்றையும் கிளிக் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதன் கீழ் சில பிரிவுகளும் உண்டு. அவை: Rating, Clicks, Comments, Save, Share and Report இந்த தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். 

எந்த கட்டுரையை சேவ் செய்திட வேண்டுமென்றால் சேவ் டேபைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். அப்போது இன்னொரு லிங்க் தரப்பட்டு அங்கு சேவ் செய்யப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இந்த கட்டுரைகள் சேவ் செய்யப்பட்டு இருக்கும். உங்கள் அக்கவுண்ட்டை ஏற்படுத்த இந்த தளத்தில் பதிவு செய்வதும் எளிது. 

நிச்சயமாய் இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இன்றே இந்த தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம் உங்கள் பேவரிட் தளப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Tuesday, September 21, 2010

உலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு !!! குளோபல் பினான்ஸ் அறிவிப்பு!!!

அமெரிக்காவில் வெளிவரும்  என்கிற பத்திரிகை ‘உலகின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளின் பட்டியலை இன்று (செப்டம்பர் 20, 2010) வெளியிட்டது. ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி.யை பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உலகத்தின் முதல் பணக்கார நாடாக கத்தார் தேர்வாகி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமான வருமானம் இயற்கை எரிவாயு  மூலம் கத்தார் நாட்டிற்க்கு கிடைத்துள்ளது. அந்த நாடு ஒவ்வரு வருடமும் 77 மில்லியன் டன்  இயற்கை எரிவாயு உற்பத்தி செய்கிறது.

கத்தார் நாட்டின் ஜி.டி.பி மதிப்பு  90,149 டாலர்கள். பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த லக்செம்பெர்க்கை இந்த ஆண்டு கத்தார் தாண்டி உள்ளது.   79,411 டாலர்கள் மத்திபுள்ள லக்செம்பெர்க் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

அடுத்த மூன்றாவது இடத்தை நார்வேயும் (ஜி.டி.பி மதிப்பு  52,964 டாலர்கள்), நான்காம் இடத்தை சிங்கப்பூரும் (ஜி.டி.பி மதிப்பு  52,840 டாலர்கள்), ஐந்தாவது இடத்தை ப்ரூனேவும் (ஜி.டி.பி மதிப்பு  48,714 டாலர்கள்)பெற்றுள்ளது.  ஆறில் இருந்து பத்தாவது இடங்களை அமேரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்த், நெதர்லாந்த் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெற்றுள்ளது.

அரபு நாட்டை பொறுத்த வரையில் கத்தார் அருகில் எதுவுமே இல்லை. கத்தாரை அடுத்து குவைத் அரபு நாடு பட்டியலில் இருக்கிறது. குவைத் பதினான்காவது இடத்தில இருந்தும் அதன் ஜி.டி.பி மதிப்பு  38.984 டாலர்கள் என்பது கத்தார் மதிப்பிற்கு பாதி கூட இல்லை.

36,167 டாலர்கள் ஜி.டி.பி மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரகம் 18 வது  இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 128 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு  3,176 டாலர்கள்),  இலங்கை 113 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு  5,026 டாலர்கள்)


முதல் பத்து இடத்தை பிடித்த நாடுகளும் அதன் ஜி.டி.பி மதிப்புகளும்:
1    கத்தார்   90,149 டாலர்கள்
2    லக்செம்பெர்க்    79,411  டாலர்கள்
3    நார்வே    52,964    டாலர்கள்
4    சிங்கப்பூர்   52,840    டாலர்கள்
5    ப்ரூனே    48,714    டாலர்கள்
6    அமெரிககா    47,702    டாலர்கள்
7    ஹாங்காங்    44,840    டாலர்கள்
8    சுவிட்சர்லாந்து    43,903   டாலர்கள்
9    ஹாலந்து    40,601    டாலர்கள்
10    ஆஸ்த்ரேலியா    39,841    டாலர்கள்
 நன்றி : odagam.com

Saturday, September 18, 2010

Hard Disk கின் அழிந்த தகவல்களை மீட்டு எடுக்கும் எளிய மென்பொருட்கள்..

_______________
கணினி ஒரு திறமைவாய்ந்த கண்டுபிடிப்புதான். இருந்தாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் தகவல்களை இழக்க கூடியது. இன்றைய காலத்தில் கணினி இல்லாமல் மனிதன் வாழ்கை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பயன்பாடு அதிகம் ஆகிவிட்டது.

மனிதனுடைய வாழ்நாள் தகவல்கள் அனைத்தையும் கணினியில் சேமிக்கும் காலம் வெகுதூரம் இல்லை. இன்னிலையில் Hard Drive வில் சேமித்து வைக்கும் தகவல்கள், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இழக்க நேரிட்டால் என்னவாகும். கணினி உபயோகிக்கும் பலர் இந்த அனுபவத்தை அடைந்து இருப்பீர்கள்.

கணினி அனுபவம் உள்ளவர்கள் சிலர் பாதிக்க பட்ட அந்த Hard disk கை தகவல்களை மீட்டு எடுத்து கொடுக்கும் நிறுவனங்களில் கொடுத்து மீட்டு இருப்பீர்கள். தகவல்களை மீட்டு எடுக்கும் சில மென்பொருட்கள் உள்ளன. இவற்றை கொண்டு நீங்களே தகவல்களை எளிதாக மீட்டு எடுக்கலாம்.
கணினியில் இருந்து தகவல்கள் அழிந்து போவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எந்த வகையிலேனும் நீங்கள் இழந்து இருந்தால் பரவாயில்லை. இந்த மென்பொருட்களை கொண்டு 90 -100 % வரை மீட்டு எடுக்கலாம். மீட்டு எடுக்கும் தகவல்களை வேறு இடத்தில சேமிப்பது நல்லது தகவல்களை மீட்டு எடுக்கும் சில முன்னணி மென்பொருட்களை இங்கு உங்களுக்கு தெரிவிக்கிறேன்

Digital Rescue Premium 3.1 ————Digital Rescue Premium 3.1 box shot

Advanced Disk Recovery—————Advanced Disk Recovery box shot

Recover My Files—————------------Recover My Files 4.6 box shot

Data Recovery Wizard-—————----Data Recovery Wizard 5.0.1 box shot

Total Recall 1.1-—————---------------Total Recall 1.1 box shot

Handy Recovery 4-—————=====Handy Recovery 4 box shot

Disk Doctors Windows Data Recovery-—————Disk Doctors Windows Data Recovery 2.0.1 box shot

R-Studio 5.2———--------------------------R-Studio 5.2 box shot

Quick Recovery—————--------------Quick Recovery box shot

GetDataBack 4.01-—————-----------GetDataBack 4.01 box shot



மேலே உள்ள எதுவும் இலவச மென்பொருட்கள் இல்லை.
இவற்றில் எனக்கு பிடித்தது Recover My Files மென்பொருள். இனி Hard Disk கின் தகவல்களை இழந்தால் கவலை வேண்டாம்.
நன்றி : படங்கள் மற்றும் தகவல் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

Wednesday, September 15, 2010

உலக ஓசோன் பாதுகாப்பு நாள் : ஓர் சிறப்பு கட்டுரை

ஓசோன்
{{{Caption}}}
Ozone-3D-vdW.png
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 10028-15-6
பண்புகள்
வேதியியல் வாய்பாடு O3
மோலார் நிறை 47.998 g·mol−1
தோற்றம் நீல நிற வளிமம்
அடர்த்தி 2.144 g·L−1 (0 °C), வளிமம்
உருகுநிலை 80.7 K, −192.5 °C
கொதிநிலை 161.3 K, −111.9 °C
நீரில் கரைமை 0.105 g·100mL−1 (0 °C)
Thermochemistry
Std enthalpy of
formation
ΔfHo298
+142.3 kJ·mol−1
Standard molar
entropy
So298
237.7 J·K−1.mol−1
தீநிகழ்தகவு
EU classification Oxidant (O)
Except where noted otherwise, data are given for
materials in their standard state
(at 25 °C, 100 kPa)

Infobox disclaimer and references
உலகில் வாழும் உயிரினங்களை சூரியனின் புறஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவரும் உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 16-ம் நாளினை ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக பன்னாட்டு அமைப்புகள் அனுசரித்து வருகின்றன. இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தென்மண்டல தலைமையகத்தில் பணியாற்றிய ஏ. குழந்தைவேலு மற்றும் நா. மாரிகிருஷ்ணன் இருவரும் ஓசோன் படலம் பாதுகாப்பு தினம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை வடிவமைத்துள்ளனர். தமிழக மக்களும் ஓசோன் படலத்தின் பணி மற்றும் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உணரும் விதமாக எளிய நடைமுறையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை. அதை இங்கு காண்போம்.
மண்ணில் உயிரினம் பிணியின்றி வாழ்ந்திட விண்ணில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. அதனை நினைத்து அதற்கு நன்றி நவிலவும் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்திடவும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பன்னாட்டு அமைப்புகளும் செப்டம்பர் திங்கள் 16-ம் நாளினை ஓசோன் நாளாக ஆண்டுதோறும் அனுசரிக்கின்றன. தற்போது ஓசோன் படலத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதன் விரிவான சுற்றுச்சூழலின் பாதுகாப்பற்ற தன்மை குறித்தும் அனைவரும் பேசி வருகின்றனர்.

ஓசோன் இருப்பிடம்:
பூமியிலிருந்து சுமார் 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம் வரை உள்ள வளிமண்டலப்பகுதி ஸ்ட்ரட்ரோ ஸ்பீயர் என்றழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இயல்பாக இடம் பிடித்துள்ள பிராணவாயு மூலக்கூறு மீது சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு தாக்குதல் ஏற்படுத்தி இரண்டு பிராணவாயு அணுவாக பிரிக்கப்பட்டு பின் இந்த அணுக்கள் பிராணவாயு மூலக்கூறுடன் கூடி ஓசோன் பிராணவாயு வடிவமாக உருவாகின்றது. ஓசோனை முதன் முதலாக கண்டறிந்தவர் சி.எப். ஸ்கோன்பின் என்பவராவார்.
ஓசோன் ஸ்ட்ரட்டோஸ்பியரில் உற்பத்தியானாலும் இதன் 90 விழுக்காடு ஸ்ட்ர்டடோஸ்பியரின் கீழ் பகுதியில் மட்டுமே உள்ளது. ஓசோன் படலம் முழுமையாக பூமியின் மேற்பரப்பில் மாற்றப்பட்டால் அதன் திண்மம் 2.5 மி.மீ முதல் 3.5 மி.மீ வரை இருக்கும்.

ஓசோன் அளவிடல்:
வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி டாப்சன் அலகினால் அளவிடப்படுகிறது. ஓர் இடத்தின் மொத்த ஓசோன் உலகில் 230 ஈம முதல் 500 ஈம வரை வேறுபடுகின்றது. ஓசோன் அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றில் சில (1) டாப்சன் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர் (2) ப்ருவர் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர் (3) ஜோடு மீட்டர் (4) பில்டர் ஓசோன் மீட்டர் எம்.83 (5) பில்டர் ஓசோன் மீட்டர் எம்.124 (6) மாஸ்ட் (7) ஆக்ஸ்போர்டு (8) சர்பேஸ் ஓசோன் பப்ளர் (9) எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட்.
இந்தியாவில் முதன் முதலாக ஓசோன் அளவிடும் பணி பேராசிரியர் ராமநாதன் என்பவரால் 1919-ம் ஆண்டு கொடைக்கானலில் துவக்கப்பட்டது. 1957-ம் ஆண்டு முதல் இந்திய வானிலை ஆய்வுத்துறை ஓசோன் அளவிடும் பணியை ஆரம்பித்தது. இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கீழ் தேசிய ஓசோன் மையம் இயங்கிவருகின்றது. ஓசோன் அடர்த்தியை அளவிட உலகெங்கிலும் சுமார் 450 நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் கொடைக்கானல், மவுண்ட் அபு, புதுடெல்லி, ஸ்ரீநகர், அகமதாபாத், வாரணாசி, புனே, நாக்பூர், மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஒன்பது இடங்களில் இந்த நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் புதுடெல்லி, புனே மற்றும் திருவனந்தபுரத்தில் மாதமிருமுறை ஓசோன் சோன்ட் பலூன் பறக்கச் செய்து வளிமண்டலத்தின் செங்குத்தான ஓசோன் மற்றும் வெப்ப வடிவுருவம் அளவிடப்படுகின்றன. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் ஓசோன் நிலையங்களால் ஓசோன் அளவினை கண்டறிய டாப்சன் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ப்ருவர் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், சர்பேஸ் ஓசோன் பப்ளர் மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் செல் முதலான கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மீதான ஓசோன் அளவு சராசரியாக 280 ஈம முதல் 300 ஈம வரை வேறுபடுகிறது.

அண்டார்டிகாவில் ஓசோன் ஓட்டை:
அண்டார்டிகா பனி கண்டத்தில் ஓசோன் அளவு பருவநிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக 300 ஈம நிலவுகிறது. ஆனால் வசந்த காலத்தில் (ஆகஸ்ட்-நவம்பர்) ஓசோன் அளவு சராசரி அளவில் 50 முதல் 60 விழுக்காடு வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த ஓசோன் குறைவே ``ஓசோன் ஓட்டை" என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜெ. போர்மன் தலைமையிலான ஆய்வுக்குழு அண்டார்டிகாவின் ஹாலேபே என்ற நிலையத்தில் 1970-ம் வருட மத்தியில் ஓசோன் அளவான அதன் சராசரி அளவு 350 ஈம ல் இருந்து வெகுவாக குறைந்து 1986-ல் இதன் அளவு 190 ஈம வாக குறைந்து காணப்பட்டதை முதன் முதலாக கண்டறிந்தது.

ஓசோன் அடர்த்தி குறைவிற்கான காரணங்கள்:
குளிர்காலத்தில் அண்டார்டிகா பனிப்பிரதேசம் மேல் நிலவும் துருவ இரவு அதிவேக காற்று ஓசோன் செறிவு மிகுந்த காற்றினை கீழ் அட்சரேகை பகுதியிலிருந்து துருவப்பிரதேசத்தினுள் அனுமதிக்காதது வசந்த காலத்தில் ஓசோன் அடர்த்தி குறைந்து இருப்பதற்கு ஒரு காரணமாகும். ஓசோனின் செங்குத்தான வடிவுருவம் ஆய்வின் வழியே அதன் அடர்த்தி சுமார் 10 கி.மீ முதல் 20 கி.மீ உயரத்தில் குறைந்து இருப்பது தெளிவாக காணப்படுகின்றது. துருவப் பிரதேசத்தில் ஓசோன் அடர்த்தி குறைவதற்கு காரணமாக விளங்குவது துருவ ஸ்ட்ரடோஸ்பரிக் மேகங்களை. இந்த மேகங்கள் மீது நிகழும் பல்வேறு வகையான வேதியில் செயல்பாடுகளின் போது குளோரின் வெளிப்படுகின்றது. இந்த குளோரின் அணு ஓசோனுடன் வினைபுரிந்து குளோரின் ஆக்சைடை வெளிப்படுத்துவதால் ஓசோன் செறிவு குறைகின்றது.
வளிமண்டலத்தில் ஸ்ட்ரடோஸ்பியர் பகுதியில் மேகங்கள் இல்லாதிருந்தாலும் அதிவேக காற்று நிலவுவதாலும் அதிகவேக ஜெட் விமானங்கள் வானில் பயணிக்க இந்த பகுதியை பயன்படுத்துகின்றன. இந்த பகுதியில் பறக்கும் ஒரு ஜெட் விமானம் ஒரு மணி நேரத்தில் சுமார் 3 டன் நைட்ரிக் ஆக்சைடை இயந்திரத்திலிருந்து வெளிப்படுத்துகின்றன. இந்த நைட்ரிக் ஆக்சைடு ஓசோனுடன் வினைபுரிந்து நைட்ரஜன் டை ஆக்சைடாகவும் பிராண வாயுவாகவும் மாறி ஓசோனின் அடர்த்தியை குறைக்கின்றன.
குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்தும் குளோர புளோர கார்பன்கள் வளிமண்டலத்தில் வெளிப்படும் போது நுண்ணுயிரிகளால் சிதைவுறுகிறது. ஸ்ட்ரடோஸ்பியரின் கீழ்பகுதியில் கலந்து ஓசோனுடன் வினைபுரிந்து ஓசோனின் அடர்த்தியை குறைத்து குளோரின்களாகவும், பிராணவாயுவாகவும் மாற்றிவிடுகின்றன. அண்மையில் பசும் கடில் வாயுக்களும் ஓசோன் குறைவிற்கு காரணமாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஓசோன் ஓட்டையின் சமீபகாலத்திய நிலை:
சமீப காலங்களில் ஓசோன் ஓட்டையின் பரப்பையும் ஓசோன் செறிவு குறைவினையும் அறிவியல் வல்லுநர்கள் செயற்கை கோள்கள் உதவியுடன் கணக்கிட்டு வருகின்றனர். அண்டார்டிகாவில் ஓசோன் ஓட்டையின் பரப்பு 1980-ம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மைத்தரி ஆய்வகமும் (படம் பார்க்க) 15 ஆண்டுகளாக ஓசோன் ஓட்டையின் நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றது. 2000-ம் ஆண்டு வசந்த காலத்தில் (ஆகஸ்ட்-நவம்பர்) மிகக் குறைந்த அளவு ஓசோன் 113 ஈம இருந்ததாக இந்த ஆய்வு மையம் பதிவு செய்துள்ளது.
ஓசோன் ஓட்டையின் பரப்பு ஆகஸ்ட் மாதத்தில் 10 மில்லியன் ச.கி.மீ. அளவில் துவங்கி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக அளவிற்கு விரிவடைந்து நவம்பர் மாத இறுதியில் குறைய ஆரம்பித்து டிசம்பர் முதல் வாரத்தில் ஓசோன் ஒட்டை முழுமையாக மறைந்து விடுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் ஓசோன் ஒட்டையின் பரப்பு அதிகபட்ச நிலையில் 25 மில்லியன் ச.கி.மீ. ஆக இருந்த நிலைமாறி 2000-ம் ஆண்டில் 28.3 மில்லியன் ச.கி.மீ. ஆக அதிகரித்திருந்தது. இந்த பரப்பளவு ஆஸ்திரேலியாவின் பரப்பளவினை போல் மூன்று மடங்கானது. ஆனால் 2002-ம் ஆண்டில் இதன் பரப்பு வெகுவாக குறைந்து 15 மில்லியன் ச.கி.மீ ஆக இருந்தது. இது கடந்த இருபது ஆண்டுகளில் மிகக் குறைந்த பரப்பளவு கொண்ட ஓசோன் ஓட்டை என்று கண்டறியப்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டில் ஸ்ட்ரட்டோ ஸ்பீரியன் கீழ்ப்பகுதியின் வெப்பம் அதிகரித்திருந்தும் மற்றும் துருவ சுழற்சி வலுவிழந்து குறைவான பகுதிக்குள் இருந்ததும் ஓசோன் ஓட்டையின் பரப்பு குறைவிற்கான காரணங்கள் என்பது விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு (2003) அண்டார்டிகாவில் இயல்பிற்கு மாறாக ஓசோன் குறைவு 6 வாரங்களுக்கு முன்னரே துவங்கிவிட்டது. ஸ்ட்ரட்டோஸ்பீரியரின் வெப்பம் குறைந்துள்ளதாகவும் அண்டார்டிகாவில் ஆஸ்திரேலியாவின் ``மாசான்" ஆய்வகம் அருகே துருவ ஸ்ட்ரட்டோஸ்பரிக் மேகங்கள் தென்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதன் காரணமாக இந்த ஆண்டு ஓசோன் ஓட்டையின் பரப்பும் அதிகரிக்கக் கூடும என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஓசோன் பூமியில் வாழும் உயிரினங்களை சூரியன் வெளிப்படுத்தும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து காப்பாற்றும் போர்வையாக (கம்பளமாக) வளிமண்டலத்தில் இருந்து செயல்படுகிறது. இந்த புற ஊதா கதிர்வீச்சின் காரணமாக கண்பார்வை குறைவும் தோலில் புற்றுநோயும் உண்டாகின்றது.
வளிமண்டலத்தில் ஓசோனின் அடர்த்தி குறைவால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் முழமையாக உறிஞ்சப்படாமல் பூமியை வந்தடையும் போது பூமியின் உயிரினங்கள் வாழுவதற்கான சூழலின் சமன் நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. பூமியின் சராசரி வெப்பநிலை உயரும், அதே சமயத்தில் வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் பங்கும் உயர்கிறது. கரியமில வாயு பூமி வெளிப்படுத்தும் அகச்சிவப்பு கதிர்வீச்சினை உறிஞ்சி பூமியின் சராசரி வெப்பநிலையை மேலும் அதிகரிக்கின்றது. இந்த விளைவாலும் பூமியின் சராசரி வெப்பநிலை உயரும் போது பனிப்பிரதேசங்களில் மிகவும் அதிகமான பனி உருகி கடல் மட்டம் உயர்கிறது. கடல்மட்ட உயர்வின் விளைவால் கடலருகே உள்ள பூமியின் பெரும்பான்மையான நிலப்பகுதி நீரால் சூழப்பெற்று உயிரினங்கள் வாழும் நிலப்பகுதி வெகுவாக குறைந்து விடும் அபாயம் பூதாகரமானதாக தெரிகின்றது. கடல்வாழ் உயிரினங்கள் புற ஊதாக் கதிர்வீச்சுக்கு ஆளாகி அழிந்துவிடக்கூடிய அபாயம் உள்ளது.
இவ்விதமான உயிரினங்களை வாழ்விக்க வளிமண்டலத்திலிருந்து செயல்படும் ஓசோனின் அடர்த்தி குறையாது காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு மனித வர்க்கத்தினர் அனைவருக்கும் உரியதே. ஓசோனை சிதைக்கும் எந்தவொரு செயல்பாட்டையும் பூமியில் மேற்கொள்ளமாட்டோம் என்று சூளுரைப்போம்.

Source :
http://en.wikipedia.org
http://ozonewatch.gsfc.nasa.gov

Monday, September 13, 2010

கூகிள் வரலாறு

 கூகிள் இன்க்.
 Google Inc.
Google.png
வகை பொது (NASDAQGOOG), (வார்ப்புரு:Lse)
தொடக்கம் மென்லோ பார்க், கலிபோர்னியா (செப்டம்பர் 7 1998)[1]
தலைமையகம் மவுன்டன் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முக்கியமான நபர்கள் எரிக் ஷ்மித், டைரக்டர்
சேர்ஜி பிரின், தொழில்நுட்ப தலைவர்
லாரி பேஜ், Products President
ஜோர்ஜ் ரேய்ஸ், CFO
தொழில்துறை இணையம், மென்பொருள்
விற்பனை பொருள் see: list of Google products
வருவாய் US$10.604 billion 73% (2006)[2]
நிகர வருமானம் US$3.077 billion 29% (2006)[2]
ஊழியர்கள் 15,916 (செப்டம்பர் 30 2007)[3]
அடைமொழி பிசாசு மாதிரி இருக்காதீர்
வலைத்தளம் www.google.com
கூகுள் ஒரு பிரபல்யமான தேடுபொறியாகும். இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப்படுகின்றது.

ஆரம்ப வரலாறு

 

செர்ஜே பிரின்
லாரி பேஜ்
கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக(Ph.D.) லிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் ல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான செர்ஜே பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர்.
இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணினியின் திரையில்) கொடுத்ததை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
தேடப்படும் விடையம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிட கொட்டகையில் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். கார் கொட்டகையில் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999ம் மார்ச் மாதம் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு மாற்றலாகின. அங்கு வெவ்வேறு இரு இடங்களில் "கூகிள்" இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்று. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி கூகிள்பிளெக்ஸ் (googolplex) எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006 இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை கூகிள் கொள்முதல் செய்தும் கொண்டது.
கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து கூகிள் சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும், இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும் விகிதத்திலும் விற்கப்படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். கோட்டு.கொம் என்ற இதன் பெயர் "ஒவேச்சர் சேர்விசஸ்" (Overture Services) ஆகவும் பின்நாளில் யாகூ! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்றிங்" (Yahoo! Search Marketing) ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.
ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிக பிரபலம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்ஃபோர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை 'கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது' என அர்த்தப் படுத்தியும் உள்ளது. கூகிள் தேடுபொறி தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.

கூகிளின் பங்குச் சந்தை வருகை

கூகிள் தேடுபொறி 1998 செப்ரம்பர் 7இல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நிறுவப்பட்டது. இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் சிறப்பு பங்கு வகிக்கும் கூகிள் 2004ம் ஆகஸ்ட் 19ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்துகொண்டது. இந்த நிறுவனத்தில் 15,916 முழுநேர வேலையாட்கள் (2007 செப்டம்பர் 30ம் கணக்கெடுப்பின் படி) பணியாற்றுவதுடன் இதுவே நாஸ்டாக் (NASDAQ) இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியதுமாகும். லாரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகியோரினால் சேர்ந்து உருவாக்கப்பட்ட கூகிள் நாஸ்டாக் (NASDAQ) பங்குச்சந்தையில் வந்த 2004ம் ஆகஸ்டு 19 அன்று $1.67 பில்லியன்களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியன் மேலாக கூகிள் நிறுவனம் மதிப்பாகியிருந்தது. படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள், ஆரம்பத்தில் இருந்த விளம்பர யுக்தி விஸ்தரிப்பு, இணைய மின்-அஞ்சல் (webmail), இணையவழி வரைபடம்(Google Earth), அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணையவழி வீடியோ(video) வையும் இணைத்து கொண்டதன் மூலமாக பன்மடங்கு (4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன் 2005ம் யூன் மாதம் $52 பில்லியன் சந்தைப் பெறுமதியுடன் $7 பில்லியன் பணத்தினையும் கூகிள் தம் வசம் வைதிருந்தது. இத்தனைக்கும் "பிசாசு மாதிரி இருக்காதீர்" (don't be evil) (இதையே தனது வியாபார அடை மொழியாக கூகிள் பதிவு செய்திருந்தது.), என மற்றயவர்களை ஆரம்பத்தில் இருந்து கூறிவந்த கூகிள் தற்போது தனது நிலைப் பாட்டினை நியாயப்படுத்தி வருகிறது. மேலும், கூகிள் தனது தேடுபொறியின் இலச்சனை (logo) யில் பலவித கண்கவர் யுக்திகளை சிறப்பு நாட்களில் கூகிள் டூடிள்ஸ் (Google Doodles) என வெளியிட்டும் வருவதும் யாருமறிந்ததே.

மூலதனமும் பங்குச் சந்தையும்

முதலாவது முதலீடாக ஒரு இலட்சம் டொலர்களை சன் மைக்கிரோசிஸ்டம்ஸ் (Sun Microsystems) இன் ஸ்தாபகர்களில் ஒருவர் மூலம் மட்டுமே பெற்றனர் என்பதுடன், அப்போது கூகிள் நிறுவனம் தோன்றி இருக்கவுமில்லை. இந்த முதலீட்டின் பின் 6 மாதங்கள் சென்ற நேரத்தில் பல முதலீட்டாளர்கள் முதலிட முன் வந்தும் இருந்தனர். அத்துடன், 2003ம் ஒக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கூகிளை எடுத்துச்செல்ல ஆலோசிக்கும் வேளை மைக்கிரோசொஃப்ட் (Microsoft) புகுந்து பங்காளியாக அல்லது தத்து எடுப்பதற்கு எடுத்த முயற்சி கைகூடாமற் போயிற்று. ஜனவரி 2004இல் உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான மோர்கன் ஸ்ரான்லி (Morgan stanley), கோல்மான் சாச்ஸ் (Goldman Sachs) இனால் பங்குச் சந்தையில் சேர்வதற்கான ஏற்பாடு தொடங்கபட்டது. பங்குச் சந்தையில் முதல்நாள் சேரும் வேளை $4 பில்லியங்களாவது திரட்டப்படும் எனவும் கணக்கிட்டனர்.
இதனிடையே கூகிளானது 2004ம் மேமாதம் இரு பெரிய முதலீட்டளர் வங்கியில் ஒன்றான கோல்மானை வெட்டி விட்டு வேறொரு பிரபல்யமான வங்கியை இணைத்துக் கொண்டு 2004ம் ஆகஸ்டு 19ம் நாள் முதல் முதலாக பங்குச் சந்தைக்கு 19,605,052 பங்குகளுடன் வந்தபோது ஒவ்வொரு பங்கும் $85க்கு விற்கப்பட்டது. முதல் நாள் மொத்தமாக கைமறிய பங்குகள் 22,351,900 என்பதுடன் அன்றைய இறுதி நேர விலை $100.34 ஆக மூடப்பட்டது, இது உத்தேசிக்கப்பட்ட அளவு தொகையை விடவும் மிக குறைவாகவும் இருந்தது. எனினும் அன்று கூகிளின் இரட்டையர்கள் தம்வசம் 271 மிலியன் பங்குகளை வைத்திருந்ததன் மூலமாக $23 பிலியன்கள் மேல் நிறுவனத்தை மதிப்பு ஏற்றியதோடு $1.67 பில்லியன்களை பணமாக திரட்டியும் கொண்டனர். அத்தோடு கூகிளில் பணியாற்றும் பலரையும் அன்று திடீர் கடதாசி டொலர் மில்லியனர்கள் ஆக்கியதும் அல்லாமல் வியாபார எதிரியாக இருக்கக் கூடிய யாகூ! (8.4 மில்லியன் பங்குகளை நட்டஈடாக பெற்றுக் கொள்ள ஒரு பேரத்தில் பங்குச் சந்தையின் 10 நாள் முன் உடன் பட்டன). ஐயும் ஆக்கியிருந்தது. இதன் அபார தொடர் வளர்ச்சியில் 2005ம் யூன் மாதம் கூகிள் நிறுவனம் $52பில்லியன்கள்(பங்குகள் தவிர $7பில்லியன்கள் பணமாக) மேல் மதிப்பானதுடன் இதுவே உலகின் மிகப்பெரிய பெறுமதியுள ஊடகவியல் நிறுவனம் ஆயிற்று. தொடற்சியாக பங்குகள் ஏற்ற இறக்கம் கண்டு 2007ம் ஒக்டோபரில் ஒரு பங்கு $700 ஆக இருந்த கூகிளின் பங்குகள் அமெரிக்கா, லண்டன் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்டுள்ளது.

சுவீகரிப்பு, கூட்டுக்கள்

கூகிள் பெப்ரவரி 2003இல் வெப்லொக் (weblog) இன் முன்னோடியும் புளொக்கர்(Blogger) இன் சொந்தக்காரரான பைரா லாப்ஸ் (Pyra Labs)ஐ சொந்தமாக்கிற்று. உலக இணையத் தளத்தின் 84.7 விகிதமான தேடுதல்களை 2004ம் முற் பகுதியில் கூகிள் நிறுவனமானது யாகூ, ஏ.ஓ.எல் (AOL), சி.என்.என் (CNN) ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செய்திருந்தது, பின்பு 2004ம் பெப்ரவரி இல் யாகூ விலகிக் கொண்டு தனது சொந்த தேடுபொறியை தொடங்கிற்று. யாகூ விலகிக் கொண்ட விடயம் கூகிள் நிறுவனம் சந்தித்த ஒரு பெரிய சவாலாக இருந்த போதிலும் ஜீமெயில்( Gmail), ஓர்க்குற்(orkut), மற்றும் புதிய பல யுக்திகள் மூலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
அத்துடன் கூகிள் நிறுவனம் தனது நீண்டகால ஆராய்ச்சிக்கான நாசா (NASA) இன் கூட்டு 2005ம் செப்டம்பரிலும், இணையத்திற்கான கூட்டு "ஏ.ஓ.எல்" (AOL)லுடன் டிசம்பர்இலும் உருவாக்கிக் கொண்டது. மேலும், சன்மைக்கிரோ (Sun Microsystems) உடன் தொழில் நுட்ப்பத்தை பகிர்ந்து கொள்வதோடு, கூகிள் நிறுவனம் தனது ஊளியர்களை ஓப்பிண் ஆபிஸ்(OpenOffice.org) நிறுவன வேலைகளிலும் வாடகைக்கு அமர்த்தி உள்ளது. இதனிடையே 2004கும் 2006ம் வருட இறுதிக்கும் உள்ள காலகட்டத்தில் பல மென்பொருள் முன்மாதிரி நிறுவனங்களையும் வானோலி விளம்பர நிறுவனம் டிமார்க்(dMarc)ஐ தம் வசமாக்கிக் கொண்டதுடன் $900 விளம்பர உடன்பாட்டை மைஸ்பேஸ் (MySpace) உடன் செய்தனர். கூடவே, 2006இன் இறுதி காலத்தில் யூ டியூப் (YouTube) என்ற மிகவும் பெயர் பெற்ற இணையத்தள வீடியோ $1.65 பில்லியனிற்கு கூகிளினால் கொள்முதலானது, இத்துடன் விக்கி தொழில் நுட்பத்தை வடிவமைத்த ஜொட்ஸ்பொட் (JotSpot)ம் சொந்தமாக்கப்பட்டது.
இத்துடன் நிற்காமல் 2007ம் ஏப்ரலில் $3.1பில்லியன் கொடுத்து டபள் கிளிக் (DoubleClick)ஐ கொள்முதல் செய்ததோடு 2007ம் யூலை 9இல் பொஸ்டினி (Postini)யும் கொள்முதல் செய்து கொண்டது. இத்தனைக்கும் மத்தியில் தனது பரம எதிரியான மைக்கிரோசொப்ற் (Microsoft) இன் பல திறமை உள்ளவர்களையும் தம்வசம் ஈர்த்ததுடன் அந் நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் வெளியே இரகசியமாக 2005 டிசம்பர் 22இல் தீர்த்தும் கொண்டது. கூகிள் நிறுவனம் 2006ல் ".மோபி" (.mobi) எனப்படும் கைத்தொலைபேசி இணைய முகவரி தோற்றத்திற்கு காரண கர்த்தாவாகவும், முதலீடு இட்ட நிறுவனமாகவும் முன்நிலை படுத்தியதோடு ஸீங்கு.மோபி (Zingku.mobi), கூகிள்.மோபி (Google.mobi)இன் சொந்தக் காரருமாகவும் கூகிள் உள்ளது.

நன்கொடை

2004ல் இலாபம் ஈட்டாத "கூகிள்.ஓர்க்" (Google.org) ஐ நிறுவியதோடு ஆரம்ப நிதியாக $1பிலியன் வைப்பு செய்யப்பட்டது. இந் நிறுவனத்தின் முன்நிலை கவனிப்புக்களாக சூழல் வெப்பமாகுதல் தடுத்தல்,உலக சுகாதாரம்,உலக வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப் பட்டுள்ளது. அத்துடன் இந்த அமைப்பின் முதல் திட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகனங்களை வடிவமைக்கும் திட்டம் டாக்டர்.லாரி (Dr.Larry) தலைமையில் தொடங்கப் பட்டுள்ளது.

Friday, September 3, 2010

வருங்காலத் தொழில்நுட்பம் (2)

அலைபேசித் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்தபடி இருந்தாலும், குறிப்பிட்ட
இடங்களில் சுவரில் இணைக்கப்பட்ட தொலைபேசியின் வசதியை மறுக்க முடியாது. இதைக் கருத்தில்கொண்டு கூகுள் தனது 'கூகுள் வாய்ஸ்' (http://voice.google.com) தொழில்நுட்பத்தின் பலத்தில், பொது தொலைபேசி பூத்களை நிறுவத் தொடங்கி இருப்பது இந்த வாரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இணைய இண்டஸ்ட்ரி நிகழ்வு. இந்தத் தொலைபேசி சேவை இலவசம் என்பது அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டி யது. ஜி-மெயில் போன்ற பல சேவைகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் இந்த வாய்ஸ் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும்போது, அவர்கள் கூகுளையும் தொடர்ந்து பயன்படுத்தக்கூடும் என்பதால், அவர்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதன் மூலம் தனது வருமானத்தை அதிகரிக்கலாம் என்பது கூகுளின் திட்டம்.
சற்று ஆழமாக இதைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கிறது. சில வருடங்கள் முன்பு வரை இணையத்தில் இணைக்க தரை வழித் தொலைபேசி (landline) இணைப்பு தேவைப்பட்டது. இப்போது தொலைபேசுவதற்கு இணையம் தேவைப்படுகிறது.
இந்த வார ஃபேஸ்புக் உலகின் முக்கிய நிகழ்வு... Places http://www.facebook.com/places/. ஃபேஸ்புக் பயனீட்டாளராக இருந்தால், இதுவரை நீங்கள் யார், எப்போது, என்ன செய்கிறீர்கள் என்பதை மட்டுமே உங்கள் நட்பு வட்டத் தில் தெரிவித்தபடி வந்திருக்கிறீர்கள். இப்போது 'எங்கே' என்பதையும் இதில் சேர்த்துக்கொள்ள முடியும். இதன் சாதக, பாதகங்களைப் பார்க்கும் முன்னால், சமூக வலைதளங்களில் இருக்கும் Tagging என்ற பழக்கத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
மனிதன் ஒரு சமூக மிருகமே (Man is a social animal) என்பது பிரபல சொலவடை. தனித் தீவுகளாக மனிதர்களால் வாழ முடியாது. அதே நேரம், மற்றவர்களுடன் குழுவாக வாழும்போதும், தனக்கான எல்லைகளை வகுத்துக்கொண்டாலும், குழுக்களுடன் தகவலைப் பரிமாறிக்கொள்வது அவசியமான பழக்கம். தெரு நாய்கள் தங்களது எல்லைகளைத் தங்களது 'நம்பர் ஒன்'னைப் பயன் படுத்திக் குறியிட்டு வைத்துக்கொண்டாலும், இரவில் ஒரு நாய் ஊளையிட்டால், அருகில் இருக்கும் பக்கத்துத் தெரு நாய் உறவினர்களும் சேர்ந்து ஊளையிடுவ தைப் பார்த்திருப்பீர்கள். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் கிட்டத்தட்ட இதுதான் நடக் கிறது.
500 மில்லியன்களுக்கும் அதிகமான பயனீட்டாளர் களைக்கொண்ட ஃபேஸ்புக் தளத்தில் உங்களது எண்ணச் சிதறல்களின் விவரிப்புகளைச் சுருக்க மாகவோ, மிக விரிவாகவோ பகிர்ந்துகொள்ள முடியும். அதுபோலவே, புகைப்படங்கள், வீடியோக் கள் போன்றவற்றையும் பகிரலாம். ஆனால், நீங்கள் உங்களுக்கான பக்கத்தில் இவற்றைக் கொடுத்துக்கொண்டே வருவது, உங்களது டைரியை வீட்டுக்கு வெளியே தினமும் வைத்துவிட்டுச் செல்வதுபோல. யாராவது வந்து அதைத் திறந்து படிக்கலாம்; படித்து தனது கருத்துக்களை எழுதிவைக்கலாம்; படிக்காமலேயும் போகலாம்.
உங்களது தகவல்கள் நிச்சயம் மற்றவர்களுக்குத் தெரிந்தாக வேண்டும். அவர்களது பின்னூட்டங்கள் உங்களுக்குத் தேவை என்றால் என்ன செய்வீர்கள்? குறிப்பிட்ட நபர்களுக்கு உங்களது தகவல்களை அனுப்பிவைப்பீர்கள். அது அவர்களுக்குப் பிடித்த தாக இருந்தால், அதற்குப் பின்னூட்டம் கொடுப்ப துடன், அவர்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு உங்களது தகவல்களை அனுப்பவும் செய்யலாம். சமூக வலை தளங்களில் இதைச் செய்வதற்குப் பெயர் Tagging.
சரி, இதுவரை தகவல்களைப் பரிமாற்றம் மட்டுமே செய்ய முடிந்த சமூக வலைதளங்கள் இப்போது நீங்கள் புவிப் பந்தில் எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டு கின்றன. இதற்கு ஒரு முக்கியக் காரணம், உள்ளூர்/ லோக்கல் வியாபாரங்களின் விளம்பர வருமானம். இப்போதைய இணைய தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, நீங்கள் இணையத்தில் இணைக் கப்பட்டு இருக்கும்போது, நீங்கள் எங்கே இருக்கி றீர்கள் என்பதைத் தோராயமாக மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உதாரணத்துக்கு, விகடன்.காம் வாசகர் முகிலன் தனது சென்னை அலுவலகத்தில் இருந்து ஃபேஸ்புக் தளம் சென்றால், ஃபேஸ்புக்குக்கு அவர் சென்னையில் இருந்து ப்ரவுசுகிறார் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால், தி.நகர் பத்மநாபன் சாலையில், மாயாண்டி மிலிட்டரி விலாஸில் நான்கு நண்பர்களுடன் மதிய உணவில் இருக்கிறார் என்பது முகிலன் சொன்னால் மட்டுமே சாத்தியம். அவரை எப்படியாவது இந்த விவரத்தைக் கொடுக்க வைத்துவிட்டால், அதே தெருவில் இருக்கும் மற்ற பிசினஸ்களின் விளம்பரங்களை அவருக்குக் காட்டி னால், அது மிகவும் வீரியமிக்கதாக இருக்கும் என்பது சமூக வலைதளங்களின், அதுவும் குறிப்பாக, ஃபேஸ்புக்கின் எண்ணம் + திட்டம்!
ஆனால், இதில்தான் சிக்கல் தொடங்குகிறது. தான் எங்கே இருக்கிறேன் என்பதைத் தெரிவிப்பதில் முகிலனுக்குப் பிரச்னை இல்லாது இருக்கலாம். ஆனால், அவர் தன்னுடன் இருப்பதாக Tagging செய்யும் அவரது நண்பருக்கு அதில் விருப்பம் இல்லையென்றால்?
உதாரணமாக, அவருடன் உணவருந்திய கபிலன் பணி முடிந்து மாலையில் வீட்டுக்குச் சென்று, மனைவி காலையில் கட்டிக் கொடுத்த தயிர்சாதத்தை தான் ரொம்பவும் விரும்பிச் சாப்பிட்டதாகப் புகழ்ந்துவைக்க, ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து விவரம் தெரிந்துவைத்திருக்கும் கபிலனின் மனைவி... இது எங்கே சென்று முடியும் என்று விளக்கத் தேவை இல்லை.
சுருக்கமாகச் சொன்னால், ஃபேஸ்புக் போன்ற தளங்களின் உள்ளூர் (Local)Privacy Settings- தொழில்நுட்பங்களின் பல கோணங்களைப் பார்த்துவிட்ட பின்னர் பயன்படுத்துவது சிறந்தது. நான் இப்போதைக்கு ல், இந்த வசதியைப் பயன்படுத்துவதில் விருப்பம் இல்லை எனக் குறித்து வைத்திருக்கிறேன். இந்தத் தொடரின் வாசர்களுக்கு எனது ஆலோசனையும் அதுதான்!

நன்றி : விகடன் . காம்

Thursday, September 2, 2010

விண்டோஸ்: தடயங்களை அழிக்க..



ஒரு சில சமயங்களில் நாம் பிறரது கணினியிலோ அல்லது பொதுக் கணினிகளிலோ பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில், அந்த குறிப்பிட்ட கணினிகளில் இணையத்தில் மெயில் அனுப்புவது, அல்லது முக்கியமான ஆன்லைன் பண வரிவர்த்தனை செய்து முடித்தப் பின்னர், நமக்கு பின்னர் அந்த கணினியை பயன்படுத்துபவர்கள், நமது இரகசியங்களை அல்லது நமது தனிப்பட்ட விபரங்களை அறியாமல் தடுக்க இந்த தடயங்களை அழிப்பது எப்படி? 
வழக்கமாக நாம் ஹிஸ்டரி க்ளின் செய்வது போன்றவற்றை செய்தாலும் கிளிப் போர்டு க்ளின் செய்வது போன்ற பல வகைகளில் நமது தடயங்களை அழிக்க CleanAfterMe என்ற இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் என்பதால், கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. இதனை நமது பென் ட்ரைவில் எடுத்துச் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 





இதனை தரவிறக்கி CleanAfterMe.exe என்ற கோப்பை ரன் செய்தால் போதுமானது, நீக்க வேண்டிய விபரங்களை திரையில் தேர்வு செய்து Clean Selected Items பட்டனை க்ளிக் செய்து உங்கள் தடயங்களை அந்த கணினியிலிருந்து நீக்கி விடலாம். 

இந்த மென்பொருள் கோப்புகளை அழிப்பதற்கு முன்பாக அவற்றில் Zero க்களை நிரப்பி விடுவதால் வேறு எந்த Undelete மென்பொருள் கருவியைக் கொண்டும் மறுபடி மீட்டெடுக்க இயலாது என்பது இதனுடைய சிறப்பம்சம்.

Wednesday, September 1, 2010

பூமராங் - ஜிமெயிலுக்கான சூப்பர் நீட்சி!

நீங்கள் முக்கிய வேலை நிமித்தமாக நாளையோ அல்லது மறுநாளோ அல்லது வருகின்ற எதோ ஒரு குறிப்பிட்ட நாளோ பிசியாகி விடுவீர்கள்,  உங்களால்  அந்த நாளில் இணையத்தில் பணிபுரிய இயலாது என வைத்துக் கொள்வோம். அந்த குறிப்பிட்ட நாளில் ஒரு நண்பருக்கு இமெயிலில் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும், அல்லது அலுவலக  நிமித்தமாக ஒரு  முக்கிய மின்னஞ்சலை அந்த குறிப்பிட்ட நாளில் அனுப்ப வேண்டும்.     
இதோ நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்களை schedule செய்ய  வந்து விட்டது பூமராங் பீட்டா! நெருப்புநரி மற்றும் கூகிள் க்ரோம் உலாவிக்கான நீட்சி! இது பீட்டா நிலையில் இருப்பதால் Invite Code மூலமாகவே இதனை தரவிறக்க முடியும். தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் Invite Code கேட்கும் பொழுது htg (சும்மா வச்சுக்கங்க..) என்ற Code ஐ கொடுத்து தரவிறக்கி கொள்ளுங்கள்.     


இது க்ரோம் மற்றும் நெருப்புநரி உலாவிகளுக்காக தனித்தனியாக தரப்பட்டுள்ளதால், உங்களிடமுள்ள உலாவிக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளுங்கள். 


இந்த நீட்சியை பதிந்து கொண்ட பிறகு ஒரு முறை உலாவியை மூடி பின் திறக்கவேண்டும். 


இனி உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து புதிய மின்னஞ்சலை உருவாக்கும் பொழுது, மேலே புதிதாக ஒரு பட்டன் வசதி Send Later (Boomerang) வந்திருப்பதை கவனிக்கலாம். 


இதிலுள்ள வசதிகளை பயன்படுத்தி, உருவாக்கும் மின்னஞ்சலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியும்.  அதுவரை அந்த மின்னஞ்சல் உங்கள் ஜிமெயில் சர்வரில் இருக்கும். 




அதே போல receive செய்வதற்கும் (மீண்டும் இன்பாக்ஸில் வரும்) ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை திறக்கும் பொழுது வலது மேல் புறம் வரும் Boomerang பட்டனை க்ளிக் செய்து schedule செய்து கொள்ளலாம். 




நன்றி : சூர்யா கண்ணன்