1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Sunday, November 7, 2010

அந்தரத்தில் ஊசலாடும் உயிர்களுக்கு வாழ்த்துக்கள் !

எமது இப்பொழுதைய ஒவ்வொரு அசைவுக்கும் முழுக் காரணகர்த்தா நாங்களல்ல. தாயின் கருவறையிலிருந்து வெளிவருவது முதற்கொண்டு மண்ணோடு அழிந்துபோகும் வரை ஒரு மனிதனால் தனித்து வாழ்வதென்பது எப்பொழுதும் சாத்தியப்படாத ஒன்றாகவே இருக்கிறது. தெரிந்த பராயம் வரும்வரை உடல் துடைத்து, உணவூட்டி, அரவணைத்துப் பார்த்துப் பார்த்து வளர்த்தும், பிறகும் எமக்கெனவே சேவைகள் செய்துவரும் உறவுகள் முதல், நாம் இப்பொழுது அணிந்திருக்கும் ஆடை, உண்ணும் உணவு, வசிக்க இருப்பிடம் மற்றும் எல்லாவற்றிற்கும் பிறரையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு ஒரு மனிதன் சார்ந்திருக்கும் அனைவருமே, அவனுக்கான உழைப்பாளர்கள்தானே? ஆகவே இன்றைய உழைப்பாளர் தினத்தில் நாம் நம்மைச் சூழவிருக்கும் அனைவரையும் நினைவு கூறி, உழைப்பாளர் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வோம். இன்றைய தினத்தில் மாத்திரமல்லாது அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும், எப்பொழுதும் தயக்கமின்றி செய்துகொடுப்போம்.

குளிரறைகளில் அமர்ந்துகொண்டு, எந்த வித உடல் களைப்புமின்றி, வேலையின் போது ஏற்படும் சிறு சிறு இடைஞ்சல்களுக்காக பெரிதும் சலித்துக் கொள்ளும் நாம், உழைப்பாளர்களெனும் பட்டியலின் கீழ் நேரடியாக உள்ளடக்கப்படக் கூடிய மனிதர்களைப் பார்த்திருக்கின்றோமா? நான் பார்த்திருக்கிறேன்.

மத்தியகிழக்கு நாடொன்றில் பணிபுரியப் போயிருந்த சமயம், பல மாடிக் கட்டிடம் ஒன்றின் உச்சியில் தொங்கிக் கொண்டு கண்ணாடி துடைக்கையில் தவறிக் கீழே விழுந்து அந்த இடத்திலேயே சிதைந்து இறந்து போன ஒரு நேபாள நாட்டுத் தொழிலாளியைப் பார்த்திருக்கிறேன். அடுத்த நாள் அவரது இடத்தில் இன்னுமொருவர் தொங்கிக் கொண்டிருந்தார்.


தினந்தோறும் காலைவேளைகளில் இது போன்ற கூலி வேலைகளுக்காக பாகிஸ்தானியர், ஆப்கானிஸ்தர்கள், நேபாளிகளெனப் பலரும் பல பிரதான தெருக்களில் கொடிய வெயிலில் வாடியபடி, தம்மை அழைத்துச் செல்பவர்களுக்காகக் காத்திருப்பதைக் காணலாம். வாழ்வதற்காக மனிதனுக்கு பணம் தேவையாக இருக்கிறது. அதனை நேர்மையாக ஈட்டும் இவர்களைப் பாராட்டலாம்.

பெருநகரங்களில் வானைத் தொடுமளவுக்கு எழும்பியிருக்கும் பிரமாண்டமான கட்டடங்களைப் பார்த்து வியந்தபடி கடந்துசெல்கிறோம். அந்த அழகு, அந்த பிரமாண்டம், அந்த நவீனத்துக்காக அந்தக் கட்டிடங்கள் எத்தனை உயிர்களைப் பலிகொண்டிருக்குமென ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அந்தக் கட்டட வடிவத்தை வடிவமைத்ததற்காக, நிர்மாணித்ததற்காக பல நிபுணர்கள் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொள்ளும் சமயத்தில், அவர்களது கனவுகள் சாத்தியப்படுவதற்காக மிக அபாயமான களத்தில் நின்று, மிகச் சிரமத்துக்கு மத்தியில் அவற்றைக் கட்டியெழுப்பியவர்களைப் பற்றி எப்பொழுதேனும் நினைவுகூறப்படுகின்றதா? இன்றைய படங்கள் அவர்களது சிரமங்களைச் சிறிதளவு தொட்டுக் காட்டுகின்றன. பாருங்கள்.






















பார்க்கும்போதே உடல் சிலிர்க்கிறதல்லவா? தாங்கள் அறிந்திராத பிற நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பப்படும் தமது பிள்ளைகள், சகோதரர்கள், துணைகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து என்ன பாடுபடுகிறார்களென நிறையப் பேர் அறிந்திருப்பதில்லை. இது போன்ற மிகக் கடினமான பணிகளெனத் தெரிந்திருந்தால் அனுப்பியிருக்கவும் மாட்டார்கள் அல்லவா?

சிந்திப்போம். அவர்களை கௌரவிப்போம்.

எனது இந்தப் பதிவை இது போன்ற எல்லா உழைப்பாளர்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் !

நன்றி  : rishansharif

Friday, September 24, 2010

சீனாவின் நவீன ஸ்ட்ரட்லிங் பஸ்

போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.

வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் வாகனங்களின் வசதி கருதியும் நவீன பயணிகள் பஸ் ஒன்றினை சீனா அடுத்த வருடமளவில் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டமிடவுள்ளது.

சீனாவின் தலைநகரான சனத்தொகை நெரிசல் மிக்க பீஜிங் நகரிலேயே இது பரீட்சிக்கப்படவுள்ளது.

மேற்படி பஸ்ஸின் கீழ்ப்பாகம் அகன்று விரிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு கீழாகவுள்ள இடைவெளியில் கார்கள் மற்றும் 1.55 முதல் 1.6 மீற்றர் வரை உயரம் கொண்ட வாகனங்கள் பயணிக்க முடியும்.

இது 'ஸ்ட்ரட்லிங் பஸ்' என அழைக்கப்படுகின்றது. 

இந்நவீன பஸ், கடந்த மே மாதம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச 'ஐ-டெக் எக்ஸ்போ' கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதற்கான விசேட உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. 

இதன் மேற்பாகத்தில் சுமார் 1200 முதல் 1400 பேர் வரை பயணிக்கலாம்.

மேலும் இதனுள் சூரிய ஒளி அதிகளவில் உட்புகுவதால் பயணிகள் தங்கள் மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தொன்று ஏற்படின் அதிலிருந்து தப்புவதற்காக விமானங்களில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படவுள்ளது.

பெரிய அளவிலான வாகனங்கள் இதன் கீழ் பகுதியினுள் நுழையாமல் தடுப்பதற்காக விசேட சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன. 

இது பாவனைக்கு வருமிடத்து, வீதி நெரிசல் பெருமளவில் குறையுமென சீன போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.


ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: இந்த நூற்றாண்டின் மத்தியில் முழுவதும் மறையும்..!!!


ஓசோனின்  தற்போதய நிலை

பிரபஞ்சத்தில் இருந்து வரும் பல்வேறு ஆபத்தான ஒளிக்கற்றைகளில் இருந்து, பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டையை, இயற்கை மெல்ல சரி செய்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில், ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை, முழுமையாக மூடப்பட்டு விடும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலையில், மனித குலத்தை மிரட்டும் மிகப் பெரிய விஷயமாக புவி வெப்பமாதல் உள்ளது. பூமி உருண்டையில், வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவுவதும், ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதும், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.புதிய நோய்கள், விவசாய உற்பத்தி பாதிப்பு, பருவ நிலை மாற்றம் என, பல பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புவி வெப்பம் அதிகரிப்பிற்கு மனித தவறுகளால், பூமியின் மேற்பரப்பில், போர்வை போல் போர்த்தப்பட்டுள்ள ஓசோன் படலத்தில், ஓட்டை விழுந்தது முக்கிய காரணம்,இதை பற்றி முந்தய பதிவில் பார்த்தோம் .

 சூரியனில் இருந்து வரும் புற ஊதா உள்ளிட்ட மனிதர்களை பாதிக்கும் கதிர்களை தடுத்து, வெப்பத்தை பூமிக்கு அனுப்பும் கேடயமாக இருப்பது ஓசோன் படலம். அதிகரித்து வரும் கார்பன் கழிவுகள் காரணமாக, பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூமிக்கு பாதுகாப்பு அளித்து வரும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது என்று, 1970ம் ஆண்டு கண்டறியப்பட்டது.அண்டார்டிக் கண்டத்தின் மேலே உள்ள பகுதில் இருக்கும் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை, சிறிது சிறிதாக பெரியதாகி வருவதாக, 1980 ஆண்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.ஓசோனில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக, புறஊதாக்கதிர்களால் மனிதர்களுக்கு தோலில் அழற்சி, கண்ணில் கேட்ராக்ட், தோல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்றும், தாவர வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, 1987ம் ஆண்டு 196 நாடுகள் மாண்ட்ரீல் நகரில் கூடி, ஓசோன் படலத்தின் ஓட்டை மேலும் பெரியதாகாமல் தடுப்பது எப்படி என்று ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர், ஓசோன் படலத்தை பாதுகாக்க 196 நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன.இந்நிலையில், நான்கு ஆண்டுகள் ஓசோன் குறித்து 300 விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதன் தொகுப்பை அளித்துள்ளனர். அதன்படி, கார்பன் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஓசோனை பாதிக்காத பொருட்களை பயன்படுத்துவதால், ஒவ்வொரு ஆண்டும் 10 ஜிகா டன் கார்பன் கழிவுகள் உருவாவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால், ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை பெரிதாவது தடைபட்டு, சுருங்கி வருகிறது. 1980ம் ஆண்டில் இருந்த நிலைக்கு, வரும் 2045 முதல் 2060ம் ஆண்டு காலகட்டத்தில் ஓசோன் படலத்தின் ஓட்டை அடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் துருவத்தில் ஏற்பட்டுள்ள ஓசோன் படலம் ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் அடைவு ஏற்பட முயற்சிப்பதும், பருவநிலை மாறுபடும் போது ஓட்டை அடைபடுவதில் தடை ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Thursday, September 23, 2010

பயனுள்ள இலவச வீடியோ கன்வெர்டர்

நாம் இணையத்தில் தரவிறக்கம் செய்தது, அல்லது நண்பர்கள் மூலமாக கிடைத்தது என பலத்தரப்பட்ட வீடியோ கோப்புகளை நமது கணினியில் வைத்திருப்போம். ஒரு சில சமயங்களில், இது போன்ற ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மற்றொரு கோப்பு வடிவிற்கு மாற்ற வேண்டிவரும் (மொபைல் போன்களுக்கும்.. வேறு சில பயன்பாட்டிற்கும்)
இது போன்ற பயன்பாட்டிற்கு நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது Any Video Converter எனும் இலவச மென்பொருள் கருவி. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.. ஓட்டு போட்டுட்டு தரவிறக்கி கொள்ளுங்கள்) 
இந்த மென்பொருள் கருவியில் நாம் பயன்படுத்தக் கூடிய கோப்பு வகைகள்:- 

Input formats: avi, asf, mov, rm, rmvb, flv, mkv, mpg, 3gp, m4v, vob, YouTube videos and more

Output formats: avi, mp4, wmv, swf, flv, mkv, MPEG-1 and MPEG-2, mpg (PAL or NTSC), mp3, wma, ogg, aac, wave, m4a

இதை உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, Spyware Terminator ஐ நிறுவ வேண்டுமா என்று கேட்கும் திரை வரும் பொழுது, Do not install Spyware Terminator தேர்வு செய்து, உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். 
இதனை இயக்கி, Add Video பொத்தானை அழுத்தி தேவையான வீடியோவை உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 
பிறகு வலது புறமுள்ள Profile லிஸ்டில் க்ளிக் செய்து தேவையான கோப்பு வடிவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Preview வலது புற பேனில் தோன்றும், இதை பார்த்து, சரியாக உள்ளதெனில், மேலே உள்ள Convert  பொத்தானை அழுத்தினால் போதுமானது. 
நாம் தேர்வு செய்திருந்த கோப்பு வடிவிற்கு கன்வெர்ட் செய்து சேமிக்கப்படும். இதிலுள்ள மாற்றொரு சிறப்பம்சம், யூ டியுப் வீடியோக்களை தரவிறக்கி கன்வெர்ட் செய்வதுதான். இதற்கு, மேலே உள்ள YouTube பொத்தானை அழுத்தி Youtube video விற்கான url ஐ கொடுத்து OK பட்டனை சொடுக்கவும். 
இப்பொழுது லிஸ்டில் வந்துள்ள YouTube video வை வலது க்ளிக் செய்து,
தரவிறக்கம் செய்து கொண்டு பிறகு, கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 
இதன் தரமும் வேகமும் மற்ற கருவிகளைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. 

கணனி சம்பந்தமான இலவச டுட்டோரியல் தளம்




சிறு வயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது.
எனவே அவரவருக்கு எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறதோ அதனை மட்டும் தேடிப் பிடித்து கற்றுக் கொள்கிறோம். இணைய தளம் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். டிஜிட்டல் போட்டோ எடுத்து அவற்றை கம்ப்யூட்டரில் இணைக்க முயற்சிக்கிறீர்கள். எடுத்த போட்டோக்களை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். இதற்கெல்லாம் உதவிக் குறிப்புகளை நாடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கென உள்ள இந்த தளம் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். 

இத்தகைய உதவியினை வளமாக நல்ல டுட்டோரியல் பாடங்களாகப் பதிந்து வைத்து இந்த இணையதளம் தருகிறது. இதன் முகவரிhttp://www.goodtutorials.com/ இந்த செய்தியை எழுதும் போது இந்த தளத்தில் 25,049 டுடோரியல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 பிரிவுகளாக இந்த வழிகாட்டும் தளங்கள் உள்ளன. அவை : CSS, Flash, HTML, Illustrator, Java, JavaScript, Maya, Photography, Photoshop, PHP, Ruby, Ruby on Rails and 3ds Max   என பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் புதியதாக பதியப்பட்ட 15 உதவித் தளங்களின் பட்டியல் காணப்படுகிறது. 

நான் பார்த்த போது போட்டோ ஷாப்பிற்கான இன்டர்பேஸ் குறித்த டுடோரியல் காணப்பட்டது. இதனைத் திறந்து பார்க்கையில் போட்டோ ஷாப் குறித்து பல செய்திகள் கிடைத்தன. இந்த உதவிக் கட்டுரைகளின் கீழாக மேலும் பல உதவி தரும் தளங்களுக்கான லிங்க்குகள் உள்ளன. அவற்றையும் கிளிக் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதன் கீழ் சில பிரிவுகளும் உண்டு. அவை: Rating, Clicks, Comments, Save, Share and Report இந்த தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். 

எந்த கட்டுரையை சேவ் செய்திட வேண்டுமென்றால் சேவ் டேபைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். அப்போது இன்னொரு லிங்க் தரப்பட்டு அங்கு சேவ் செய்யப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இந்த கட்டுரைகள் சேவ் செய்யப்பட்டு இருக்கும். உங்கள் அக்கவுண்ட்டை ஏற்படுத்த இந்த தளத்தில் பதிவு செய்வதும் எளிது. 

நிச்சயமாய் இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இன்றே இந்த தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம் உங்கள் பேவரிட் தளப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Tuesday, September 21, 2010

உலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு !!! குளோபல் பினான்ஸ் அறிவிப்பு!!!

அமெரிக்காவில் வெளிவரும்  என்கிற பத்திரிகை ‘உலகின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளின் பட்டியலை இன்று (செப்டம்பர் 20, 2010) வெளியிட்டது. ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி.யை பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உலகத்தின் முதல் பணக்கார நாடாக கத்தார் தேர்வாகி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமான வருமானம் இயற்கை எரிவாயு  மூலம் கத்தார் நாட்டிற்க்கு கிடைத்துள்ளது. அந்த நாடு ஒவ்வரு வருடமும் 77 மில்லியன் டன்  இயற்கை எரிவாயு உற்பத்தி செய்கிறது.

கத்தார் நாட்டின் ஜி.டி.பி மதிப்பு  90,149 டாலர்கள். பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த லக்செம்பெர்க்கை இந்த ஆண்டு கத்தார் தாண்டி உள்ளது.   79,411 டாலர்கள் மத்திபுள்ள லக்செம்பெர்க் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

அடுத்த மூன்றாவது இடத்தை நார்வேயும் (ஜி.டி.பி மதிப்பு  52,964 டாலர்கள்), நான்காம் இடத்தை சிங்கப்பூரும் (ஜி.டி.பி மதிப்பு  52,840 டாலர்கள்), ஐந்தாவது இடத்தை ப்ரூனேவும் (ஜி.டி.பி மதிப்பு  48,714 டாலர்கள்)பெற்றுள்ளது.  ஆறில் இருந்து பத்தாவது இடங்களை அமேரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்த், நெதர்லாந்த் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெற்றுள்ளது.

அரபு நாட்டை பொறுத்த வரையில் கத்தார் அருகில் எதுவுமே இல்லை. கத்தாரை அடுத்து குவைத் அரபு நாடு பட்டியலில் இருக்கிறது. குவைத் பதினான்காவது இடத்தில இருந்தும் அதன் ஜி.டி.பி மதிப்பு  38.984 டாலர்கள் என்பது கத்தார் மதிப்பிற்கு பாதி கூட இல்லை.

36,167 டாலர்கள் ஜி.டி.பி மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரகம் 18 வது  இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 128 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு  3,176 டாலர்கள்),  இலங்கை 113 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு  5,026 டாலர்கள்)


முதல் பத்து இடத்தை பிடித்த நாடுகளும் அதன் ஜி.டி.பி மதிப்புகளும்:
1    கத்தார்   90,149 டாலர்கள்
2    லக்செம்பெர்க்    79,411  டாலர்கள்
3    நார்வே    52,964    டாலர்கள்
4    சிங்கப்பூர்   52,840    டாலர்கள்
5    ப்ரூனே    48,714    டாலர்கள்
6    அமெரிககா    47,702    டாலர்கள்
7    ஹாங்காங்    44,840    டாலர்கள்
8    சுவிட்சர்லாந்து    43,903   டாலர்கள்
9    ஹாலந்து    40,601    டாலர்கள்
10    ஆஸ்த்ரேலியா    39,841    டாலர்கள்
 நன்றி : odagam.com

Saturday, September 18, 2010

Hard Disk கின் அழிந்த தகவல்களை மீட்டு எடுக்கும் எளிய மென்பொருட்கள்..

_______________
கணினி ஒரு திறமைவாய்ந்த கண்டுபிடிப்புதான். இருந்தாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் தகவல்களை இழக்க கூடியது. இன்றைய காலத்தில் கணினி இல்லாமல் மனிதன் வாழ்கை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பயன்பாடு அதிகம் ஆகிவிட்டது.

மனிதனுடைய வாழ்நாள் தகவல்கள் அனைத்தையும் கணினியில் சேமிக்கும் காலம் வெகுதூரம் இல்லை. இன்னிலையில் Hard Drive வில் சேமித்து வைக்கும் தகவல்கள், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இழக்க நேரிட்டால் என்னவாகும். கணினி உபயோகிக்கும் பலர் இந்த அனுபவத்தை அடைந்து இருப்பீர்கள்.

கணினி அனுபவம் உள்ளவர்கள் சிலர் பாதிக்க பட்ட அந்த Hard disk கை தகவல்களை மீட்டு எடுத்து கொடுக்கும் நிறுவனங்களில் கொடுத்து மீட்டு இருப்பீர்கள். தகவல்களை மீட்டு எடுக்கும் சில மென்பொருட்கள் உள்ளன. இவற்றை கொண்டு நீங்களே தகவல்களை எளிதாக மீட்டு எடுக்கலாம்.
கணினியில் இருந்து தகவல்கள் அழிந்து போவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எந்த வகையிலேனும் நீங்கள் இழந்து இருந்தால் பரவாயில்லை. இந்த மென்பொருட்களை கொண்டு 90 -100 % வரை மீட்டு எடுக்கலாம். மீட்டு எடுக்கும் தகவல்களை வேறு இடத்தில சேமிப்பது நல்லது தகவல்களை மீட்டு எடுக்கும் சில முன்னணி மென்பொருட்களை இங்கு உங்களுக்கு தெரிவிக்கிறேன்

Digital Rescue Premium 3.1 ————Digital Rescue Premium 3.1 box shot

Advanced Disk Recovery—————Advanced Disk Recovery box shot

Recover My Files—————------------Recover My Files 4.6 box shot

Data Recovery Wizard-—————----Data Recovery Wizard 5.0.1 box shot

Total Recall 1.1-—————---------------Total Recall 1.1 box shot

Handy Recovery 4-—————=====Handy Recovery 4 box shot

Disk Doctors Windows Data Recovery-—————Disk Doctors Windows Data Recovery 2.0.1 box shot

R-Studio 5.2———--------------------------R-Studio 5.2 box shot

Quick Recovery—————--------------Quick Recovery box shot

GetDataBack 4.01-—————-----------GetDataBack 4.01 box shot



மேலே உள்ள எதுவும் இலவச மென்பொருட்கள் இல்லை.
இவற்றில் எனக்கு பிடித்தது Recover My Files மென்பொருள். இனி Hard Disk கின் தகவல்களை இழந்தால் கவலை வேண்டாம்.
நன்றி : படங்கள் மற்றும் தகவல் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி