1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Friday, September 24, 2010

சீனாவின் நவீன ஸ்ட்ரட்லிங் பஸ்

போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.

வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் வாகனங்களின் வசதி கருதியும் நவீன பயணிகள் பஸ் ஒன்றினை சீனா அடுத்த வருடமளவில் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டமிடவுள்ளது.

சீனாவின் தலைநகரான சனத்தொகை நெரிசல் மிக்க பீஜிங் நகரிலேயே இது பரீட்சிக்கப்படவுள்ளது.

மேற்படி பஸ்ஸின் கீழ்ப்பாகம் அகன்று விரிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு கீழாகவுள்ள இடைவெளியில் கார்கள் மற்றும் 1.55 முதல் 1.6 மீற்றர் வரை உயரம் கொண்ட வாகனங்கள் பயணிக்க முடியும்.

இது 'ஸ்ட்ரட்லிங் பஸ்' என அழைக்கப்படுகின்றது. 

இந்நவீன பஸ், கடந்த மே மாதம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச 'ஐ-டெக் எக்ஸ்போ' கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதற்கான விசேட உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. 

இதன் மேற்பாகத்தில் சுமார் 1200 முதல் 1400 பேர் வரை பயணிக்கலாம்.

மேலும் இதனுள் சூரிய ஒளி அதிகளவில் உட்புகுவதால் பயணிகள் தங்கள் மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தொன்று ஏற்படின் அதிலிருந்து தப்புவதற்காக விமானங்களில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படவுள்ளது.

பெரிய அளவிலான வாகனங்கள் இதன் கீழ் பகுதியினுள் நுழையாமல் தடுப்பதற்காக விசேட சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன. 

இது பாவனைக்கு வருமிடத்து, வீதி நெரிசல் பெருமளவில் குறையுமென சீன போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.


ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: இந்த நூற்றாண்டின் மத்தியில் முழுவதும் மறையும்..!!!


ஓசோனின்  தற்போதய நிலை

பிரபஞ்சத்தில் இருந்து வரும் பல்வேறு ஆபத்தான ஒளிக்கற்றைகளில் இருந்து, பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டையை, இயற்கை மெல்ல சரி செய்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில், ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை, முழுமையாக மூடப்பட்டு விடும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலையில், மனித குலத்தை மிரட்டும் மிகப் பெரிய விஷயமாக புவி வெப்பமாதல் உள்ளது. பூமி உருண்டையில், வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவுவதும், ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதும், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.புதிய நோய்கள், விவசாய உற்பத்தி பாதிப்பு, பருவ நிலை மாற்றம் என, பல பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புவி வெப்பம் அதிகரிப்பிற்கு மனித தவறுகளால், பூமியின் மேற்பரப்பில், போர்வை போல் போர்த்தப்பட்டுள்ள ஓசோன் படலத்தில், ஓட்டை விழுந்தது முக்கிய காரணம்,இதை பற்றி முந்தய பதிவில் பார்த்தோம் .

 சூரியனில் இருந்து வரும் புற ஊதா உள்ளிட்ட மனிதர்களை பாதிக்கும் கதிர்களை தடுத்து, வெப்பத்தை பூமிக்கு அனுப்பும் கேடயமாக இருப்பது ஓசோன் படலம். அதிகரித்து வரும் கார்பன் கழிவுகள் காரணமாக, பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூமிக்கு பாதுகாப்பு அளித்து வரும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது என்று, 1970ம் ஆண்டு கண்டறியப்பட்டது.அண்டார்டிக் கண்டத்தின் மேலே உள்ள பகுதில் இருக்கும் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை, சிறிது சிறிதாக பெரியதாகி வருவதாக, 1980 ஆண்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.ஓசோனில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக, புறஊதாக்கதிர்களால் மனிதர்களுக்கு தோலில் அழற்சி, கண்ணில் கேட்ராக்ட், தோல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்றும், தாவர வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, 1987ம் ஆண்டு 196 நாடுகள் மாண்ட்ரீல் நகரில் கூடி, ஓசோன் படலத்தின் ஓட்டை மேலும் பெரியதாகாமல் தடுப்பது எப்படி என்று ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர், ஓசோன் படலத்தை பாதுகாக்க 196 நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன.இந்நிலையில், நான்கு ஆண்டுகள் ஓசோன் குறித்து 300 விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதன் தொகுப்பை அளித்துள்ளனர். அதன்படி, கார்பன் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஓசோனை பாதிக்காத பொருட்களை பயன்படுத்துவதால், ஒவ்வொரு ஆண்டும் 10 ஜிகா டன் கார்பன் கழிவுகள் உருவாவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால், ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை பெரிதாவது தடைபட்டு, சுருங்கி வருகிறது. 1980ம் ஆண்டில் இருந்த நிலைக்கு, வரும் 2045 முதல் 2060ம் ஆண்டு காலகட்டத்தில் ஓசோன் படலத்தின் ஓட்டை அடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் துருவத்தில் ஏற்பட்டுள்ள ஓசோன் படலம் ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் அடைவு ஏற்பட முயற்சிப்பதும், பருவநிலை மாறுபடும் போது ஓட்டை அடைபடுவதில் தடை ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Dinamalar