கூகுள் டாக் (gtalk)-ஐ வலைப்பூவில் இணைப்பது எப்படி?


  உங்கள் வலைப்பூவிற்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ள பின்னூட்டமிடுகிறார்கள். அதுபோல் உங்களுடன் நேரலையில் (online) உரையாட கூகுளில் ஒரு வசதியுள்ளது. இதன் மூலம் உங்கள் பார்வையாளர்கள் நீங்கள் இணையத்தில் இணைந்துள்ளீர்களா(online or offline), இல்லையா என்பதையும் அறியலாம். இந்தவசதியின் மூலம் பார்வையாளர்கள் ஜீமெயில் கணக்கு (gmail account) இல்லாமலும், ஜீடாக் மென்பொருள் நிறுவாமலும்(install) உங்களுடன் உரையாடலாம்.
இவ்வளவு வசதிகளுள்ள ஜீடாக்-ஐ நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.

     முதலில் இந்த சுட்டியை (LINK) சொடுக்கி உள்நுழையவும். அடுத்து தோன்றும் பக்கத்தில் உள்ள நிரலை (code) நகலெடுத்துக்கொள்ளவும் (copy).


 அதன்பின் ப்ளாகரின் உள் நுழையவும்.


 அதில் layout tab-ஐ சொடுக்கி, பின்பு Add Gadget-ல் Html/JavaScript-ஐ தேர்வு செய்து நாம் முன்பு நகலெடுத்துள்ள நிரலியை உள்ளிட்டு சேமிக்கவும். இவற்றை  படங்கள் வாயிலாக விளக்கமாக காண்போம்.




 




இப்பொழுது உங்கள் வலைப்பூவில் ஜீடாக் தெரிவதை காணலாம்.

மேலும்  Edit-ஐ சொடுக்கி Gtalk தோற்றத்தை மாற்றியமைக்கலாம்.
 

 இவ்வசதியை வலைப்பூவிற்கு மட்டுமின்றி இணையதளத்திலும் பயன்படுத்தலாம். இந்த ஜீடாக் வெட்ஜட் இலகுவாக இருப்பதால் உங்கள் வலைப்பூவின்/தளத்தின் இயங்கு வேகம் குறையாது.

Source : ulavublog

உங்கள் கணிணிக்கு அழகான Dock மெனு

நமது கணிணியில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்கள்,போல்டர்ஸ் போன்றவற்றிற்கு விரைவில் பயன்படுத்த ShortCut வைத்திருப்போம். அதற்க்கு பதிலாக கீழே உள்ளது போல் அழகான மெனுவாக வைத்து கொள்ளலாம்.



இந்த மெனு செயல்படும் விதம பற்றிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.



உங்களுக்கு தேவையான மென்பொருள்கள்,அப்ளிகேசன்ஸ் போன்றவற்றை இதில் சேர்த்து கொள்ளலாம்.சேர்ப்பதற்கு Drag & Drop முறையில் எளிதாக சேர்த்து கொள்ளலாம். மேலும் உங்களுக்கு பிடித்த முறையில் மெனு வடிவத்தை மாற்றி கொள்ளலாம்.



இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி


Source : Browse All