1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Wednesday, April 28, 2010

பைல்களைப் பிரித்தாலும் சேர்த்தாலும்






நம் அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பி.டி.எப். பைல்களை அடிக்கடி கையாள்கிறோம். படிப்பதற்கு பாண்ட் பைல் இல்லாமல் எந்த சிஸ்டத்திலும் படிக்கக் கூடிய வசதியை இவை தருகின்றன. அதே போல ஆடியோ மற்றும் வீடியோ பைல்களும் எந்த சிஸ்டத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த பைல்கள் மிகப் பெரிதாக இருக்கையில், இவற்றை அனுப்ப முயற்சிக்கையில், இந்த பைல்களை நாம் சுருக்க வேண்டியுள்ளது. பின் அவற்றை இணைக்கும் வழிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இந்த பைல்களில், குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோ பைல்களில், குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பிரித்தெடுக்க விரும்புகையில், பைல்களின் பகுதிகளைப் பிரிக்க தனித் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன. இந்த தேவையை மனதில் கொண்டு தேடுகையில் கிடைத்த சில தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
1. Gios PSM:  பி.டி.எப். பைல்களைப் பிரிப்பதற்கும் இணைப்பதற்குமான அருமையான ஒரு புரோகிராம் Gios PSM (GiosPdf Splitter and Merger) என்பது. பி.டி.எப். பைல்களைக் கையாள ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைக்கப்பட்ட புரோகிராம் இது. இது 145 கேபி அளவிலான சிறிய எக்ஸிகியூட்டபிள் பைல். போர்ட்டபிள் வகையாக இதனைப் பயன்படுத்தலாம். டாட் நெட் பிரேமில் செயல்படுகிறது. இந்த புரோகிராமினை இயக்கிவிட்டு, பி.டி.எப். பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் முறையில், இழுத்துச் சென்று இந்த புரோகிராமின் லிஸ்ட்டில் விட்டுவிடலாம். எத்தனை பி.டி.எப். பைல்களை வேண்டுமானாலும், மொத்தமாகப் பட்டியலிட்டு இணைத்து ஒரு பைலாக மாற்றலாம். குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் ஒவ்வொரு பைலிலும் தேர்ந்தெடுத்து இணைக்க விரும்பினாலும், இந்த புரோகிராம் அதற்கான வழிகளைத் தருகிறது. இந்த புரோகிராமைப் பயன்படுத்துவதில் இருக்கின்ற ஒரு சின்ன சிக்கலைச் சொல்லியே ஆக வேண்டும். சில நேரங்களில் பைல்களை இணைக்கையில் இது கிராஷ் ஆகிறது. ஆனால், இதனால் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட http://www.paologios.com/products/?type=bin  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
2. Split Files 1.6: உங்கள் நண்பருக்கு ஏதேனும் ஒரு பெரிய இ–புக் ஒன்றை அனுப்ப முயற்சிக்கிறீர்கள். நிச்சயம் அதனை மின் அஞ்சலில் அட்டாச் செய்து அனுப்புகையில், பிரச்னை எழும். பைல் அளவு பெரிதாக இருப்பதால், இணைக்க முடியாது. இந்த நேரத்தில், அதனைப் பிரித்து அனுப்ப உதவ, இந்த புரோகிராம் உதவும். இதனை http://www.softpedia.com /get/System/FileManagement/SplitFiles.shtml என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து இயக்கவும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் பிரிக்க விரும்பும் பைலை, அது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு இருக்கிறது என்று சுட்டிக் காட்ட வேண்டியதுதான். அடுத்து ஸ்பிளிட் (Split)  என்ற பட்டனைக் கிளிக் செய்தால், உடனே எந்த வகையில் பிரிக்க வேண்டும் என உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் வகைகளைக் கொடுத்த பின்னர், பைல் பிரிக்கப்படும். நீங்கள் பிரித்த பைல்களை இணைக்க வேண்டுமாயின் Combine என்ற பட்டனில் கிளிக் செய்து காரியத்தை முடிக்கலாம்.
3. Adolix Split and Merge PDF:  ஒரு பி.டி.எப். பைலை பிரிக்க வேண்டிய சூழ்நிலையும், ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை இணைக்க வேண்டிய சூழ்நிலையும் எப்போதும் நமக்கு ஏற்படும். இந்த இரண்டு பணிகளிலும் நமக்கு உதவுவது Adolix Split and Merge PDF என்ற பைலாகும். இதனை http://www.adolix. com/splitmergepdf/ / என்ற தளத்தில் பெறலாம். பெற்று டவுண்லோட் செய்து, பின் இன்ஸ்டால் செய்த பின், இந்த வேலைகளுக்கு நம்மை எளிதாக வழி நடத்திச் செல்லும் வகையில், இந்த புரோகிராமில் யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இந்த புரோகிராமின் உள்ளாக அமைக்கப்பட்டுள்ள மெனு, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் வேலை செய்கிறது. மிக எளிதாக பைல்களைத் தேர்ந்தெடுக்கவும், பிரிக்கவும், இணைக்கவும் வழி தருகிறது. இந்த பைல் அளவு 2.7 எம்.பி மட்டுமே.
4. HJ split:  இதனைப் பெற http://www.freebyte.com/hjsplit/#win 32  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இதனைப் பயன்படுத்தி 10 ஜிபி அளவில் உள்ள பைலையும் பிரிக்க முடியும் என இந்த தளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு போர்ட்டபிள் சாப்ட்வேர். எளிதாக சிடி, பென் டிரைவ்களில் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. ஆனால் பிரிக்கப்பட்ட பைல்களை இணைக்க, உங்கள் நண்பரிடமும் இந்த பைல் தேவைப்படும்.
5.GSplit: : இந்த புரோகிராமும் பைல்களைப் பிரிக்கவும் இணைக்கவும் பயன்படுகிறது. இணைக்கும் இடத்திலும் இந்த புரோகிராம் தேவைப்படும். இதனைப் பெற http://www.gdgsoft.com/gsplit/ / என்ற முகவரிக்குச் செல்லவும்.
6. .JR Split: http://www.spadixbd.com/ freetools/jsplit.htm என்ற தளத்தில் கிடைக்கும் JR Split என்ற பைலும் இந்த வகையில் சிறந்த ஒன்றாக உள்ளது.
7. MP3cut:  எம்பி3 பைல் பிரிக்கப் பல சாப்ட்வேர் தொகுப்புகள் இருந்தாலும், வேறு கம்ப்யூட்டர்களில் இருந்து அவற்றை இயக்க முடியாது. மேலும் அதே கம்ப்யூட்டரில் வேறு சாப்ட்வேர்களைப் பதியவும் முடியாது. இந்த சூழ்நிலையில் நமக்கு உதவ MP3 cut  உதவுகிறது. இயக்குவதற்கு எளிய புரோகிராம் இது. எந்தப் பிரச்னையும் இன்றி எம்பி3 பைல்களை, நம் தேவைக்கேற்றபடி பிரிக்க உதவுகிறது. இந்த (MP3Cut.net) தளத்திற்குச் சென்று நாம் பிரிக்க வேண்டிய பைலை அப்லோட் செய்திட வேண்டும். எந்த இடத்தில் பிரிக்க வேண்டும் என குறிக்க, ஸ்லைடர்கள் தரப்பட்டுள்ளன. இடது ஸ்லைடர் பிரிவு தொடங்கும் இடத்திலும் வலது ஸ்லைடர் பிரிவு முடியும் இடத்திலும் இருக்க வேண்டும். பிரிவுகளைக் குறித்த பின்னர் split and download   என்பதில் கிளிக் செய்திட வேண்டும். பைல் நீங்கள் குறிப்பிட்ட இடத்தை அடையாளம் வைத்துப் பிரித்து தனி பைலாக்கும். பின்னர் அந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும். இதிலேயே எம்பி 3 பைலை இயக்கவும் வசதி உள்ளது. இதன் மூலம் பிரிக்க வேண்டிய இடங்களைக் குறித்திட எளிதாக உள்ளது. இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த பாடலில் உள்ள, உங்களுக்குப் பிடித்த இசை/பாடல் உள்ள இடத்தைப் பிரித்து, மொபைல் போனில் ரிங் டோனாக அமைத்துக் கொள்ளலாம். இதனால் எந்த சாப்ட்வேர் தொகுப்பினையும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்திடாமல், பாடல் பைல்களைப் பிரிக்க முடிகிறது.

ஜிமெயிலில் எந்த பைலையும் அனுப்ப ...


ஜிமெயிலில் எந்த பைலையும் அனுப்ப


இமெயில் பயன்படுத்தும் அனைவரும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றினைத் தொடங்குவார்கள். பின் அதனையே தங்கள் மெயின் அக்கவுண்ட்டாக வைத்துக் கொள்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஜிமெயில் தரும் வரையறை இல்லாத டிஸ்க் இடம், வைரஸை அண்டவிடாத ஸ்கேனர், இமெயிலுடன் ஒட்டி வரும் பைல்களைக் கண்காணிக்கும் சாதனம் எனப் பல விஷயங்களைக் கூறலாம்.
நமக்கு வரும் இமெயிலுடன், அல்லது நாம் அனுப்பும் இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் பைல்களை, ஜிமெயில் தளத்தில் உள்ள ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனர் சோதனை செய்து, வைரஸ் எதுவும் இல்லை என்ற பின்னரே, நம்மை டவுண்லோட் செய்திட வழிவிடும். இதனாலேயே exe, dll, ocx, com or batபோன்ற துணைப்பெயர்கள் கொண்ட  பைல்களை ஜிமெயில் இணைக்க விடுவதில்லை. ஜிமெயிலை ஏமாற்றுவதாக நினைத்து, இந்த பைல்களை ஸிப் செய்து .zip, .tar, .tgz, .taz, .z, .gz  என்ற ஏதேனும் ஒரு பார்மட்டில் ஸிப் பைலாக அனுப்பினாலும், ஜிமெயில் கண்டு கொண்டு தடுத்துவிடும். (ஆனால் rar என்ற ஸிப் பைலுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறது ஜிமெயில்). ஆனால் இந்த தடை நமக்கு சில நேரம் எரிச்சலைத் தரும். எடுத்துக்காட்டாக நண்பர் ஒருவருக்கு Firefox Setup 1.5.exe 4.98 MB   என்ற பைலை அனுப்ப முயற்சித்தேன். ஜிமெயில் This is an executable file. For security reasons, Gmail does not allow you to send this type of file  என்ற எச்சரிக்கை செய்தியைத் தந்து அதனை அப்லோட் செய்திட மறுத்தது. இங்கு என்ன நடக்கிறது என்றால், ஜிமெயிலில் உள்ள வைரஸ் ஸ்கேனர் இந்த பைலை ஸ்கேன் செய்திடாமல், இதன் துணைப் பெயர் .exe என்பதால், தொடக்கத்திலேயே இணைப்பதற்கு எடுத்துக் கொள்ள மறுக்கிறது. யாஹூ தளம் சார்ந்த சர்வரிலும் இதே போன்ற ஸ்கேனர் உள்ளது. ஆனால் யாஹூ .exe பைல்களை ஏற்றுக் கொள்கிறது. யாஹூ மெயில் சைமாண்டெக் சாப்ட்வேர் தொகுப்பினை ஸ்கேன் செய்திடப் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் ஜிமெயில் எந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தி, ஸ்கேன் செய்கிறது என்று நமக்கு அறிவிக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், இத்தகைய பைல்களை அனுப்ப எந்த வழிகளைக் கையாளலாம் என்று பார்க்கலாம்.
முதலாவதாக, Rapidshare, Megaupload அல்லது Yousendit  போன்ற தளங்களைப் பயன்படுத்தி, அனுப்ப விரும்பும் பைல்களை அப்லோட் செய்திடலாம். பின்னர் இந்த தளம் வழங்கும் லிங்க்கினை, ஜிமெயில் மூலம் அதனை அனுப்புபவருக்குத் தெரிவித்துவிடலாம்.
இரண்டாவதாக பைலின் பெயரைச் சற்று மாற்றி, ஜிமெயில் ஸ்கேனரை முட்டாளாக்கலாம். எடுத்துக்காட்டாக,  AdobeReader.exe  என்ற பைலின் பெயரை AdobeReader.exe.removeme  என மாற்றி அமைத்து, நண்பருக்கு இந்த மாற்றம் குறித்து தெரிவிக்கலாம். அவர் இதனைப் பெற்ற பின்னர் பைலின் பெயரை மாற்றிப் பயன்படுத்தலாம்.
மூன்றாவதாக, நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட exe  பைல்களை அனுப்ப வேண்டும் என்றால், அவை அனைத்தும் ஸிப் செய்து பின்னர், அந்த ஸிப் பைலின் துணைப் பெயரை மாற்றி அனுப்பலாம்.
நான்காவதாக WinRAR  என்ற ஸிப் பைல் டூலைப் பயன்படுத்தி ஸிப் செய்து அனுப்பலாம். ஏனென்றால், ஜிமெயில் இதனை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முதலாவதாகச் சொல்லப்பட்டுள்ள வழி தான் சரியான வழி. மற்ற வழிகள் கூகுள் அமைப்பை ஏமாற்றுவதாகவே உள்ளன. இது கூகுள் அக்கவுண்ட் பெறுகையில் நாம் ஒத்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறுவதாகும்.